Friday, February 14, 2014

கண்கள் மென்மையானவை


மனித உடலில் அமைந்திருக்கும் உறுப்புகளில் மிகவும் மென்மையானவை, முக்கியமானவை கண்கள். உடலில் எங்கு வலி ஏற்பட்டாலும் கண்கள் அழுவதுபோல், உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களும் கண்களை பாதிக்கவே செய்கின்றன. அதனால் கண்களை மிக கவனமாக பாதுகாக்க வேண்டும் பராமரிக்கவும் வேண்டும். 


பொதுவாக கண்களில் ஏற்படும் நோய்கள் என்னென்ன? பல்வேறு விதமான சூழ்நிலைகளில், பல்வேறு விதமான நோய்கள் கண்களில் ஏற்படுகின்றன. கண்கள் திறக்கும்போது சாதாரணமாக தூசு விழுந்துவிடும்.

அதனால் அலர்ஜி ஏற்பட்டால் அதுகூட ஒரு நோயாக மாறிவிடும். 

உடலில் சர்க்கரை நோய் ஏற்படுத்தும் தாக்கமும், கண்நீர் அழுத்தமும், பார்வைக் குறைபாடும் கண் நோய்கள்தான். கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதை மீறி ஏதாவது நோய் தாக்கிவிட்டாலும் அதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சையை பெற வேண்டும். 

கண்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்துவிடலாம். வழக்கமான பரிசோதனையின்போது கண்ணின் பார்வை சக்தி, நீர் அழுத்தம், விழித் திரை நரம்பு, கருவிழி, கருவிழியில் உள்ள பாப்பா லென்ஸ் போன்றவைகளை எல்லாம் கண் மருத்துவர் பரிசோதிப்பார்.

அப்போது ஏதேனும் நோய் அறிகுறி தென்பட்டால் அதற்கான விசேஷ பரிசோதனைகள் தேவைப்படும். அதற்காக நவீன கருவிகள் நிறைய உள்ளன. அதுபோல் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பவைக்கும் நவீன சிகிச்சைகளும் இருக்கின்றன. உடலில் ஏற்படும் எந்தெந்த நோய்கள் கண்களை பாதிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? 

உயர் ரத்த அழுத்தம், காசநோய் போன்றவைகள் எல்லாம் கண்களை பாதிக்கலாம். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் சர்க்கரை நோய் கண்களை பலவிதங்களில் பாதிக்கக்கூடும். கண்கட்டி தோன்றலாம். அலர்ஜி அதிகமாகலாம்.

இளம் வயதிலே கண் புரை உருவாகலாம். தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் இவை கண்களை நிரந்தரமாக பாதிக்காது. 

ஆனால் சர்க்கரை நோய் கண்களின் விழித்திரையை பாதிக்காதிருக்கவேண்டும். விழித்திரை பாதிக்கும்போது கண்களில் வலி, எரிச்சல் போன்ற எந்த அறிகுறியும் தென்படாது. ஆனால் பார்வை சிறிது சிறிதாக குறையும். பார்வை பெருமளவு பாதிக்கப்பட்ட பின்பே நோயாளியால் அறிந்துகொள்ள முடியும். 

அப்போது பார்வை இழப்பை கட்டுப்படுத்தத்தான் முடியுமே தவிர, இழந்த பார்வை சக்தியை மேலும் அதிகரிக்க முடியாது.

சர்க்கரை நோயாளி தொடர்ந்து கண்களை பரிசோதித்து வந்தால், ஆரம்பகட்டத்திலே பாதிப்பை கண்டறிந்து விடலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒருவருக்கு கண் விழித்திரை பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. 


சாதாரண பரிசோதனையின்போதே கண்மருத்துவர்களால் விழித்திரை பாதிப்பை கண்டறிய முடியும். எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிய நவீன பரிசோதனைகள் தேவைப்படும். சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் அந்த நோயால் கண்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் நீங்கிவிடுமா?’ என்ற கேள்வி பெரும்பாலானவர்களால் எழுப்பப்படுகிறது.

சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டாலும், கண்பாதிப்பிற்கான தகுந்த சிகிச்சையை மேற்கொண்டால் மட்டுமே பார்வையை தக்க வைத்துக்கொள்ள முடியும். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது பொதுவாக உடல் நலத்திற்கு ஏற்றது. 

சர்க்கரை நோய் ஒருவருக்கு எப்போது உருவாகி இருக்கிறதோ, அப்போதிருந்து ஐந்தாண்டுகளில் கண் விழித்திரை பாதிப்பு தோன்றலாம். அதனால் சர்க்கரை நோயாளிகள் எத்தனை வயதாக இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

விழித்திரை பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கும் நவீன சிகிச்சைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. சரியான தருணத்தில் முறையான சிகிச்சை பெறாவிட்டால் படிப்படியாக பார்வையை இழக்கும் சூழ்நிலை உருவாகி சிறு வயதிலே கண்களை பரிசோதித்து கண்ணாடி அணிந்திருப்பவர்கள், காலம் முழுக்க கண்ணாடி அணிந்துதான் ஆக வேண்டுமா?’ என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது. 

காலம் முழுக்க கண்ணாடியை அணியவேண்டும் என்ற நிலையை நவீன மருத்துவ உலகம் மாற்றிவிட்டது. நவீன லேசர் சிகிச்சைகள் அதற்கு உதவுகின்றன.

பாதுகாப்பான அந்த சிகிச்சையை மேற்கொண்டால், கண்ணாடி அணியவேண்டிய தேவை இல்லை. தொடர்ச்சியாக கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு பெரும்பாலும் கண்பாதிப்பு ஏற்படுகிறது. 

அவர்களுக்கு அநேகமாக டிரை ஐஎனப்படும் கண்ணீர் குறைபாடுதோன்றும். இதனால் கண்களில் எரிச்சல், வலி தோன்றும். அந்த அவஸ்தையை போக்க வேலை நேரத்தில் போட்டுக்கொள்ள லூப்ரி கன்ட் ஐ டிராப்ஸ்உள்ளது. அனைவருமே கண்களின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறைகொள்ள வேண்டும். 

சத்துணவும் அதற்கு அவசியமாகிறது. குறிப்பாக கீரை வகைகளை உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்ளவேண்டும். முருங்கை கீரை மிக நல்லது. பப்பாளி பழம், கேரட் போன்றவைகளும் கண்களின் ஆரோக்கியத்திற்கு துணைபுரியும். 

கட்டுரை: டாக்டர். அருள்மொழி வர்மன் (கண் சிகிச்சை நிபுணர்),சென்னை-40. 

குறிப்பு: படித்தவுடன் பிடித்தது .அவசியமாகவும் இருந்தது. உடனே எழுதிவிட்டேன்

12 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பயனுள்ள கட்டுரை ஐயா...

டாக்டர். அருள்மொழி வர்மன் அவர்களுக்கும் நன்றி...

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றி திரு தனபாலன் அவர்களே. உங்கள் கனிவான கருத்துரைக்கு

Md.ASIF said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நான் கூட எங்கேயோ படித்து இருக்கிறேன்.மிகவும் பயனுள்ள தகவல்

Rathnavel Natarajan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கண்கள் மென்மையானவை
அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு Arrow Sankar

மகேந்திரன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முதல் முதலாய் உங்களது வலைப்பூவில் வந்தேன் .மிக அருமையான தகவல்கள் உள்ளது .நன்றி.படித்து அறிந்துக்கொண்டு அதனை மற்றவர்களக்கும் பகிர்வது நல்ல சேவை.

லதா அன்பரசன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நானும் ஒரு கண் மருத்துவர்தான்.படித்து பயனடைந்தேன்

Jayanthi Sreenivasn said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

very useful. Great Sankar!

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றி திரு ரத்னவேல் நடராஜன் அவர்களே.

Radhikaa Nadella said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

VERY INFORMATIVE ARTICLE.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றி திரு மகேந்திரன் அவர்களே

கீர்த்தனா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பல நல்ல சுவாரசியமான,பயனுள்ள தகவல்களை பரிமாறி கொள்ளும் நல்ல தளமாக ஏரோ சங்கர் உள்ளது.

- கீர்த்தனா ராகவன்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Nice information Sir , especially for sugar patients.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms