வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Thursday, October 31, 2013

டாக்டர் ஏ.வி.ரமண தீட்சிதர்

HAPPY DIWALI-இனிய தீபாவளி வாழ்த்துக்கள் - Arrow SANKAR

நன்றி :நண்பர் திரு ஜீவானந்தம் அவர்கள் அனுப்பிய இமெயில் லிங்கில் இருந்து :-


நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டித்தரும் கோயிலும், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் தலமுமான திருமலை திருப்பதி கோயிலின் பிரதான அர்ச்சகரும், பிரம்மோற்சவ விழாவின்போது வலம் வரும் சுவாமி வாகனத்தில் இருப்பவரும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துவங்கி நடிகர் ரஜினிகாந்த் வரையிலான பிரபல விருந்தினர்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்லக்கூடியவரும், நாள்தோறும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் சொற்பொழிவு நிகழ்த்துபவரும், மாலிக்கியூல் பயலாஜியில் ஆராய்ச்சி படிப்பை முடித்து டாக்டர் பட்டம் பெற்றவருமான டாக்டர் .வி.ரமண தீட்சிதர் ஒரு நல்ல தமிழ் ஆர்வலரும் கூட.

பிரம்மோற்சவம் முடிந்த ஒரு நாள் மாலை நமது தினமலர்.காம் இணையதளத்தின் விருந்தினர் பகுதிக்காக விசேஷ பேட்டி வழங்கினார். அவரது பேட்டியிலிருந்து...

இப்போது எல்லாம் சாமியை நிம்மதியாக பார்க்க முடியவில்லை என பக்தர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். 1950ல் வந்திருந்தால் ஐந்து நிமிடம் அல்ல பத்து நிமிடம் நின்றால் கூட உங்களை போகச் சொல்ல ஆள் கிடையாது. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லையே. கடந்த மாதம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வந்திருந்தார். சரியாக இரண்டு நிமிடம் கூட சுவாமி முன் நின்று பிரார்த்தனை செய்திருக்கமாட்டார், அதற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றுவிட்டனர். ஆக ஒரு நிமிடம் கூட பார்க்கவில்லை என்று நினைக்காதீர்கள், மாறாக பத்து வினாடி பார்த்தேன் என்று திருப்தி அடைந்து கொள்ளுங்கள்.

பக்தி என்பது குளித்து முடித்து நாமம் இட்டு மந்திரம் சொல்லி பூஜை செய்து சாமி கும்பிடுவதோடு முடிந்துவிடுவதில்லை. அப்போதுதான் துவங்குகிறது. நாளின் ஒவ்வொரு நொடியும் உங்களை பெருமாள் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு மனம், மெய், வாக்கு ஆகிய மூன்றாலும் தவறேதும் செய்யாதிருப்பதே பக்தி.

எனக்கு எஜமான் பெருமாள்தான், எங்கோயோ இருந்த என்னை தனக்கு பூஜை செய்யும்படி அருகில் அழைத்து வைத்துக் கொண்டுள்ளார், அந்த காரியத்தில் கடுகளவும் குறைவின்றி செய்ய வேண்டும், செய்துவருகிறேன். அப்படி மனம்விரும்பி என் வேலையை செய்யும்போது ஏற்படும் பரவசம் பக்திக்கு ஈடானது. யாராக இருந்தாலும் மனம் சொன்னதை கேட்டு வேலையை ஈடுபாட்டுடன் செய்யுங்கள், அந்த தொழில் பக்தியைதான் பெருமாள் மிகவும் நேசிப்பார்.
தமிழ் ஆழ்வார்கள் பனிரெண்டு பேராலும் தமிழ் பாசுரங்களால் பாடி ஆனந்தமாக ஆராதிக்கப்பட்டவரே திருமலை பெருமாள். அவர் பள்ளி எழுந்தது முதல் திரும்ப பள்ளியறை போவது வரை அவரை ஆராதிப்பது தமிழ் பாசுரங்களே. இதன் காரணமாகவே நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் தெலுங்காக இருந்தாலும் தமிழை நானே விரும்பி படித்தேன்.
காலுக்கு செருப்பு கூட வாங்க முடியவில்லையே என்று கவலைப்படுபவன் காலே இல்லாதவனை பார்த்தபிறகு நமது கவலையில் நியாயமில்லை என்பதை உணர்வான் அது போல எல்லோருக்கும் அவரவர் நிலைக்கு ஏற்ப கஷ்ட, நஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். இதையே நினைத்துக் கொண்டு இருக்காமல் அதை கடந்து போகும் வழியை பார்க்க வேண்டும்.

உன்னிடம் அதிகாரம் இருந்தால் அதை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தாமல் இருப்பதும் குற்றம், அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு தப்பான விஷயம் நடக்கும் போது அதை பார்த்துக் கொண்டு தடுத்து நிறுத்தாமல் விட்டாலும் பாவம்.

முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்எஸ்ஆருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தபோது, " உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார்" எனக்கு ஒன்றும் வேண்டாம் ஆந்திரா மாநிலம் முழுவதும் உள்ள 34 ஆயிரம் கோவில்களைச் சேர்ந்த ஒரு லட்சம் அர்ச்சகர் குடும்பங்கள் நலம் பெற ஒரே ஒரு உத்திரவு போடுங்கள் என்றுதான் கேட்டேன்' அப்படியே உத்திரவிட்டார். இன்று அந்த ஒரு லட்சம் குடும்பமும் நிம்மதியாக இருக்கிறது.

ஆக பக்தியும் நிம்மதியும் ஆனந்தமும் குலசேகரபடிக்கட்டைத்தாண்டி கர்ப்பககிரகத்தில் மட்டும் இல்லை, உங்கள் மனதிலும் இருக்கிறது. வாழ்க்கையை நேசியுங்கள் அது எப்படி இருந்தாலும், அமைந்தாலும் ஒத்துக்கொண்டு வாழப்பழகுங்கள்.

உங்களுக்கு ஓன்று தெரியுமா? அன்றாடம் தன்னை வந்து சந்திக்கும் கோடிக்கணக்கான பக்தர்களின் வீடு வேண்டும், பணம் வேண்டும், வெளிநாட்டு வேலை வேண்டும் என்பது போன்ற ஆயிரக்கணக்கான "வேண்டும்' என்கின்ற வேண்டுதலை மட்டுமே கேட்கும் பெருமாள் கோடியில் ஒரு பக்தன் எனக்கு எதுவும் வேண்டாம் "நீதான் வேண்டும் நீ மட்டுமே வேண்டும்' என்று கேட்டு வர மாட்டாரா? அவரை வைகுந்தத்திற்கே அழைத்துச் சென்று அருகே வைத்துக் கொள்வோம் என எண்ணியுள்ளார், அந்த ஒரு பக்தராக மனதார மாறமுடியுமா? பாருங்களேன், என்று கூறி முடித்தார் டாக்டர் .வி.ரமண தீட்சிதர்.

நன்றி : தினமலர்.காம் இணையதளத்தின் விருந்தினர் பகுதிக்காக விசேஷ பேட்டி


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Wednesday, October 23, 2013

எல்லை


ஒவ்வொரு எல்லையும்
தாண்டி விட்டேன்
உன் எதிர்ப்பையும் மீறி
ஆனாலும் நானே தோற்றேன்.
உன்னிடம் தோல்விக்கூட
இன்பம் தருகிறது.
அதை உன்வெட்கம் இன்னும் அதிகமாக்குகிறது.

Thursday, October 3, 2013

தமிழ் கலாச்சாரங்களில் நவராத்திரி

நவராத்திரியை பற்றி முன்னமே 2012-ல் எழுதிய பதிவைப் படிக்க நவராத்திரி விரதம் இங்கு அழுத்தவும்.


தமிழ் கலாச்சாரங்களில் சக்தி கடவுளை இயற்கையுடன் இணைத்து இயற்கை தரும் உணவு (தானியங்கள்,பழங்கள்), மலர் , நீர்  (ஆறு,குளம்,ஊற்று,கடல்), ஆகிய
-வைக் கொண்டு இயல்பாய் 9 நாட்கள் இரவு வேளையில் பூஜிப்பதே நவராத்திரியாக மற்ற மொழி, மாநில மக்கள் வழிப்படுகிறார்கள்.
நோக்கமும்,பக்தியும் ஒன்றாக இருப்பதால் தற்போது இந்து மக்கள் அனைவரும் நவராத்திரியை சிறப்பாக அவரவர் வழிமுறையில் கொண்டாடி வருகின்றனர்.

ஜோதிட சாஸ்திர முறையில் பாவகத்தின் அடிப்படையில் ஆறாமிடமான கன்னிராசி(தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதம்) நோய் ஸ்தானமாக வருகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதத்தில் எல்லோரும் நவதானியங்களை உண்டு நோய் எதிர்ப்பு சக்தியினை பெற வேண்டி அதாவது புரட்டாசி மாதத்தில் முதல் நாளில் இருந்தே அசைவ மற்றும் கடின உணவு வகைகளை தவிர்த்தும், அமாவாசை மறுநாள் முதல் நாளில் இருந்து ஆரம்பித்து 9 நாட்கள் வரை இரவு வேளையில் பக்திப்பாடல்களை பாடி நவதானிய உணவுகளை உண்டும் வளம் பெறுகின்றனர். விழாவின் கடைசி மூன்று நாட்கள் சக்தி கடவுள்களின் கலைமகள் மலைமகள் அலைமகள் என மூன்று தெய்வங்களை தனித்தனியே வழிப்பட்டும் பத்தாவது நாளான தசமியன்று மூவரையும் இணைத்து கலைக்கும்,தொழிலுக்கும், வளத்திற்க்கும் வழிபடுகின்றனர்.

இதற்காக நமது ரிஷிகள்,முன்னோர்கள்,ஆன்மீக அடியார்கள் எழுதிய பல மந்திரங்கள்,துதிகள்,பாடல்கள் வழிவழியாய் சொல்லப்பட்ட நைவேத்யங்கள், பூஜை முறைகள் என பின்பற்றப் பட்டு வருகிறது.தமிழர் மரபில் அவை:-

1ம் நாள்: கோதுமை இனிப்பும்,சுண்டலும் உயிர்களை படைக்கும் காக்கும் தாயாக போற்றி பாடப்படுகிறது.

2ம் நாள்:  பால் பாயாசம், உலர்ந்த பழவகைகளும் சுண்டலும் உயிர்களை போஷிக்கும்(மனதை ஒருநிலை படுத்தும் முறையாக) தாயாக போற்றி பாடப்படுகிறது.

3ம் நாள்:  கேசரி,ஜாங்கிரி என சிவப்பு நிற இனிப்பும்,சுண்டலும்,துவரையில் செய்த காரமும் பாசநிலை போதிக்கும் தாயாக போற்றி பாடப்படுகிறது.

4ம் நாள்:  பாதாம்,முந்திரி இனிப்பும்,பச்சைபயிறு சுண்டலும் செய்து அறிவுநிலை போதிக்கும் குருவாக போற்றி பாடப்படுகிறது.

5ம் நாள்:  லட்டு இனிப்பும், சுண்டலும் செய்து ஞானநிலை போதிக்கும் குருவாக போற்றி பாடப்படுகிறது.
6ம் நாள்:  பலவகை இனிப்பும், சுண்டலும் செய்து செல்வநிலை வருஷிக்கும் ஆசைமனநிலையினை கட்டுப்படுத்தி உண்மை செல்வநிலையாய் போற்றி பாடப்படுகிறது.

7ம் நாள்:  வெல்லத்தினால் செய்த இனிப்பும், கருப்புசுண்டலும் செய்து உறுதியான உடல்நிலை போதிக்கும் வலிமையான தாயாக போற்றி பாடப்படுகிறது.

8ம் நாள்:  பலவகையான இனிப்பும், சுண்டலும் செய்து உத்வேக உடல்நிலையும் எதிரியினை எதிர்க்கும் வீரத்தாயாக போற்றி பாடப்படுகிறது.

9ம் நாள்:  பலவகையான இனிப்பும், சுண்டலும் செய்து எல்லாரும் சமமாக போற்றி தொழில்,கலைகள்,வாய்ப்புகள் பெருக ஆத்ம மனநிலை தாயாக போற்றி பாடப்படுகிறது.


10ம் நாள்:  பலவகையான இனிப்பும், சுண்டலும்,பொரிக்கடலையும் படைத்து வெற்றிவாய்ப்புகள் எல்லா நிலையிலும் பெருக வளமும் வெற்றியும் அளிக்க மூவுலக தாயாக போற்றி பாடப்படுகிறது.

இந்த நாட்களில் படிக்க வேண்டிய மந்திரங்கள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms