வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Saturday, September 29, 2012

9 - க்கு திருவிழா


உலகம் முழுவதும் 6 என்ற எண்ணை யாருக்கும் பிடிப்பதில்லை. குறிப்பாக, பழமைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சீனாவில் இந்த எண்ணை யின் என்ற தீய சக்திகளின் உருவமாக கருதி தூற்றுகின்றனர். அதே நேரம், 9 என்ற எண்ணை தெய்வாம்சம் பொருந்திய யாங் என்ற எண்ணாக மதித்து கொண்டாடுகின்றனர். குறிப்பாக, ஆண்டின் 9ம் மாதமான செப்டம்பரில், 9ம் எண்ணைப் போற்றும் வகையில் சோங்யாங் என்ற திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். 

இந்த ஆண்டு 9ம் மாதத்தில் வரும் 9ம் தேதி இரட்டை அனுகூலம் என்பதால், இந்த நாளில் மக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர். இந்த நாளில், ஒன்பது அடுக்குகளாக தயாரிக்கப்பட்ட காவோ என்ற விசேஷ கேக்கை மக்கள் படையலிட்டு உண்பர். இந்த கேக், மகிழ்ச்சியையும் உடலுக்கு நல்ல சக்தியையும் அளிப்பதாக சீன மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இந்த திருவிழாவின் போது பூக்கும் ஒரு வகை பூக்களை பெண்கள் அனைவரும் தலையில் சூடிக் கொள்கின்றனர். மலர்ந்திருக்கும் அந்தப் பூவின் இலை, கிளைகளை தங்கள் வீட்டு ஜன்னல்களில் தொங்க விடுகின்றனர். இதன் மூலம், இடையூறுகள் ஏற்படுத்தும் தீய சக்திகள் தங்களை நெருங்காது என்பது அவர்களது நம்பிக்கை.

Chinese culture

  • Nine is strongly associated with the Chinese dragon, a symbol of magic and power. There are nine forms of the dragon, it is described in terms of nine attributes, and it has nine children. It has 117 scales - 81 yang (masculine, heavenly) and 36 yin(feminine, earthly). All three numbers are multiples of 9 (9x13=117, 9x9=81, 9x4=36)[2] as well adding up individually to 9 (1+1+7=9, 8+1=9, 3+6=9).
  • The dragon often symbolizes the Emperor, and the number nine can be found in many ornaments in the Forbidden City.
  • The circular altar platform (Earthly Mount) of the Temple of Heaven has one circular marble plate in the center, surrounded by a ring of nine plates, then by a ring of 18 plates, and so on, for a total of nine rings, with the outermost having 81=9×9 plates.
  • The nine-rank system was a civil service nomination system used during certain Chinese dynasties.


Wednesday, September 26, 2012

எனக்கு பிடித்த மகாபாரதம்


நமது இராமாயணம், மகாபாரதம் இதிகாசங்களில் எனக்கு ரொம்பவும் பிடித்தது மகாபாரதம். மகாபாரதத்தின் சில சுருக்க கதைகளை   பல முறை பல பத்திரிகைகள்,கதை புத்தகங்கள், டிவி பட்டிமன்றங்கள், கோவில் நிகழ்ச்சிகள் என படித்தும் கேட்டும் அறிந்துள்ளேன். இதன் மூலமாக  மகாபாரதத்தின் முழுமையை படிக்க ஆர்வம் ஏற்பட்டது. 
   
        திரு.ராஜாஜி அவர்கள் எழுதிய  மகாபாரதம், திரு.பி.என் .பரசுராமன் அவர்கள் எழுதிய  மகாபாரத கதைகள் மற்றும் பலர்   எழுதிய புத்தகங்களை படித்தேன். ஆயினும் எனக்கு சில விபரங்கள் தெளிவடைய வைக்கவில்லை. அதற்கு பதிலாக குழப்பங்களையே தந்தது. இக்குழப்பங்களை நீக்க பலரிடம் கேட்ட  பொழுது என்னை பலர் கிண்டல் செய்தனர். வயசானவங்க, சாமியாருங்க, தெரிஞ்சுக்க வேண்டியது உனக்கு எதுக்குப்பா? என என்னை திசை மாற்றினர்.  வேறு ஏதாவது வழியில் விளக்கம் கிடைக்குமா என்ற நேரத்தில் எனது நண்பர் திரு.திலீப் சந்தன் மூலமாக துக்ளக் ஆசிரியர் திரு.சோ  அவர்கள் எழுதிய “மகாபாரதம் பேசுகிறது” என்ற இரு பாகம் கொண்ட புத்தகம் கிடைத்தது. அந்த புத்தகத்தினை படிக்க பல மாதங்களானது.

