நமது இராமாயணம், மகாபாரதம் இதிகாசங்களில் எனக்கு ரொம்பவும் பிடித்தது மகாபாரதம். மகாபாரதத்தின் சில சுருக்க கதைகளை பல முறை பல பத்திரிகைகள்,கதை புத்தகங்கள், டிவி பட்டிமன்றங்கள், கோவில் நிகழ்ச்சிகள் என படித்தும் கேட்டும் அறிந்துள்ளேன். இதன் மூலமாக மகாபாரதத்தின் முழுமையை படிக்க ஆர்வம் ஏற்பட்டது.
திரு.ராஜாஜி அவர்கள் எழுதிய மகாபாரதம், திரு.பி.என் .பரசுராமன் அவர்கள் எழுதிய மகாபாரத கதைகள் மற்றும் பலர் எழுதிய புத்தகங்களை படித்தேன். ஆயினும் எனக்கு சில விபரங்கள் தெளிவடைய வைக்கவில்லை. அதற்கு பதிலாக குழப்பங்களையே தந்தது. இக்குழப்பங்களை நீக்க பலரிடம் கேட்ட பொழுது என்னை பலர் கிண்டல் செய்தனர். வயசானவங்க, சாமியாருங்க, தெரிஞ்சுக்க வேண்டியது உனக்கு எதுக்குப்பா? என என்னை திசை மாற்றினர். வேறு ஏதாவது வழியில் விளக்கம் கிடைக்குமா என்ற நேரத்தில் எனது நண்பர் திரு.திலீப் சந்தன் மூலமாக துக்ளக் ஆசிரியர் திரு.சோ அவர்கள் எழுதிய “மகாபாரதம் பேசுகிறது” என்ற இரு பாகம் கொண்ட புத்தகம் கிடைத்தது. அந்த புத்தகத்தினை படிக்க பல மாதங்களானது.
ஆனால் துக்ளக்ஆசிரியர் திரு.சோ அவர்கள் பல இடங்களில் தற்போதைய நிலவரங்களை,நிகழச்சிகளை மேற்கோள் காட்டி விளக்கி இருந்தார் . அவை தற்போது நடக்கின்ற காலநிகழ்வுகளை துல்லியமாக பல வருடங்களுக்கு முன்னேரே எழுதி இருந்தது என்னை ஆச்சிரியமுட்டியது. உதாரணமாக ஆட்சி அமைக்க கூட்டணி அமைப்பது, நட்பு கட்சி நண்பரே கூட்டணி மாறுவது, ஆட்சிக்காக எதிர் கட்சியினர் மீது பழி போடுவது, மாறுபட்ட கருத்து உடையவரே, தனது நலனுக்காக மாற்று கருத்தை ஏற்று கொள்வது, தம்முடைய பலவீனங்களை மறைக்க, மற்றவரின் பலவீனத்தை சுட்டி காட்டுவது என பல நிகழ்வுகளும் சொல்லப்பட்டு இருக்கிறது.அப்பா,அம்மா,அண்ணன்,அக்கா தங்கை, தம்பி,கணவன்,மனைவி நண்பன்,எதிரி,முதலாளி,வேலைக்காரன்,எப்பிடி இருக்க வேண்டும் என்பதற்கு விளக்கம், தர்மம் எது ?, சட்டம் எது ? என்பதற்கு விளக்கம். இன்னும் பல உள்ளன.எனவே இதன் சாரத்தினை தெரிந்து கொள்ள எனக்கு தெரிந்த வரையிலான நடையில் எழுதி உள்ளேன். என்னை மிகவும் கவர்ந்த விசயங்களை அப்படியே காப்பியடித்ததுப்போல் எழுதி உள்ளேன்.இதில் ஏதாவது குறைகளோ தவறுகளோ இருந்தால் திருத்தி கொள்ளவும் கடமைப்பட்டுள்ளேன்.
என்றும் அன்புடன்
கிளிக் செய்யவும்
0 கருத்துரைகள்:
Post a Comment