அடையாறு
புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் சாந்தாவுக்கு அவ்வையார் விருது
சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் சாந்தாவுக்கு, அவ்வையார் விருதை தமிழக அரசு வழங்குகிறது.
இந்த விருது பெறுபவருக்கு ஒரு லட்சம்
ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் சால்வை
ஆகியவை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
அதன்படி, சென்ற ஆண்டில் இருந்து அவ்வையார்
விருது வழங்கப்படுகிறது.
2013-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதுக்கு, புற்று நோய் மருத்துவத்துறையில் சிறந்த சேவையாற்றிவரும் சென்னை அடையாறில் உள்ள புற்று
நோய்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.சாந்தா
தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதினை, டாக்டர் வி.சாந்தாவுக்கு,
முதல்- அமைச்சர்
ஜெயலலிதா, இன்று (8-3-2013) சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கி கவுரவிப்பார். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
மருத்துவர் வி. சாந்தா (Dr. V. Shanta) அவர்களை பற்றி :-
இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு புற்றுநோய்
மருத்துவ
நிபுணர். இவர் சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகத்தின்
தலைவராகப் பணியாற்றுகிறார். அடையாறு புற்றுநோய்க் கழகத்தில் 1955 ஆம் ஆண்டில் பணியில் இணைந்த இவர், அதில் பல முக்கிய பதவிகளில் பணியாற்றினார். 1980 முதல் 1997 வரை அதன் இயக்குனராகப்
பணியாற்றியுள்ளார். உலக சுகாதார
அமைப்பில் சுகாதாரம் குறித்த
ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.
சென்னையில் மைலாப்பூரில் மார்ச் 11, 1927 ஆம் ஆண்டில் பிறந்தவர். சாந்தா பி.எஸ்.சிவசாமி
பெண்கள் உயர் பள்ளியில் கல்வி கற்ற இவர் 1949 இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம்
பெற்றார். 1955 இல் எம்.டி பட்டம்
பெற்றார்.
மருத்துவர் வி. சாந்தா அவர்கள் பெற்ற விருதுகள்
- மக்சேசே விருது (2005)
- பத்ம ஸ்ரீ
- நாயுடம்மா நினைவு விருது, 2010
அடையாறு
புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் சாந்தா அவர்களுக்கு எரோசங்கர்.ப்ளாக்ஸ்பாட்.இன்
சார்பாக வாழ்த்துக்கள்
Friday, March 08, 2013
Unknown





1 கருத்துரைகள்:
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Post a Comment