குரு
தட்சிணாமூர்த்தி
சிவபெருமான் குருவாக வடிவம் கொண்டதே தட்சிணாமூர்த்தி என்று
அழைக்கப்படுகிறது. தென்முகக் கடவுள் என்று கூறப்படும் இவர் கோவில் கர்ப்பக்
கிரகத்தின் தென்பாகத்தில் தென்திசை நோக்கி வீற்றிருப்பார். கல்லால மரத்தின்
அடியில் யோக ஆசனத்தில் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் உபதேசிக்கும் முறையில், ஒரு திருவடி முயலகனை
மிதித்துக் கொண்டிருக்க, மற்றொன்று வீராசனமாக உள்ளது. நான்கு கைகளில் வலதுபக்க ஒரு கை
சின் முத்திரை தாங்கியும், ஒரு கை உத்திராட்ச மணி வடம் தாங்கியும் அருள்பாலிக்கிறது. இடது
பக்க ஒரு கையில் அமுத கலசமும், ஒரு கையில் வேதமும் உள்ளது. இவரை யோக தட்சிணாமூர்த்தி என்று
அழைக்கிறார்கள்.
இவர் ஞானத்தை கையால் காட்டும் அடையாளம் சின் முத்திரையாகும். சுட்டு விரலால் பெருவிரலின் அடியைச் சேர்த்து, மற்ற மூன்று விரல்களையும் துனித்துக் காட்டும் முத்திரை. பெருவிரல் இறைவனையும், சுட்டு விரல் ஆன்மாவையும் குறிக்கிறது. மற்ற மூன்று விரல்களில் நடுவிரல் ஆணவத்தையும், அணி விரல் கன்மத்தையும், சுண்டுவிரல் மாயயையும் குறிக்கும். இந்த மூன்றையும் கடந்தால் ஆன்மா இறைவனை அடையும் என்பதே இந்த முத்திரையில் உள் அர்த்தம் ஆகும். தட்சிணாமூர்த்தியை வணங்கி வழி படுவதால் பல்வேறு நன்மைகள் உண்டாகும்.
குரு தட்சிணாமூர்த்தி காயத்திரி மந்திரம்:–

‘ஓம் தக்ஷிணாமூர்த்தியே வித்மஹத்யாநஸ்தாய தீமஹி
தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத்’
பொருள்:– தட்சிணாமூர்த்தியை அறிவோமாக. தியானத்தில் இருக்கும் அவரைத் தியானம் செய்கிறோம். குருவாகிய அவர் நம்மை காத்து, நமக்கு ஊக்கம் தந்து செயலாற்றச் செய்வாராக.
தட்சிணாமூர்த்தியை அவரது ஸ்தோத்திரங்களால் துதித்து, அர்ச்சனை செய்து, கற்பூர தீபம் காட்டும் பொழுது, தட்சிணாமூர்த்தியின் காயத்திரி மந்திரத்தைச் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை பாராயணம் செய்வது நல்லது. இவ்வாறு செய்வதால் ஞானம் கிடைக்கும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். பயம் நீங்கும். வித்தைகளில் மேன்மை அடையலாம்.
-Arrowsankar
1 கருத்துரைகள்:
இறையருள் தங்களுக்கு கிடைக்க வேண்டுகின்றேன். நன்றி.
Post a Comment