Tuesday, November 25, 2014

படகோட்டி பிரார்த்தனை


ஒரு கடலோர நகரில் ஒரு வயதான ஆனால் திறமையான படகோட்டி இருந்தார். 
தினமும் படகில் மக்களை அருகிலுள்ள தீவுக்கு அழைத்துச் சென்று திரும்பி வருவது அவரது தொழிலாகும்.
ஒரு நாள் சில இளைஞர்கள் அவரது படகில் பயணம் செய்தனர். படகை கிளப்பும் முன் படகோட்டி கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தார்.

கடலும் வானமும் அமைதியாக இருந்த அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்த அவரை பயணிகள் சிரித்து கிண்டல் செய்தனர். அதை பொருட்படுத்தாமல் படகோட்டி படகை கிளப்பினார். 
படகு நடு கடலை அடைந்தபோது திடீரென்று புயல் வந்தது.
படகு மேலும் கீழும் ஆடி தத்தளித்தது. பயந்து போன பயணிகள் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தனர். படகோட்டியையும் பிரார்த்தனை செய்ய அழைத்தனர். அதற்கு படகோட்டி இப்பொழுது படகை சரியாக செலுத்துவதே எனது கடமையாகும். அதை மட்டுமே செய்வேன் என்றார்.
சிறிது நேரத்திற்கு பிறகு புயல் திசை மாறி சென்றது. கடலும் அமைதியானது. அதுவரை படகு கவிழாமல் திறமையாக அதை ஓட்டிய படகோட்டி, துடுப்பு தள்ளுவதை நிறுத்தி விட்டு கடவுளுக்கு நன்றி கூறி பிரார்த்தனை செய்தார். இப்பொழுது, மற்றவர்களும் அவருடன் சேர்ந்து பிரார்த்தனை செய்தனர்.

Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms