பங்குனி மாதம் புனர் பூச நட்சத்திரத்தில்,
கிருஷ்ண பட்ச நவமி திதியில்தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக
புராணங்கள் கூறுகின்றன.
மனிதன் உலகில் எப்படி வாழவேண்டும் என்பதை மக்களுடன் மக்களாக வாழ்ந்து வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம்.
தர்மம்காக்க அவதரித்த ராமன்
தர்மம் அழிந்து, அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் மண்ணுலகையும், மக்களையும் காக்க மகா விஷ்ணு அவதாம் எடுத்தார் என்கின்றன புராணங்கள். இவற்றில் ஏழாவதாக எடுத்த ராமஅவதாரம் மனித அவதாரமாக இருந்ததால் சிறப் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முந்தைய அவதாரங்களான மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், பரசுராமர் அவதாரம் ஆகியவை, நீர் வாழ்வனவாகவும், விலங்காகவும், விலங்கும், மனிதனும் இணைந்தும் காணப்படும்.
இந்த ராம அவதாரத்தில்தான் மனிதர்கள்படும் அனைத்து துன்பங்களையும் இறைவனும் அனுபவித்து அதன்மூலம் மக்களுக்கு பாடம் புகட்டியுள்ளார்.
ராமநவமி கொண்டாட்டம் அவதார நாயகன் உதித்தநாளை, ஸ்ரீராம நவமி விழாவாக ஆண்டுதோறும் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்துநாட்களை முன்பத்து எனவும்; பிறந்த தினத்திலிருந்து வரும் பத்துநாட்களைப் பின்பத்து எனவும் 20பது நாட்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இந்த நாட்களில் ஸ்ரீ ராமரை வழிபட்டு விரதம்மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற்பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு நீர்மோர், பானகம்,சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.
பானகம் , நீர்மோர் போன்றவை ஸ்ரீ ராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்தபோதும், கானகவாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர்மோரும் பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவையிரண்டும் ஸ்ரீராம பிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகவிழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜைசெய்து, பருப்பு, வடை, நீர்மோர், பானகம், பாயசம் நிவேதனம்செய்து வழிபடுவார்கள். ஸ்ரீ ராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயண புத்தகத்தையும் வைத்து பூஜிப்பார்கள். ராமநாமத்தின் மகிமை பகவானின் 1000 நாமங்களுக்கு இணையானது ராமநாமம். ஸ்ரீராம நவமியன்று ராம நாமம் சொல்வதும், ராம நாமம் எழுதுவதும் நற்பலனை தரும்.
பகவான் நாமம் இதயத்தை தூய்மைப்படுத்தி உலக ஆசைஎன்னும் தீயை அணைக்கிறது. இறைஞானத்தை தூண்டுகிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளை சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள்கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ராமநாமத்தை சொல்லி ராமநவமி கொண்டாடுவோம். தசரதமைந்தனின் அருள் பெறுவோம்.
ஆர்தானாமார்தி ஹந்தாரம் பீதானாம் பீதிநாசனம்
ஸந்நத்த: கவசீ கட்கீ சாப பாண தரோ யுவா
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருதஸராயச
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
அக்ரத: ப்ருஷ்டத: சைவ
|| இதி ஆபதுத்தாரண ஸ்ரீ ராம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||
ஸ்ரீ ராம ஸ்தோத்ரத்தின் பொருள்
ஸ்ரீ ராமன் கஷ்டங்களை விலக்குகின்றவர். சகல சம்பத்துக்களையும் கொடுப்பவர். அகில லோகங்களிலும் அழகன்; அப்படிப்பட்ட ராமரை அடிக்கடி வணங்குகிறேன்.
பீடையை அடைந்தவர்களின் பீடைகளையும், பயந்தவர்களின் பயத்தையும் நாசம் செய்பவர். சத்ருக்களை நாசம் செய்ய யமதண்டமாயிருப்பவர். அப்படிப்பட்ட ஸ்ரீ ராமச்சந்திரனை வணங்குகிறேன்;
யௌவனப் பருவத்திலுள்ளவர், லக்ஷ்மணனுடன் கூடியவர், கச்சையைத் தரித்தவர், கவசம் அணிந்தவர், ஸ்ரீ ராமர் கத்தி, வில், பாணம் இவற்றைத் தரித்தவர். இம்மாதிரிக் கோலத்தில் என் முன்னால் சென்று கொண்டே போய் எப்பொழுதும் என்னை என் மார்க்கத்தில் (வாழ்க்கையிலும் கூட) காப்பாற்ற வேண்டும்.
வில்லைக் கையில் தரித்தவர். நாண் கயிற்றால் தொடுக்கப்பட்ட பாணத்தை உடையவர். எல்லா அசுரர்களையும் வதம் செய்தவர்; கஷ்டங்களை விலக்குபவர். அப்பேர்ப்பட்ட ஸ்ரீ ராமருக்கு நமஸ்காரம்.
வஸிஷ்டர் முதலான ப்ரம்ஹத்தை அறிந்தவர்களால் ஸ்ரீ ராமர் என்றும், தசரதரால் ராமபத்திரர் என்றும், கௌஸல்யையினால் ராமசந்திரன் என்றும், ரிஷிகளால் ரகுநாதன் என்றும், சீதையினால் நாதன் என்றும், சீதையின் தோழிகளால் சீதாபதி என்றும் அழைக்கப்படுகிற உங்களுக்கு என் நமஸ்காரம்.
காது வரை இழுக்கப்பட்ட நாண் கயிற்றையுடைய வில்லைத் தரித்த வர்களாயிருந்து கொண்டு அதிகபலசாலிகளான ராம லக்ஷ்மணர்கள் என்னை ரக்ஷிக்க வேண்டும்.
8 கருத்துரைகள்:
மனிதன் மனித தன்மையுடன் வாழ வழி வகுத்த கடவுள், ராமனாய் வாழ்ந்து காட்டிய தத்துவ அவதாரம். ஸ்ரீ ராமர் . உங்களது பதிவு இன்றைக்கும் எப்பொழுதும் ஏற்றது. இப்பதிவிலேயே ஆபத்து தாரண ஸ்ரீ ராமர் ஸ்தோத்திரமும் பதிவிட்டது இன்னும் இனிமை.
-ஸ்ரீ பார்கவி
ஸ்ரீராமநவமி நல்வாழ்த்துக்கள் ஐயா...
சிறப்பு பகிர்வுக்கு நன்றி...
வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதையே வாழ்ந்து காட்டிய அவதாரம். இதை நீங்கள் எழுதியதோ வெகு அபாரம்.
-நல்லவரம் அன்பு ராஜன்
நன்றி
நீங்க எழுதும் எல்லாமே சூப்பர். அதிலும் ஆன்மீக விஷயங்கள் இன்னும் சூப்பர்.இந்த பதிவு இன்னும் சூப்பர்.ஸ்ரீ ராம நவமி வாழ்த்துக்கள். ஜெய் ராம் ஜெயஜெய ராம் ராம்
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசியில் ஒரு ஸ்லோகத்தில் "சங்கீர்த்ய நாராயணா சப்த மாத்ரம் விமுக்த துக்கா சுகினோ பவந்து" என்று வருகிறது. இதன் பொருள், அது பகவானின் நாமம் என்று தெரிந்து கூட சொல்ல வேண்டாம். நாரயணா என்ற சப்தமே நமது துயரங்களை போக்க வல்லது. எப்படி ஒரு குழந்தை தனது மழலை சொல்லால் கூறுவதை (அது தவறாக இருந்தாலும்) தாய் புரிந்து கொள்கிறாளோ, அது போல அவனது பெயரை நாம் தெரிந்து சொன்னாலும் தெரியாமலே சொன்னாலும் பகவான் அதை நாம சங்கீர்தனமாக ஏற்று கொண்டு நமக்கு அருள் செய்கிறார்.
"குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்"
நித்தியம் நாராயண நாமம் சொல்வோம்! நமது துன்பம் நீங்கி இன்பமும் வீடும் அடைவோம்!!
You have enriched our knowledge on the importance of Shri Rama Navami festival and also Lord Shri Rama. Thanks for this short write up.
உங்களது கருத்துரைகளை எனக்கு அனுப்பியதற்க்கும் மற்றும் உங்களது வருகைக்கும் நன்றி
Post a Comment