புதிது என்றாலே உற்சாகம்தான், புது உடை, புது உறவுகள், என
புதிது கிடைத்தாலே உற்சாகம் அடைகிறது மனம். அதுபோலத்தான் 12 மாதங்கள் முடிந்து புதிதாய் ஒரு ஆண்டு
பிறக்க தொடங்கினாலே அனைவருமே அதை கொண்டாட தொடங்கிவிடுகின்றனர். ஒருவருக்கொருவர்
வாழ்த்துக்களை பரிமாறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். உலகம்
முழுவதும் ஜனவரி-1ம் தேதி தொடங்கி இரண்டு
வாரங்களுக்காவது உறவினர்கள், நண்பர்களிடையே
புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர். புத்தாண்டு கொண்டாட்டம் வரலாறு
புத்தாண்டு கொண்டாடும் பழக்கம் எப்படி வந்தது என்பதை சற்றே பின்னோக்கினால்
மெசபடோமியாவில் தான்,
முதன் முதலில்
புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது என்று கூறப்படுகிறது. பாபிலோனில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
பாபிலோன் நாட்டில் கி.மு 2000 மாவது ஆண்டில் வசந்த காலத்தின் தொடக்கத்தை
வரவேற்கும் விதமாக புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
இலையுதிர்காலம் முடிந்து
பூமியில் புதிய இலைகள் பசுமையை மலரச்செய்யும் வசந்தத்தை வரவேற்கும் விதமாக
பாபிலோனிய மக்கள் புத்தாண்டு கொண்டாடினர். 11 நாட்கள் அவர்களின் கொண்டாட்டம் களை கட்டும். தற்போதைய நவீன
புத்தாண்டு கொண்டாட்டம் டிசம்பர் 31ம்
நாள் இரவோடு முடிந்து விடுகிறது. ரோமானியர்கள் புத்தாண்டு சூரியனின் நகர்வினை
அடிப்படையாக்க் கொண்டு ரோமானியர்களின் காலண்டரின் மார்ச் 1 ம் தேதியே புத்தாண்டு தினமாக கொண்டாடத்
தொடங்கினர். அந்த காலக் கட்டத்தில், மார்ச்சை
முதல் மாதமாக கொண்டு,
ஒரு ஆண்டுக்கு, 10 மாதங்கள் இருந்தன. அந்த காலண்டரில் 7வது மாதமாக செப்டம்பரும், 8 வது மாதமாக அக்டோபரும், 9வது மாதமாக நவம்பரும், 10வது மாதமாக டிசம்பரும் இருந்தது. லத்தீன்
மொழியில் ‘செப்டம்’ என்றால் ‘7’, ‘அக்டோ’
என்றால் ‘8’, ‘நவம்’ என்றால் ‘9’,
‘டிசம்’ என்றால் ‘10’ என்றும் பொருள்படும். ஆனால் தற்போது, 9வது மாதமாக செப்டம்பரும், 10வது மாதமாக அக்டோபரும், 11வது மாதமாக நவம்பரும், 12வது
மாதமாக டிசம்பரும் உள்ளன.
ஜனவரி 1ல் கொண்டாட்டம் இதன் பின்னர் கிமு 153 ஆண்டில் ரோமன் செனட் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தது. கி.மு.153ம் ஆண்டில், ரோமாபுரியை ஆட்சி செய்த இரண்டாவது ரோமானிய அரசன் நுமா பொன்டிலிஸ்
ரோமன் காலண்டரில், ஜனவரியை முதல் மாதமாகவும், பிப்ரவரியை இரண்டாவது மாதமாகவும் திருத்தி
அமைத்தார். அப்போதுதான், ஜனவரி
ஒன்றாம் தேதிக்கு, புத்தாண்டு இடம் பெயர்ந்தது.
கிரிகோரியன் காலண்டர் ஜூலியஸ் சீசர் காலத்தில் இருந்து ஜனவரி ஒன்றாம் தேதி
புத்தாண்டு கொண்டாட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜூலியஸ் சீசர் ஆண்ட காலத்தில், சூரியனை மையமாக கொண்டு, ஜூலியன் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்பின்னர் பல புதிய காலண்டர்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு முன்பு, நிலவின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு
காலண்டர்கள் உருவாக்கப்பட்டன. போப் 12ன் கிரிகோரி காலத்தில் கிரிகோரியன் காலண்டர் முறை
உருவாக்கப்பட்டது. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த கத்தோலிக்கர்களும், பிராடஸ்டன்டுகளும் இந்த காலண்டரை ஏற்றுக்
கொண்டனர். இதன் பின்,
உலகில் உள்ள அனைவரும் கிரிகோரியன்
காலண்டர் முறையை ஏற்றுக் கொண்டு, அதை
பின்பற்றி வருகின்றனர். கிருஸ்தவர்களால் புதுப்பொலிவு இயேசு கிறிஸ்துவிற்கு பின், கிறிஸ்தவர்களால் புத்தாண்டிற்கு ஒரு
பொலிவு ஏற்பட்டது. கிருஸ்துமஸ், புனித
வெள்ளி, ஈஸ்டர் என வரிசையாக விழாக்கள்
வருவதை ஒட்டி கிருஸ்துவ பெருமக்கள் புத்தாண்டினை உற்சாகமாக கொண்டாடத் தொடங்கினர்.
அன்றைய தினம் தேவாலயத்திற்குச் சென்று பாடல்களைப் பாடி பிரார்த்தனைகள்
செய்கின்றனர். இன்றைக்கு உலக மக்கள் அனைவருமே மொழி, இன, மத பாகுபாடு இன்றி, ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாகக் கருதி, உற்சாகத்தோடு கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஆனால் புத்தாண்டு தினம் என்பது நாடு
மொழி இனம் மதம் எனும் காரணிகளால் மாறுபடுகிறது. உதராணமாக தமிழ் புத்தாண்டு என்பது
தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை முதல் நாளையும் ,ஆந்திர,கர்நாடக மற்றும்
மராட்டியர் யுகாதி என்று பங்குனி மாதத்தின் நிறைவின் போது கொண்டாடுகின்றனர். ஜெயின்
சமூகத்தினர் தீபாவளியை புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர். சீன தேசத்தினரும்
மாறுபட்ட மாதத்தின் நாளை புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர்.
அதனால் முதலில் சொன்னது போல் புதிது என்றாலே உற்சாகம்தான். புது உடை, புது உறவுகள், என புதிது கிடைத்தாலே மனம் உற்சாகம் அடைகிறது.எனவே புதிது,உற்சாகம்,நம்பிக்கை என்ற அடிப்படையில் எப்போதும் விழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் மனித இனத்திற்கும் மனதிற்கும் அவசியமாகிறது.
1 கருத்துரைகள்:
புத்தாண்டு வாழ்த்துகள்.
(வேதாவின் வலை)
Post a Comment