தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சுரங்கப்பாதை சினானி -நாஷ்ரி
தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சுரங்கப்பாதை அமைக்கும் பணி 2011-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு, 2 ஏப்ரல் 2017 அன்று நிறைவுற்று, பிரதமர் நரேந்திர
மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு இடையேயான பயண நேரத்தில் இரண்டு மணி நேரம் வரை குறைக்கும் இந்த சுரங்கம், சினானி -நாஷ்ரி (Chenani-Nashri) இடங்களுக்கு இடையே, தேசிய நெடுஞ்சாலை 44ல் அமைந்துள்ளது. அதுநவீன தொழில்நுட்பங்களுடன் கட்டப் பட்டிருக்கும் இந்தச் சுரங்கத்தின் சிறப்பு அம்சங்கள்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பருவங்கள் மாறிக் கொண்டேயிருக்கும். எந்த பருவகாலத்துக்கும் ஏற்ற வகையில் இந்தச் சுரங்கம் கட்டப்பட்டிருக்கிறது. பனிப்புயல்,
மண்சரிவு ஆகிய ஆபத்துகள் நிறைந்த பாதையில் தான் இதுவரை பயணிக்க வேண்டியிருந்தது. இனி, ஆபத்தில்லாமல் பயணிக்கலாம்.
டிரான்ஸ்வெர்ஸ் வெண்டிலேஷன் சிஸ்டம் (Transverse
Ventilation System) பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் மற்றும் உலகின் ஆறாவது சுரங்கம் இது. கிட்டத்தட்ட 10 கிமீ நீளமுள்ள சுரங்கம் என்பதால், உள்ளே சுத்தமான, போதுமான ஆக்ஸிஜன் இருக்க வேண்டும். அதற்கு இந்த தொழில்நுட்பம் உதவி செய்யும்.
இந்தச் சுரங்கப்பாதையில் இரண்டு குழாய்கள் இருக்கும். ஒன்றில் வாகனங்கள் பயணிக்கும். அதன் விட்டம் 13 மீட்டர். அதற்கு இணையாக 6 மீட்டர் விட்டத்தில் இன்னொரு குழாய் இருக்கும். ஆபத்து மற்றும் எமர்ஜென்ஸி காலத்தில் பெரிய குழாயில் இருந்து பயணிகள் சிறிய குழாய்க்கு மாறி பாதுகாப்பாக வெளியேற முடியும். சீரிய இடைவெளியில் மொத்தம் 29 இடங்களில் இந்த குழாய்களில் இருந்து இடம் மாற வழிகள் அமைக்கப்பட்டிருக்கிறன.
சுரங்கத்தின் உள்ளே மொத்தம் 124
சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. உள்ளே டிராஃபிக் நெரிசல் ஏற்பட்டால்,
யார் மீது தவறு என்பதை இந்த கேமராக்கள் உதவியுடன் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். பழுதாகும் வாகனங்களை பார்க் செய்ய ஆங்காங்கே பார்க்கிங் ஸ்பாட்களும் உண்டு.
சுரங்கத்தின் உள்ளே இருக்கும்போது எந்த தடையும் இல்லாமல் மொபைல் போன்களை பயன்படுத்த முடியும். டெலிகாம் நிறுவனங்களுடன் பேசி, அரசு அங்கே தேவையான வசதிகளை செய்திருக்கிறது. நகரங்களில் இருப்பதை விட சிக்னல் அங்கே நன்றாக இருக்கும் என்பது குறிப்பிட வேண்டிய அம்சம்.
ஜம்மு போன்ற பகுதிகளில் திடீர் திடீர் என வெளிச்சம் போகும். அப்படியிருக்க, அங்கே அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கத்தில் உள்ளே எப்படி இருக்கும்?
இதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். சுரங்கத்தின் வெளியே இருக்கும் வெளிச்சத்துக்கு ஏற்ப உள்ளேயும் வெளிச்சம் அதிகரிக்கும்.
சுரங்க பணி குழுவினருடன் மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்காரி |
கிட்டத்தட்ட 1500 பொறியாளர்கள், ஜியாலஜிஸ்ட்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் இணைந்து ஏழு ஆண்டுகளில் இதை கட்டி முடித்திருக்கிறார்கள். இது, மாநிலத்தில் வருவாயையும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையையும் உயர்த்த உதவும் என்கிறது அரசு.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தச் சுரங்கத்துக்காக 3720
கோடி ரூபாய் செலவழித்திருக்கிறது. இந்தச் சுரங்கம் வழியே செல்ல கார்களுக்கு 55ரூபாயும்,
மினி பஸ்களுக்கு 90
ரூபாயும், டிரக் மற்றும் மற்ற பெரிய வாகனங்களுக்கு 190
ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்தச் சுரங்கம் மூலம் மட்டும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 27
லட்சம் ரூபாய் மதிப்பிலான எரிபொருள் மிச்சப்படுத்தப்படும். ஆண்டுக்கு 100 கோடி. இதுதான் இந்தியாவின் சாலைவழிகளில் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டது.
print this in PDF
2 கருத்துரைகள்:
பெருமை கொள்வோம் ஐயா
நம் நாட்டிலும் இப்படியோர் சுரங்கப் பாதை
பெருமை கொள்வோம்
செய்தியை நாளிதழ்களில் படித்தேன். தொழில்நுட்பத்தை உங்கள் பதிவு மூலம் அறிந்தேன். நன்றி.
Post a Comment