இந்தாண்டு(2017)க்கான 'கோல்டுமேன் சுற்றுச்சூழல்’ விருது இந்தியாவைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பிராபுல்லா சமண்டாரா-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரிசா மாநிலத்தில் லஞ்சிகார் மாவட்டத்தில் உள்ள நியாம்கிரி மலைப்பகுதிகளில் ஸ்டெர்லைட் நிறுவனம் அமைக்க இருந்த சுரங்கம் மற்றும் கணிம ஆலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய 65 வயதான பிராபுல்லா சமண்டாரா, தனது லோக் சக்தி அபியான் அமைப்பின் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.
சுரங்க
ஆலை அமைவதை எதிர்த்து 12 கிராம சபைகள் மூலம்
தீர்மானம் இயற்றி நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தன. கடும் மக்கள் எதிர்ப்பு எழுந்த
காரணத்தால் சுரங்க ஆலை அமைப்பதை கைவிடுவதாக ஸ்டெர்லைட் நிறுவனம் அறிவித்தது.
தற்போது, ஜகத்சின்பூர் மாவட்டத்தில் கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் அமைக்க இருந்த இரும்பு ஆலைக்கு எதிராக போராடி வரும் பிராபுல்லா சமண்டாரா உள்ளிட்ட 6 பேருக்கு ‘பசுமை நோபல்’ என்றழைக்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது சான்பிரான்சிஸ்கோ நகரில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிராபுல்லா சமண்டாரா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து இயற்கை ஆர்வலர்கள் 5 பேர் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக இவ்விருதை இந்தியாவின் மேதா படேகர், எம்.சி மேக்தா, ரசீதா பே, சம்பா சுக்லா ஆகியோர் பெற்றுள்ளனர்.
2 கருத்துரைகள்:
போற்றுதலுக்கு உரியவர்
போற்றுவோம்
Mikka nanru..
vaalthukal.
Post a Comment