காலம் அது பல வகையில் பலருக்கு பலவித
அனுபவம் தந்துருக்கிறது ,தனிமனித சுதந்திரம் ,சமுதாய மாற்றம் என மறைமுகக் காரணிகளும்
புயல் மழை பூகம்பம்
விபத்து என நேர்
முகக் காரணிகளும் நமக்கு தந்துருக்கிறது. டிசம்பர் 31 நமது முடிவாகாது அதேப் போல் ஜனவரி 1 நமது ஆரம்பமாகாது .வாழ் நாளின் எல்லா நாட்களுமே நமக்கு புதுப்புது வழியினை வலியினை
ஆனந்தத்தை இழப்பினை என பல அடுக்கு அனுபவங்களை தருகின்றது இதில் இன்பம் துன்பம் என்பது அவரவர் வாழ்வில்
கலந்தே நடக்கிறது.
எனவே டிசம்பர் 31 ல் கூத்தடிப்பதும் ஜனவரி 1 ல் பவ்யமாக நடந்துக் கொள்வதும் நாம் புது வருடத்தினை வரவேற்பது ஆகாது . காலம் அதன் பணியினை தானாகவே தொடர்ந்து
கொண்டிருக்கிறது.
நாமும் நமது பணியினை தனி மனித ஒழுக்கத்தின் மூலமாக
தொடருவோம்.
குணம்நாடிக் குற்றமும் நாடி
அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் - திருவள்ளுவர்
நமது கடந்த கால நல்ல குணத்தையும், கெட்ட குணத்தையும் ஆராய்ந்து அவற்றுள் எது அதிகம் என்பதை அறிந்து கெட்ட குணத்தை தவிர்த்து நல்ல குணத்தை வளர்த்து புது வருட சபதமாக மேற்கொள்ளுவோம்.
அதேப் போல்,
கடந்த கால தோல்வியின்
அனுபவங்களை இனி வரும்
வெற்றிக்கு
படிகளாக்குவோம்.
அனைவருக்கும் எனது புது வருட நல் வாழ்த்துக்கள் .
0 கருத்துரைகள்:
Post a Comment