சர்வதேச யோகா தினம் 21.06.2015 அன்று உலகம் முழுவதும் சிறப்பாக
கொண்டாடப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பிரமாண்டமான யோகா
நிகழ்ச்சியில் 36 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் யோகா என்னும் அரிய கலையை உலகுக்கு
தந்த நாடு இந்தியா.
அந்த கலையை கவுரவிக்கும் வகையிலும், அது
குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தும் விதத்திலும் பிரதமர் நரேந்திர
மோடியின் வேண்டுகோளை ஏற்று, 177 நாடுகளின்
ஆதரவுடன், ஜூன் 21–ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை
கடந்த ஆண்டு டிசம்பர் 11–ந் தேதி அறிவித்தது.
அந்த வகையில் முதலாவது சர்வதேச யோகா தினம், நேற்று உலகமெங்கும் வெகு விமரிசையாக
கொண்டாடப்பட்டது.
பிரதமர் மோடி வாழ்த்து
முதலாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உலக
மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டார்.
அதில் அவர், ‘‘முதலாவது
சர்வதேச யோகா தினத்தையொட்டி உலக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
யோகாவை நமது அன்றாட வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்ற நாம் உறுதி மேற்கொள்வோம்’’ என குறிப்பிட்டிருந்தார்.
டெல்லியில் கொண்டாட்டம்
தலைநகர் டெல்லியில் ராஜபாதை, வழக்கமாக
குடியரசு தின கொண்டாட்டத்தில் களை கட்டும். நேற்று சர்வதேச யோகா தினத்தையொட்டியும், அது களைகட்டியது. ராஜபாதையே, யோகா பாதையாக மாறியது.
சர்வதேச யோகா தின கொண்டாட்டம், பயிற்சியில்
பங்கேற்பதற்காக நள்ளிரவில் இருந்தே அனைவரும் வந்து குவிய தொடங்கினர். பிரதமர்
நரேந்திர மோடி காலை 6.40
மணிக்கு அங்கு
வந்ததும் நிகழ்ச்சி தொடங்கியது. மேடையில் பிரதமர் நரேந்திர மோடியுடன், யோகா குரு பாபா ராம்தேவ், மத தலைவர்கள், யோகா ஆசிரியர்கள் அமர்ந்தனர்.
36 ஆயிரம்
பேர் பங்கேற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில், பிரதமர்
நரேந்திர மோடி சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
பிரதமர் திரு.மோடி அவர்கள் மாணவர்கள் மற்றும் யோகா பயிற்சி யாளர்களுடன் |
ராஜாபாதையில் யோகா செய்யும்போது |
அப்போது அவர் கூறியதாவது:–
இந்த ராஜபாதை, யோகா
பாதையாக மாறும் என யாரேனும் கற்பனை செய்தது உண்டா? நாம்
ஒரு (சிறப்பு) நாளை கொண்டாடவில்லை. அமைதியும், நல்லிணக்கமும்
கொண்ட ஒரு புதிய சகாப்தத்தை தொடங்குவதற்கு மனித மனங்களை பயிற்றுவிக்கிறோம்.
பெரும்பாலான மக்களுக்கு யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டும்தான்.
இது மிகப்பெரிய தவறு. அப்படியென்றால், சர்க்கஸ்களில்
வேலை செய்கிற குழந்தைகளை நாம் யோகிகள் என அழைக்க முடியும். எனவே யோகா என்பது உடலை
வளைப்பது மட்டுமல்ல.
ஐ.நா. சபைக்கு நன்றி
யோகா என்பது உடல் உறுப்புகளின் அசைவு மட்டுமல்ல. உடலும், மனமும், ஆன்மாவும்
முழுமையாக ஒன்றிணைகிற ஒரு நிலைதான் யோகா. யோகா, வாழ்வில்
ஒவ்வொரு நாளின் அங்கம்.
உலகின் எந்த பகுதியும் இன்றைக்கு யோகா இல்லாமல் இல்லை.
இந்த நாளை சர்வதேச யோகா தினமாக அறிவித்ததற்காக ஐ.நா. சபைக்கும், தீர்மானத்துக்கு ஆதரவாக நின்ற
நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இதயம்,
மனம், உடல், ஆன்மா
இணக்கமாக வேலை செய்ய வேண்டும்.
பதற்றமில்லா உலகம் காண யோகா வழிநடத்துகிறது. நல்லிணக்கத்தின்
செய்தியை அது பரப்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டி |
நடிகை ஷில்பா ஷெட்டி யோகாசனம் செய்து எல்லோரையும் கவர்ந்தார் |
நடிகை கரீனா கபூர் |
நடிகை லாரா தத்தா |
பாப் பாடகி மடோனா |
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் யோகாதினத்தைப் பற்றியும், பல ஆண்டுகளாக தான் மேற்கொண்டு வரும் யோகா பயிற்சி பற்றியும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்டாலின் தனது பதிவில், ஜூன் 21ம் தேதியை "சர்வதேச யோகா தினமாக" கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் 177 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது மனித குலத்தின் சிறந்த உடல்நலத்திற்கு வழி அமைத்துக் கொடுத்து, ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் பணியில் முக்கிய வெற்றியாகவே கருத வேண்டும்.
பிரான்ஸ்- ஈபில் டவர் அருகில் |
ஆப்கானிஸ்தானில் |
மலேஷியாவில் |
சவுத் கொரியாவில் |
தைவானில் |
சீனாவில் |
3 கருத்துரைகள்:
இதழ்களில் செய்தியைப் படித்தேன். தங்கள் பதிவுமூலமாக அதிகமான படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. யோகா நன்றே. அரசியல்வாதிகளால் அரசியலாகாமல் இருப்பது நலம். பகிர்வுக்கு நன்றி.
@Dr B Jambulingam மிக்க நன்றி ஜம்புலிங்கம் சார்
''...இந்த ராஜபாதை, யோகா பாதையாக மாறும் என யாரேனும் கற்பனை செய்தது உண்டா?..'' மிக அருமையான படங்களும் பதிவும் ஐயா.
சிறப்பு
மிக நன்றி.
Post a Comment