Thursday, December 14, 2017

முத்திரை - 3

முத்திரை - விளக்கம்

முத்திரைகளின் விளக்கம்( 36 முதல்  76 வரை)
36. நிவேதன முத்திரை : ஸமானன்வலது கையின் அனைத்து விரல்களையும் சேர்த்துப் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.
37. கணேச வந்தன முத்திரை : தந்தம் : வலக்கையின் நடுவிரலை மட்டும் மேலே நீட்டி, மற்றவற்றை மடக்கிப்பிடித்தல்.
38. கணேச வந்தன முத்திரை : பாசம் : இரு கை முட்டிகளையும் ஆள்காட்டி விரல்களின் நுனிகள் தொடுமாறு சேர்த்து, கட்டை விரல் நுனிகளும் அவற்றைச் சந்திக்கச் செய்தல்.
39. கணேச வந்தன முத்திரை : அங்குசம் : வலக்கை நடு விரல் நேராக நீட்டப்படும்; ஆள்காட்டி விரல் அதன் நடுப்பகுதி வரை வந்து முன் நோக்கி வளையும்.
40. கணேச வந்தன முத்திரை : விக்னம் : இறுகப்பிடித்த வலக்கை முட்டி கீழ் நோக்க, நடு விரல் மட்டும் நீட்டப்படுவது.
41. கணேச வந்தன முத்திரை : பரசு: உள்ளங்கைகளை ஒன்றை ஒன்று நோக்க, குறுக்கு வாட்டில் சேர்த்து, விரல்களை நீட்டுதல்.
42. கணேச வந்தன முத்திரை : லட்டுகம் : கையிலடங்கிய லட்டு அல்லது கொழுக்கட்டையைக் காண்பிப்பது போன்ற பாவனை.
43. கணேச வந்தன முத்திரை : பீஜாபூரம் : மாதுளம்பழம் போலக் கையைக் குவித்துப் பிடித்தல்.
44. சிவ வந்தன முத்திரை : லிங்கம் : உயர்த்திய வலது கட்டை விரலை முதலில் இடது கட்டை விரலால் பற்றிக் கொண்டு, பிறகு மற்ற இடக்கை விரல்களாலும் சுற்றிப் பிடித்து, இறுதியாக வலது கைவிரல்களால் இடக்கையை இறுகப் பிடித்து, இதயத்தின் அருகே பரிசுத்தமான மனத்துடன் வைத்துக் கொள்வது.
45. சிவ வந்தன முத்திரை : யோனி : மோதிர விரல்களுடன் சேர்த்து நீட்டிய நடு விரல்களின் மேல், கட்டை விரல்களை வைத்தல்.
46. சிவ வந்தன முத்திரை : திரிசூலம் : மடக்கிய வலக்கை சுண்டு விரலைக் கட்டை விரலால் அழுத்திக்கொண்டு, மற்ற மூன்று விரல்களை நீட்டிக் காண்பித்தல்.
47. சிவ வந்தன முத்திரை : அக்ஷமாலா : வளைந்த வலக்கை ஆள்காட்டி விரல் நுனியைக் கட்டை விரல் நுனி தொட, மற்ற மூன்று விரல்களை நீட்டிக் காண்பித்தல்.
48. சிவ வந்தன முத்திரை : வரம் : கீழ் நோக்கி மலர்ந்து நீண்ட வலது கை.
49. சிவ வந்தன முத்திரை : அபயம் : மேல் நோக்கி மலர்ந்து நீண்ட இடது கை.
50. சிவ வந்தன முத்திரை : ம்ருகீ : இரு கைகளின் கட்டை விரல், நடு விரல், மோதிர விரல்களை மடித்து நுனிகளைச் சேர்த்து , மற்ற விரல்களை நீட்டி, தலைக்கு மேல் பிடித்தல்.
51. சிவ வந்தன முத்திரை : கட்வாங்கம் : கையின் ஐந்த விரல்களையும் மேல் நோக்கிச் சேர்த்து, சற்று வளைத்துப் பிடித்தல்.
52. சிவ வந்தன முத்திரை : கபாலம் : இடது கையில் மண்டை ஓடு இருப்பது போல் பாவனை செய்து, அந்தக் கையை இடது பக்கமாக பிøக்ஷ கேட்பது போல் நீட்டுதல்.
53. சிவ வந்தன முத்திரை : டமருகம் : சற்றே விரிந்த வலக்கை முட்டியை, நடு விரலை மட்டும் சற்றுத் தூக்கிப் பிடித்து, காதிற்கு அருகே உடுக்கு அடிப்பது போல பாவனை செய்தல்.
54. பொதுவான முத்திரை : சாபம் (வில்) : உயர்த்திய வலக்கை நடுவிரல் நுனியை, ஆட்காட்டி விரல் நுனியைத் தொடுமாறு செய்தல்.
55. பொதுவான முத்திரை : சங்கம் : இடது கைக் கட்டை விரலை வலது முட்டியால் பற்றிக்கொண்டு, வலக்கை கட்டை விரலைச் சங்கு ஊதுவதுபோல் பாவனை செய்தல்.