ஆனால் துக்ளக்ஆசிரியர் திரு.சோ  அவர்கள் பல இடங்களில் தற்போதைய நிலவரங்களை,நிகழச்சிகளை மேற்கோள் காட்டி விளக்கி இருந்தார் . அவை தற்போது நடக்கின்ற காலநிகழ்வுகளை துல்லியமாக பல வருடங்களுக்கு முன்னேரே எழுதி இருந்தது என்னை ஆச்சிரியமுட்டியது. உதாரணமாக ஆட்சி அமைக்க கூட்டணி அமைப்பது, நட்பு கட்சி நண்பரே கூட்டணி மாறுவது, ஆட்சிக்காக  எதிர் கட்சியினர் மீது பழி போடுவது, மாறுபட்ட கருத்து உடையவரே, தனது நலனுக்காக மாற்று கருத்தை ஏற்று கொள்வது, தம்முடைய பலவீனங்களை மறைக்க, மற்றவரின் பலவீனத்தை சுட்டி காட்டுவது என பல நிகழ்வுகளும் சொல்லப்பட்டு இருக்கிறது.அப்பா,அம்மா,அண்ணன்,அக்கா தங்கை, தம்பி,கணவன்,மனைவி நண்பன்,எதிரி,முதலாளி,வேலைக்காரன்,எப்பிடி இருக்க வேண்டும் என்பதற்கு விளக்கம், தர்மம் எது ?, சட்டம் எது ? என்பதற்கு விளக்கம். இன்னும் பல உள்ளன.எனவே இதன் சாரத்தினை தெரிந்து கொள்ள எனக்கு தெரிந்த வரையிலான நடையில் எழுதி உள்ளேன். என்னை மிகவும் கவர்ந்த விசயங்களை அப்படியே காப்பியடித்ததுப்போல் எழுதி உள்ளேன்.இதில் ஏதாவது குறைகளோ தவறுகளோ இருந்தால் திருத்தி கொள்ளவும் கடமைப்பட்டுள்ளேன்.

என்றும் அன்புடன் 
-”வான்மிகீயூர்” L.L.சங்கர்





மஹா பாரதம்  படிக்க, டவுன்லோட் செய்ய

கிளிக் செய்யவும்




Tuesday, August 21, 2012

சென்னைக்கு இன்று 373 வது பிறந்த நாள்


22.08.2012 சென்னைக்கு இன்று 373 வது பிறந்த நாள் 
சென்னை வரலாறு



இந்தியாவில் தில்லி, மும்பை, கல்கத்தா நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம். தென் இந்தியாவின் நுழைவு வாயில். தமிழ்நாட்டின் தலைநகர். இந்தியாவின் சிறந்த துறைமுக நகரங்களில் ஒன்று. 2000 ஆண்டுகள் பழமையானது. சிறந்த கலை, கலாசார மற்றும் பண்பாட்டு மையமாக விளங்குகிறது. உலகின் இரண்டாவது நீண்ட, அழகிய கடற்கரை (மெரினா) உள்ள நகரம். இந்திய நகரங்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளுடனும் சிறந்த போக்குவரத்துத் தொடர்பு.


பரப்பளவு : 174 சதுர கிலோ மீட்டர்
மக்கள் தொகை : 70 லட்சம். 
உயரம் : கடல் மட்டம்
மழை அளவு : 1272 மி.மீட்டர் (ஆண்டு சராசரி). 
பேசப்படும் மொழிகள் : தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உருது, ஆங்கிலம்.


வரலாறு

சென்னை நகரம் தென் இந்தியாவின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ( சோழமண்டல கடற்கரை) ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி இந்த நகரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த பகுதியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த வெங்கடபதி சகோதரர்கள் இந்த பகுதியைத் தங்களுடைய தந்தையின் பெயரால் சென்னப்பட்டணம் என்று அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆரம்பத்தில் மதராஸ் பட்டணம், மதராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி தற்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்தியாவின் 4வது மெட்ரோபாலிடன் நகராக இது விளங்குகிறது.
தமிழ்நாட்டின் தலைநகரமாக திகழும் சென்னை, ஒரு மாவட்டமாகவும் இருக்கிறது. பல்வேறு மொழிகளைப் பேசும் நவீன காஸ்மோபாலிடன் நகராக சென்னை விளங்குகிறது. பரந்த மணற்பரப்புடன் கூடிய கடற்களை, பூங்காக்கள் மற்றும் பல்வேறு வரலாற்று சின்னங்களை உள்ளடக்கியதாக சென்னை விளங்குகிறது. சென்னை நகர மக்கள், இசை, நடனம் மற்றும் இதர தென் இந்திய கலைகளில் நாட்டம் உள்ளவர்கள்.
தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னையில் 2006ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6 கோடியே 96 லட்சமாக உள்ளது. திராவிட நாகரிகத்தின் உறைவிடமாக திகழும் சென்னை, தென் இந்திய கட்டிட வேலைப்பாடு, இசை, நடனம், நாடகம் மற்றும் இதர கலைகளின் ஊற்றாகவும் காட்சி அளிக்கிறது. மிகப்பெரிய வர்த்தக, தொழிற்துறை நகரமாகவும் சென்னை விளங்குகிறது. இந்தியாவின் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை, இந்திய வாகன உற்பத்தி தலைநகராக விளங்கும் சென்னையில்தான் உள்ளன. சென்னையில் உள்ள 12 கிலோமீட்டர் நீள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாக திகழ்கிறது. புதுமையும் பழமையும் கலந்த நகராக இது இருக்கிறது. 200 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்த நகரம் மேலும் விரிவடைந்து வருகிறது.
சென்னைக்கு செல்லும் வழி: இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் பெரிய சர்வதேச நகரங்களிலிருந்து சென்னைக்கு விமான சர்வீஸ் உள்ளது. இந்தியன், ஜெட் ஏர்வேஸ், சகாரா ஏர்லயன்ஸ், ஸ்பைஸ் ஜெட், கிங்பிஷர் போன்ற உள்நாட்டு விமான நிறுவனங்கள் சென்னைக்கு விமானங்களை இயக்குகின்றன. உள்நாட்டு விமான நிலையம் சென்னை நகரின் மையப்பகுதியிலிருந்து 20 கி.மீ., தொலைவில் மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது.


இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்து சென்னைக்கு சாலை வசதி உள்ளது. சென்னை பஸ் நிலையமான கோயம்பேடு பஸ் நிலையம் ஆசியாவிலேயே பெரிய பஸ் நிலையமாக கருதப்படுகிறது. கோயம்பேடு ஜவகர்லால் நேரு சாலையில் இது அமைந்துள்ளது.


சென்னையில் சென்னை சென்டரல், எழும்பூர் என இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் இந்த இரு ரயில் நிலையங்களிலிருந்து ரயில் சர்வீஸ் உள்ளது. சென்னையிலிருந்து அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேருக்கு கப்பல் போக்குவரத்து இயங்கி வருகிறது.
சென்னை நகரில் அரசு நகர பஸ்கள் இயங்குகின்றன. சுற்றுலா மற்றும் இதர தேவைக்கு வாடகைக்கார்களும் கிடைக்கும். விமான நிலையத்திலும் ரயில் நிலையங்களிலும் முன்கூட்டியே கட்டணம் செலுத்தி பயணம் செய்யத்தக்க டாக்சிகள் கிடைக்கும். அதி விரைவு உள்ளூர் ரயில் போக்குவரத்தும் உள்ளது.  


வரலாற்றில் சென்னை
சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் இப்பகுதியில் ஆட்சி புரிந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்த பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.

1639ம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.

ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.

1522ம் ஆண்டில் இங்கு வந்த போர்ச்சுகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதி போர்ச்சுகீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது.

1746ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை மாற்றம் செய்யப்பட்டது.

சென்னையின் பூகோள மற்றும் சீதோஷ்ண நிலை:


இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் கிழக்கு கடற்கரை சமவெளி பகுதியில் சென்னை அமைந்துள்ளது. சென்னை நகரின் வெப்ப நிலை சாதாரணமாக கடுமையாகவே இருக்கும். இருப்பினும் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் கடற்காற்று காரணமாக வெப்பம் சற்றே தணிந்து காணப்படும். கோடை காலத்தில் பகல் நேர வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ் (100.4 பாரன் ஹீட்) முதல் 42 டிகிரி செல்சியஸ் (107.6 டிகிரி பார்ன்ஹீட்) வரை இருக்கும். சென்னையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். நகரில் கூவம், அடையாறு இரண்டு ஆறுகள் ஓடுகின்றன.

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் கிழக்கு கடற்கரை சமவெளி பகுதியில் சென்னை அமைந்துள்ளது. சென்னை நகரின் வெப்ப நிலை சாதாரணமாக கடுமையாகவே இருக்கும். இருப்பினும் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் கடற்காற்று காரணமாக வெப்பம் சற்றே தணிந்து காணப்படும். கோடை காலத்தில் பகல் நேர வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ் (100.4 பாரன் ஹீட்) முதல் 42 டிகிரி செல்சியஸ் (107.6 டிகிரி பார்ன்ஹீட்) வரை இருக்கும். சென்னையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். நகரில் கூவம், அடையாறு இரண்டு ஆறுகள் ஓடுகின்றன.

இன்று சாக்கடை ஆறாக ஓடும் கூவம் நதி முதலில் திரவல்லிக்கேணி ஆறு என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த ஆறு பற்றி தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகரில் புழல்ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி உட்பட பல ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மூலம் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

மக்கள் தொகை
சென்னை நகரின் மக்கள் தொகை 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 42 லட்சமாக இருந்தது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்தால் மக்கள் தொகை 64 லட்சத்தைத் தொடுகிறது. சென்னையில் ஆந்திரா, கர்நாடகம் மற்றும் கேரள மாநில மக்களும் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்குள்ள அனைவருக்கும் தமிழும் பெரும்பலோருக்கு ஆங்கிலமும் பேசத் தெரியும்.




சென்னை பொருளாதாரம்
சென்னையில் வளம் கொழிக்கும் பொருளாதார நிலை நிலவுகிறது. கார்த் தொழிற்சாலைகள், கம்ப்யூட்டர் சேவை, பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி மற்றும் நிதி சேவைகள் உட்பட பல துறைகளிலும் சென்னை பொருளாதாரம் சிறந்து விளங்குகிறது. இந்திய பொருளாதாரத்தில் தடைகள் அகற்றப்பட்டபின் கம்ப்யூட்டர் துறை, வர்த்தகம் மற்றும் அவுட்சோர்சிங் துறைகள் பெரிய வளர்ச்சி காண ஆரம்பித்தன.

டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுசன்ஸ், சத்யம், ஐ.பி.எம்., ஆக்சன்சர், சன் மைக்ரோசிஸ்டம்ஸ், எச்.சி.எல்., மற்றும் இதர கம்ப்யூட்டர் நிறவனங்கள் சென்னையில் காலூன்றின. டெல், நோக்கியா, மோட்டோரோலா, சிஸ்கோ, சாம்சங், சைமன்ஸ், பிளெக்ஸ்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களும் இங்கு இயங்கி வருகின்றன.

இவற்றில சில நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் எலக்ட்ரானிக்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தங்கள் கிளைகளைத் துவக்க உள்ளன. சென்னை நகரில் தற்போது 2 உயிரியல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளன.

சென்னையில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு கார்த் தொழிற்சாலைகள் உள்ளன. ஹுண்டாய், மிட்சுபி, போர்டு, டி.வி.எஸ்., அசோக் லேலேண்டு, ராயல் என்பீல்டு, டாபே, டன்லப், எம்.ஆர்.எப்., போன்ற தொழிற்சாலைகள் சென்னையை ஒட்டி அமைந்துள்ளன. ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கான டாங்குகள் தயாரிக்கப்படுகினறன.

பாங்கிங் மற்றும் நிதித் துறையிலும் இந்தியாவில் முக்கிய நகரமாக சென்னை விளங்குகிறது. பணம் கொழிக்கும் தமிழ்த் திரைப்படத் தலைநகராகவும் சென்னை திகழ்கிறது.
நகரின் அமைப்பு:
நகரம் வடக்கு தெற்காக முதலில் விரிவடைந்தது, தற்போது மேற்கில் விரிவடைந்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே அகலமான சாலைகளைக் கொண்ட நகரமாக இருந்தாலும் நகரின் வளர்ச்சியினால் மிகுந்த நெரிசலும் புகை மாசும் நிறைந்த நகரமாக இருக்கிறது.
50களில் முக்கிய சாலையான அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடு) கட்டப்பட்ட 14மாடி கட்டிடமே இன்றும் சென்னையின் அடையாளம். தற்போது தான் அதை விட அதிக மாடிகள் கொண்ட கட்டிடங்கள் கட்டபட்டு வருகின்றன.
முக்கிய இடங்கள்:
மெரினா கடற்கரை:
உலகின் இரண்டாவது அழகிய கடற்கரை, தற்போது அளவுக்கதிகமான கூட்டத்தாலும், பிளாஸ்டிக் குப்பைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் 5 கி.மீ. நீளத்திற்கு மிக லேசான வளைவுடன் இருக்கும் கடற்கரையின் அழகு அவற்றையும் மீறி வசீகரிக்கிறது. இதன் வடகோடியில் அறிஞர் அண்ணாவின் சமாதி உள்ளது.
மாமல்லபுரம் (மகாபலிபுரம்):
சென்னையிலிருந்து தெற்கு கடற்கரையோர சாலையில் சுமார் 60கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பல்லவ காலத்தில் செய்யப்பட்ட அற்புதமான பழங்காலச் சிலைகள் இந்த சிற்றூர் முழுதும் காணலாம். ஊர் முழுதும் பல்வேறு சிலை செய்யும் ஸ்தாபனங்கள் முளைத்துள்ளன. சிறப்பான சிற்பக் கலைஞர்கள் நிறைந்த ஊர். மாமல்லபுரம் செல்லும் சாலையில் பல்வேறு பொழுதுபோக்கு பூங்காக்கள் (Theme Parks) திறக்கப்பட்டுள்ளன.
வண்டலூர் மிருகக்காட்சி சா‍லை:
நகரின் மையத்தில் முன்பு அமைந்திருந்த மிருகக்காட்சி சாலை தற்போது நகரின் வெளியே பரந்த இடத்தில் மிருகங்கள் இயற்கையாக உலவும் வன்னம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் கண்டு களிக்க ஏற்ற இடம்.
வள்ளுவர் கோட்டம்:
திருவள்ளுவரின் பெயரால் தமிழக அரசு அமைந்த கூடம். தேர் போன்ற வெளிப்புற அமைப்பு காணத்தக்கவை, உள்ளே திருக்குறளின் அனைத்து அதிகாரங்களும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.
அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்:
திருப்பதி (120 கி.மீ. வடக்கு):
புகழ் பெற்ற ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலயம்.
திருக்கழுக்குன்றம் (75 கி.மீ. தெற்கு):
குன்றின் மீதமைந்த கோவில். தினமும் சரியாக மதியம் 12மணிக்கு கோவிலில் உணவருந்த இரண்டு பருந்துகள் வந்தமர்வது காண வேண்டிய காட்சி.
காஞ்சிபுரம் (75 கி.மீ. தென்மேற்கு):
காமாட்சி அம்மன் கோவில். சங்கராச்சாரியார் மடாலயம்.
பழவேற்காடு (60 கி.மீ. வடக்கு)
பாண்டிச்சேரி (130 கி.மீ. தெற்கு):
யூனியன் பிரதேசம். அரவிந்தர் வாழ்ந்த ஆரோவில். இந்திய-பிரெஞ்சு
கலாசாரம்.
திருவண்ணாமலை (130 கி.மீ. தென்மேற்கு):
குன்றின் மீதமைந்த ஜோதி வடிவான சிவன் கோவில். ரமணர் வாழ்ந்த இடம்.



Monday, August 20, 2012

Senju Kannon (ஆயிரம் கைகள் )

நன்றி : YOUTUBE VIDEO

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms