1.தினமும் பருகும் குடிநீரை விட அதிகமாக பருக வேண்டும்.
2.இரவு நேரங்களில் வீட்டில் உள்ள ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும். அவ்வாறு திறந்து வைப்பதால் வெயிலின்
தாக்கம் குறைவாக இருக்கும்
3.கால்நடைகளை கொட்டகையில் வைத்து பராமரிக்க வேண்டும்.
4.உடுத்தும் ஆடைகள் எடைகுறைவாகவும்,
வெளீர் நிறத்தில் தளர்வாகவும் இருக்க வேண்டும். பருத்தி ஆடைகளையே உடுத்துவது உடலுக்கு நல்லது.
5.வெளியில் செல்லும்போது குளிர் கண்ணாடி, காலணி மற்றும் தொப்பி அணிந்து செல்ல வேண்டும். குடையை எடுத்துச் செல்லவும் தயங்க வேண்டாம்.
6.அவசிய பணிநிமித்தமாக வெளியில் செல்ல நேரும்போது,
ஈரமான துணியினை முகம், கழுத்து மற்றும் மூட்டுகளில் படுமாறு போட்டுக் கொண்டு வெளியே செல்ல வேண்டும்.
7.டீ, காபி, கார்பனேட் குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
8.ஓஆர்எஸ் பவுடர், நீர் ஆகாரம், மோர், எலுமிச்சை சாறுகலந்த நீர் மற்றும் இதர வெயிலுக்கு ஏற்ற பானங்களை அவ்வப்போது பருகி வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
9.உடல் மிகவும் சோர்வுற்றாலோ,
வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமிருந்தாலோ அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வருவது நல்லது.
10.ஒவ்வொருவரும் முடிந்தவரை தங்கள் வீட்டில் உள்ள முதியவர்களைப் பாதுகாக்க வேண்டும். மற்றவர்களுக்கும் இதை தெரிவித்து அவர்களுக்கும் உதவ வேண்டும்.
2 கருத்துரைகள்:
மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே
நன்றி
Mikka nanry bro
Post a Comment