56. பொதுவான முத்திரை : கட்கம் : வலது கட்டைவிரலால் சுண்டு விரலையும் மோதிர விரலையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு, மற்ற இரு (ஆள்காட்டி, நடு விரல்களையும் ஒன்றோடு ஒன்று சேராமல் நீட்டுதல், (ஆள்காட்டி, நடு) விரல்களைச் சேர்த்து வைத்து நீட்டுவதே கட்க முத்திரை என்றும் சேர்க்காமல் நீட்டுதல் கோவிடாண முத்திரை என்றும் கொள்வதுண்டு)
57. பொதுவான முத்திரை : சர்மம் (கேடயம்) : இடது கையைக் குறுக்காக நீட்டி விரல்களை மடக்குதல்.
58. பொதுவான முத்திரை : முஸலம் : இடது முட்டி மீது வலது முட்டியை வைத்தல்.
59. பொதுவான முத்திரை : வீணா : விணை வாசிப்பது போல் கைகளால் பாவனை செய்து தலையையும் அசைப்பது.
60. பொதுவான முத்திரை : புஸ்தகம் : கை முஷ்டியைத் தன்னை நோக்கிப் பிடிப்பது.
61. பொதுவான முத்திரை : கும்பம் : வலது இடது கட்டை விரல்கள் பக்க வாட்டில் உரசுமாறு இரு கை முட்டிகளையும் சேர்த்து நீட்டுதல்.
62. பொதுவான முத்திரை : ப்ரார்த்தனா : இரு கை விரல்களையும் விரித்துப் பக்க வாட்டில் தன்னை நோக்கிச் சேர்த்து இதயத்தில் வைத்துக் கொள்ளுதல்
63. பொதுவான முத்திரை : பசுமுத்திரை : சுண்டு விரல்களின் அடிப் பகுதியை கட்டை விரல் நுனிகளால் தொட்டுக்கொண்டு, இருகைகளையும் ஒன்று சேர்த்துக் குவித்து வணங்குவது. இது முத்தேவியருக்கும் மிகவும் உகந்தது.
64. நிரீக்ஷண முத்திரை : கட்டை விரல் மோதிர விரலை வளைத்துப் பிடிக்க மற்ற விரல்களை நீட்டுவது.
65. அப்யுக்ஷண முத்திரை : விரல்களை சேர்த்து நீட்டி, கட்டை விரலை அவற்றுடன் இணைத்து, கவிழ்த்துப் பிடிப்பது. இது சோத்திக முத்திரை, மற்றும் கவிழ்ந்த பதாகை எனவும் வழங்கப்பெறும்.
66. கோவிடான முத்திரை : ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணையாமல் நீட்டி, சுண்டு விரல் மோதிர விரல்களை மடக்கி இவற்றை கட்டை விரல்லால் அழுத்திப் பிடிப்பது.
67. சோடிகா முத்திரைவிரல்களை மடக்கி, ஆள்காட்டி விரலால் கட்டை விரல் மத்தியில் விரல் துடிக்கத் தெறிப்பது.
68. சாண முத்திரை : நடுவிரல்கள் மூன்றையும் இணைத்து, மற்ற விரல்களை விலக்கி நீட்டுவது.
69 மஹா முத்திரை : கைவிரல்கள் நீண்டிருப்பது.
70. ப்ரஸன்ன முத்திரை : இரண்டு கைகளையும் கூப்பி, இரண்டு கட்டை விரல்களையும் இணைத்து, அவற்றின் நுணிகள் மோதிர விரலின் அடியில் பொருந்த, உள்ளே மடக்குவது. இதை ஆவாஹன முத்திரை எனவும் கூறுவர்.
71. அதிஷ்டான முத்திரை : இரண்டு கைக் கட்டை விரல்களாலும் உள்ளங்கையைத் தொடுவது.
72. உஷ்ணீக முத்திரை : கட்டை விரல் நுணியை ஆள்காட்டி விரல் நுணியால் தொடுவது.
73. யோக முத்திரை : நடுவிரல் நுணியை பெருவிரல் நுணியால் தொடுவது. இதை மோக முத்திரை என்றும் கூறுவர்.
74. ஆக்ர முத்திரை : சுண்டுவிரல் நுணியை பெருவிரல் நுணியால் தொடுவது.
75. கடா முத்திரை : இரண்டு கைகளையும் இணைந்து, நடு விரல்கள் மூன்றினாலும் உள்ளங்கைகளைத் தொடுவது.
76. உஷ முத்திரை : ஒரு கை மோதிர விரலால் மற்றொரு கையில் உள்ளங்கையைத் தொடுவது.
ஆதாரம் : ஒன் இந்தியா நாளிதழ்


 Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms