Monday, February 25, 2013
குரங்கு வியாபாரி


ஒரு கிராமத்தில் அதிகமான குரங்குகள்
இருந்தன. அதனால்
அந்த கிராம மக்களுக்கு
மிக தொல்லையாக இருந்தது. அக்கிராமத்திற்கு
ஒரு வியாபாரி வந்தான். அவன் அக்கிராமத்தில் உள்ள குரங்குகளை பார்த்தான். அக்கிராமத்து மக்களிடம் எனக்கு நிறைய குரங்குகள் தேவை படுகிறது. ஒரு குரங்கை பிடித்து கொடுத்தால் ஒரு
குரங்கிற்கு பத்து ரூபாய் வீதம்
தருகிறேன் என்றும் கூறினான்.
கிராமத்து மக்கள் சிலர் உனக்கு எதற்கு
குரங்கு? என கேட்க, மருத்துவ ஆராய்ச்சிற்கு
தேவைப்படுகிறது என்று வியாபாரி கூறினான்.
கிராம மக்களும் பணத்திற்கு பணமும் ஆயிற்று, குரங்கின் தொல்லையும் குறையும் என்று எண்ணி அவரவரால் எத்தனை குரங்கினை
பிடிக்க முடியுமோ அத்தனை குரங்கினை பிடித்து பத்து ரூபாய் வீதம் பல பத்து ரூபாய்க்களை
பெற்றனர் . கிராமத்தில் உள்ள அனைத்து குரங்குகளையும் மக்கள் பிடித்து கொடுத்து
பணம் பெற்றனர். கிராமத்தில் குரங்குகள் தீர்ந்து
போயின.
குரங்கு வியாபாரி எல்லா குரங்குகளையும் எடுத்துக்கொண்டு கிராமத்தை விட்டு கிளம்புவதற்க்கு முன் கிராம மக்களிடம் எனக்கு இன்னும் நிறைய குரங்குகள் தேவை படுகிறது. இனி பிடித்து கொடுக்கும் ஒவ்வொரு குரங்கிற்கும் ஐநூறு ரூபாய் வீதம் தருகிறேன்
என்றும் கூறினான்.
கிராமத்திலோ ஒரு குரங்குக்கூட இல்லை . ஒரு குரங்கிற்கு ஐநூறு ரூபாய் கிடைக்கும் என்பதால் கிராம மக்கள் அனைவரும் குரங்கிற்காக தேடித்தேடி அலைந்தனர். ஒரு குரங்கும் கிடைக்க
வில்லை.
சில நாட்களுக்கு பிறகு ஒரு வியாபாரி இந்த கிராமத்திற்கு வந்தான்.
அவன் கிராமத்து மக்களிடம் என்னிடம்
நிறைய
குரங்குகள்
உள்ளது,ஒரு குரங்கு நூறு ரூபாய்
ஆகும் என்றான்.
கிராம மக்கள் அனைவரும் இந்த வியாபாரியிடமிருந்து நூறு
ரூபாய்க்கு வாங்கி முதலில் வந்த குரங்கு வியாபாரியிடம் ஐநூறு
ரூபாய்க்கு விற்கலாம் என்றெண்ணி போட்டிப்போட்டுக் கொண்டு வாங்கிக் கொண்டனர் . குரங்குகள் தீர்ந்து போயின.வியாபாரி கிளம்பினான் .
கிராமமக்கள் ஐநூறு ரூபாய்க்கு வாங்கி கொள்ளப் போகும் வியாபாரிக்காக காத்துக்கொண்டிருந்தனர்.அந்த வியாபாரிவரவேயில்லை. அவன் வரப்போவேதேயில்லை. ஏனெனில் அந்த வியாபாரித்தான் வேறொருவனை அனுப்பி பத்து ரூபாய்க்கு வாங்கிய குரங்கை நூறு ரூபாய்க்கு விற்றுவிட்டான் .
சன் டிவியில் வரும் ‘வாணி-ராணி’ தொடரிலிருந்து
எடுக்கப்பட்டது.
5 கருத்துரைகள்:
மெகா தொடர் எல்லாம் பார்ப்பதுண்டா...? ஆனாலும் நல்ல பிசினஸ் கதை...
நன்றி...
This is the technic of business.Nice
அன்பு ராஜன் கமெண்ட் :
இது முழுக்க முழுக்க ஒரு பிசினஸ் மேன் எப்படி இருக்கணும் என்பதுக்கான கதை.
அதற்க்கு ஐந்து காரணிகள் உண்டு
1.தேவைகளை உருவாக்கணும் ,
2.ஊர்,மக்கள்,மொழி,மதம் மற்றும் அவர்களின் மனவோட்டம் அறிவது
3.சூழ்நிலைக் கேற்ப ரிஸ்க் எடுப்பது
4.வக்கிரம் ,வன்முறை,ஆபாசம்,துவேஷம் இல்லாமல் செய்வது
5.கொஞ்சம் அரசியலும் ,ஆதிக்க மேலாண்மை கொள்வதும்
இதுத்தான் பிசினஸ் இதை அறிந்து கொள்ளவே இந்த கதை.
ஆனா இந்த கதையை மெகாத் தொடரிலுருந்து கேட்டு எழுதி இருக்கீங்களே,சூப்பர் வாழ்க உங்கள் பணி
தனபாலன் சார் ,
நான் மெகாத் தொடரெல்லாம் பார்க்கிறதில்லே, என் வீட்லே நான் டின்னர் முடிக்கும் பொழுது கதைன்னு சொன்னதும் இன்றேஸ்ட்டா கேட்டுகிட்டது. மற்றப்படி டிவி சீரீயலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். டிவி சீரீயல் நேரந்தான் எனக்கு புக் படிக்க ஏற்றது. யார் தொந்தரவும் இருக்காது.
அனைவரின் கமெண்ட்டுக்கும் நன்றி
Nice story. along with the above 5 points from Mr.anburajan sir, I would like to add another point; a good business partner.
Thanks
Post a Comment