குறுங்கதை 100 என்ற நூலில் நான் படித்து ரசித்தது.

நாட்டில் ஊழல்கள் மலிந்தன.
ஆட்சியாளர்கள் மக்களை
கொள்ளையடித்தனர். வதைத்தனர் . உயிர்ப்பலியும் அதிகமானது .
அயல்நாடுகள் மக்களுக்காக
அனுதாபம் காட்டின.
“மக்களைக் கொல்லாதே” என்றன .
“இது உள் நாட்டு விவகாரம் இதில் பிற நாடுகள் தலையிடுவது உலக
அரசியலுக்கு முரண்பாடானது” .
அந்த நாடுகள் வாயை மூடிக்கொண்டன.
உயிர் போகும் வேளையில் போராடாமல் மடிவதைவிட போராடி மடிவதே
மேல் என மக்கள் எண்ணினர்.
ஆயுதங்களை கையில் எடுத்தனர்.
அச்சமடைந்த ஆட்சியினர்
வெளிநாடுகளுக்கு அவசர செய்தி அனுப்பினர்.
“புரட்சி வெடித்து விட்டது ஆயுதங்களை அனுப்பி எங்கள் ஆட்சியை
காப்பாற்றுங்கள் “

Wednesday, June 26, 2013
Unknown





