ஆயுள் ஸ்திர தந்திர வழிபாடு:
பஞ்சாங்க சுத்தியுள்ள சனி, செவ்வாய், திரயோதசி திதி
ஆகிய தினங்களில் ஏதேனும் ஒருநாளில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.
ஸ்ரீதன்வந்த்ரி பகவான், விஷ்வக்சேனர், ஆயுள்தேவி வர்தனீ தெய்வங்களை கலசங்களில் ஆவாஹனம் செய்ய வேண்டும். ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், சித்தரத்தை, அதிமதுரம், வெட்டிவேர், விளாமிச்சை வேர் கலந்து ஒன்றாக்கிப் பொடி செய்து, சுத்த நீருடன் கலந்து, கலசங்களில் சேர்த்து முறைப்படி பூஜிக்க வேண்டும்.
9 செங்கற்களை செவ்வகமாக வைத்து யாக மேடை அமைத்து, 64 யாக மூலிகைகளுடன் நவ சமித்துகள், சீந்தில் கொடி, நாயுருவி, குங்கிலியம் ஆகியவற்றுடன் நெய் சேர்த்து அக்னி ஹோமம் செய்ய வேண்டும்.
1. ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய
பரம புருஷாய
சுக சௌக்ய வர்த்தநாய ரோக நாசநாய
ஆயுர் விருத்தி
கராய ஒளஷத ரூபிணே மம ரோகான் மோசய மோசய
சர்வ வியாதி
நாசாய ஹும்பட் விஷ்ணவே ஸ்வாஹா
2. ஓம் ஹ்ரீம் க்லீம் தன்வந்தரயே
அம்ருத ரூபாய
அம்ருதோத்பலாய
வியாதி நாசாய
ஆயுர் விருத்தி காரணாய மம
த்ரேக சௌக்யம்
குருகுரு ஸ்வாஹா
3. ஓம் ஆயுர்தேவதாயை,
வித்மஹே விஷ்ணு
ரூபாய தீமகி
தந்நோ
தன்வந்தரி ப்ரசோதயாத்
இந்த மந்திரங்களைக் கூறி ஹோம பூஜை முடித்ததும்,
பூர்ணாஹுதி (ஸ்ரீதன்வந்த்ரி காயத்ரியால்) செய்து, தூப-தீப நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காட்டிய பிறகு, கையில் துளசி மற்றும் நீலோத்பல மலர்களை எடுத்துக் கொண்டு, கீழ்க்காணும் மந்திரத்தை 5 முறை சொல்லி, தரையில் விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டும்.
ஓம் அச்சுதானந்த கோவிந்த விஷ்ணோ நாராயணாம்ருதா
ரோகான்மே நாசாய அசேஷான் ஆஸு தன் வந்தரே ஹரே’
வீடு வாங்குவதற்குப் பத்திரப் பதிவு செய்வோம். பத்திரப் பதிவு அலுவலகத்தில் நமது பெயரில் பத்திரம் பதியப்படுகிறதா என்று கவனமாக கவனிப்போம்.
ஆனால், நம் உடல் ஆரோக்கியத்தை பத்திரமாகக் கவனிக்கிறோமா என்றால், பெரும்பாலும் இல்லை என்றே சொல்லவேண்டும்.
ஒருவரது ஜாதகத்தில் ஆயுள் பாதக நிலை வரும் நேரத்தில், எளிதான பிரயோக விதி ஒன்றை, கடைப்பிடித்து நமது ஆயுளைப் பத்திரப்படுத்தலாம். இதை, ஆயுள் பத்திரம் என்றும் சிறப்பித்துச் சொல்லலாம்.
0 கருத்துரைகள்:
Post a Comment