பஞ்ச
பூதங்களான நீர்,நிலம்
,நெருப்பு,ஆகாயம்,காற்று இவைகளில் முதல் மூன்றை நம் முன்னோர்கள் எல்லா
வழிபாடுகளிலும் முன்னிலைக் கொண்டே நடத்துகிறார்கள் அவைகளை தாயாக எண்ணி வணங்கவும்
செய்கிறார்கள்.
“நீரின்றி அமையாது உலகு” எனும் வாக்கின்படி நீர் முதன்மை பெறுகிறது.அந்த நீருக்கு அடிப்படை ஆதாரம் மழை.இந்த
மழை ஆடி மாதத்தில், தென்மேற்கு பருவ மழையின் தொடக்க காலமாகும். சித்திரை
மாத வெயிலின்
தாக்கம் ஆடி மாதத்தில் முடிவுற்று, நன்றாக
மழை பொழியத் தொடங்கும். நீர் நிலைகளுக்கான அடிப்படை ஆதாரம் மழை. மழையினால்
ஏற்படும் வெள்ளம் அமைதியுற்ற ஆற்றினை சுத்தப் படுத்தி நிலத்தினை குளிர வைத்து
செழிப்படைய வைக்கிறது.
அத்தகைய
மழையை வரவேற்று வணங்கி உபசரித்து கொண்டாடுவதே, ஆடி மாதத்தின் சிறப்பாகும். அப்படி, ஆடி மாதத்தின் தொடக்கத்தில் ஆற்றில் பொங்கி வரும் மழை நீரினை
ஊற்றாய் கொண்டு விவசாயிகள் நாற்று நடத்தொடங்குவர்.
இந்த விதைநெல்களே விளைந்து தை மாதம் அறுவடைக்குத் தயாராகிறது. பொங்கல் எப்படி உழவர்கள் நன்றி சொல்லும் நாளோ, அதே போல் ஆடிப்பெருக்கு நதியை வணங்கி உழவை ஆரம்பிக்கும் திருநாள் என்கின்றனர் பெரியோர்கள்.
இந்த விதைநெல்களே விளைந்து தை மாதம் அறுவடைக்குத் தயாராகிறது. பொங்கல் எப்படி உழவர்கள் நன்றி சொல்லும் நாளோ, அதே போல் ஆடிப்பெருக்கு நதியை வணங்கி உழவை ஆரம்பிக்கும் திருநாள் என்கின்றனர் பெரியோர்கள்.
அதுமட்டுமின்றி,
மழை பெய்து நதிகள் அனைத்தும்
பெருக்கெடுத்து ஓடுவதை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து கொண்டாடும் திருநாளே 'ஆடிப் பெருக்கு' என்கின்றனர் ஒரு சாரார்.
தஞ்சையில்
பாயும் காவிரியின் துணை ஆறுகளான வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு,
குடமுருட்டி ஆகியவற்றின் கரைகளில்
இவ்விழா மிகவும் பிரபலம். இந்த நாளில், ஆற்றில்
நீராடி அங்கு இருக்கும் நதியை தெய்வமாய் நினைத்து வழிபடுவார்கள்.
நதியில்
நீராடி
தென்றலில்
துடைத்து
நெருப்பில்
பொங்கல் பொங்கி
நிலமெல்லாம்
பச்சை உடுத்தி
வானோக்கி
கையேந்தினேனே
வரங்கள்
தருவாய்
வாழ்த்தும்
அருள்வாய்
வசமானதை
உனக்கே
Email :sanakrarrow@gmail.com
0 கருத்துரைகள்:
Post a Comment