அர்க்கள ஸ்தோத்திரம்
(இடையூறுகள் நீங்கி சகலகாரியம் சித்தி)
ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ
துர்க்கா க்ஷமா சிவாதாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே
ஜயத்வம் தேவி சாமுண்டே ஜய பூதார்த்தி ஹாரிணி
ஜயஸர்வகதே தேவி காளராத்ரி நமோஸ்துதே
மதுகைடப வித்ராவி விதாத்ரூ வரதே நம:
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோ ஜஹி
மஹிஷாஸுர நிர்ணாச விதாத்ரி வரதே நம:
ரக்தபீஜவதே தேவி சண்டமுண்ட விநாசினீ
சும்பஸ்யைவ நிசும்பஸ்ய தூம்ராக்ஷஸ்யச மர்தினி
வந்திதாங்க்ரியுகே தேவி ஸர்வ ஸௌபாக்யதாயினி
அசிந்த்ய ரூபசரிதே ஸர்வ சத்ரு விநாசினி
நதேப்யஸ் ஸர்வதா பக்த்யா சண்டிகே ப்ரணதாயமே
ஸ்துவத்ப்யோ பக்திபூர்வம்த்வாம் சண்டிகே வ்யாதிநாசினி
சண்டிகே ஸததம் யேத்வாம் அர்ச்சயந்தீஹ பக்தித:
தேஹி ஸௌபாக்கியம் ஆரோக்யம் தேஹிமே பரமம் ஸுகம்
விதேஹி த்விஷாதாம் நாசம் விதேஹி பலமுச்சகை
விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம்
ஸுராஸுர சிரோரத்ன நிக்ருஷ்ட சரணேம்பிகே
வித்யாவந்தம் யசஸ்வந்தம் லக்ஷ்மீவந்தம் ஜனம் குரு:
ப்ரசண்டதைத்ய தர்ப்பக்னே சண்டிகே ப்ரணதாயமே
சதுர்புஜே சதுர்வக்த்ர ஸம்ஸ்துதே பரமேஸ்வரி
க்ருஷ்ணேன ஸம்ஸ்துதே தேவி சச்வத்பக்த்யா ஸதாம்பிகே
ஹிமாசல ஸுதாநாத பூஜிதே பரமேஸ்வரி
இந்த்ராணீ பதிஸத்பாவ பூஜிதே பரமேஸ்வரி
தேவி ப்ரசண்ட தோர்த்தண்ட தைத்ய தர்ப்ப விநாசினி
தேவி பக்த ஜனோத்தாம தத்தானந்தோ தயேம்பிகே
பத்னீம் மனோரமாம் தேஹி மனோவ்ருத்தானு ஸாரிணீம்
தாரிணீம் துக்க ஸம்ஸார ஸாகரஸ்ய குலோத்பவாம்
இதம் ஸ்தோத்ரம் படித்வாது மஹாஸ்தோத்ரம் படேன்நர:
ஸது ஸப்த சதீ ஸங்க்யா வரமாப்னோதி ஸம்பதாம்
அர்களா ஸ்தோத்திரம் – சண்டிகாயை நம||
மார்கண்டேயர் சொன்னார் -
1. ஓம் ஜயந்தி மங்களா, காளி, பத்ரகாளி கபாலினீ, துர்கா,க்ஷமா,சிவா, தாத்ரி, ஸ்வாஹா, ஸ்வதா – உனக்கு நமஸ்காரம்.
2. காளராத்ரியான தேவி, எங்கும் நிறைந்தவள், உலகில் துன்பத்தை துடைப்பவள், என்று போற்றப்படும், சாமுண்டே ஜய, ஜய போற்றி போற்றி
3. மது கைடபர்களை அடக்கி, விதாதாவான ப்ரும்மாவுக்கு வரம் அளiத்தவளே, உனக்கு நமஸ்காரம். எங்களுக்கு
எப்பொழுதும்,
நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
4. மகிஷாசுரனை வதைத்து, பக்தர்களுக்கு சுகத்தை தந்தவள் நீ.
உனக்கு நமஸ்காரம். எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
5. ரக்தபீஜன் என்பவனை வதைத்தவளே, சண்டன், முண்டன் என்றவர்களையும் நாசம் செய்தவள், (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு
எப்பொழுதும்,
நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
6. சும்பன், நிசம்பன், துaம்ராக்ஷன் இவர்களை மர்தனம் செய்தவள். (உனக்கு நமஸ்காரம்)
எங்களுக்கு எப்பொழுதும், நல்ல
ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
7. அனவரதமும் மற்றவர்கள் தொழும் பாதங்கள், அவை சர்வ சௌபாக்ய தாயினி – எல்லாவித நன்மைகளையும் தரும் என்பது
நாம் அறிந்ததே -
அப்படிப்பட்ட (உனக்கு
நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
8. கற்பனைக்கு எட்டாத ரூபமும், சத்ருக்களை ஒடுக்கும் பராக்ரமும்
உடையவளே,
(உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு
எப்பொழுதும்,
நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
9. பக்தியுடன் வணங்குபவர்களுக்கு வரும்
துன்பத்தை நீக்குபவளே,(உனக்கு
நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
10. பக்தியோடு உன்னை வணங்குபவர்களுக்கு
வியாதி அண்டாமல் காப்பவளே, (உனக்கு
நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
11. சண்டிகே, இதோ இவர்கள் எப்பொழுதும் பக்தியுடன்
உன்னைஅர்ச்சனை செய்யும் இவர்fகளுக்கு,
12. சகல சௌபாக்யங்களையும், பரமான சுகத்தையும் தருவாயாக. (உனக்கு
நமஸ்காரம்)
எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
13. எங்கள் விரோதிகளால் துன்பம் இல்லாமல்
செய். நல்ல பலம் தந்து என்றும் காப்பாய். (உனக்கு நமஸ்காரம்)
எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
14. தேவி, எங்களுக்கு என்றும் மங்களங்களை அருள்வாய்.
சிறந்த செல்வத்தை அருள்வாய். (உனக்கு நமஸ்காரம்)
எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
15. சுரர்களும், அசுரர்களும் இடைவிடாது தொழும்
பாதங்களை உடையவளே, (உனக்கு
நமஸ்காரம்)
எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
16. என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும்
வித்யா சம்பன்னர்களாக, லக்ஷ்மி
சம்பன்னர்களாக இருக்கச் செய். (உனக்கு நமஸ்காரம்)
எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
17. மிகக் கொடிய தைத்யனின் கர்வத்தை அடக்கிய
தேவி, உன்னை வணங்கும் எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
18. நான்கு புஜங்களுடன், நான்கு முகங்களோடு இருக்கும் பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்)
எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
19. எப்போழுதும் பக்தியோடு, க்ருஷ்ணனால் துதிக்கப்பட்டவளே, (உனக்கு நமஸ்காரம்)
எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
20. ஹிமாசல நாதனுடைய மகள், அவள் நாதனான (சதாசிவனால்)
துதிக்கப்பட்டவளே, பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்)
எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
21. இந்த்ராணீ பதியினால் ஸத்பாவத்துடன்
துதிக்கப்பட்டவளே, பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்)
எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
22. தேவி, மிக பலசாலி என்று தோள் தட்டிய, தைத்யனையும் கர்வம் ஒழிந்து அடங்கச்
செய்தவள் நீ.
பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்)
எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
23. பக்த ஜனங்களுக்கு உயர்வையும்
ஆனந்தத்தையும் அளiப்பவளே, தேவி, பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்)
எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
24. எனக்கு மனைவியை கொடு. மனோரமாவாக, என் மனதை அனுசரித்து நடப்பவளாக, இந்த ஸம்ஸார சாகரத்தைக் கடக்க
என்னுடன் நடப்பவளாக, நல்ல
குலத்தில் தோன்றியவளாக இருக்கும் படி கொடு.
இந்த ஸ்தோத்திரத்தை படித்து
விட்டு, மகா ஸ்தோத்திரத்தை படிக்க வேண்டும். அப்படி படிக்கும் மனிதர்கள், சப்தசதீ என்ற இந்த துதியின் பலனை
அடைகிறார்கள்.
அளவில்லா செல்வங்களை
அடைகிறார்கள்.
(தேவியின் அர்களா ஸ்தோத்திரம்
நிறைவுற்றது)
-Arrowsankar
1 கருத்துரைகள்:
நன்றி.
Post a Comment