வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Sunday, December 30, 2012

எனது புது வருட சிந்தனை

காலம் அது பல வகையில் பலருக்கு பலவித அனுபவம் தந்துருக்கிறது ,தனிமனித சுதந்திரம் ,சமுதாய மாற்றம் என மறைமுகக் காரணிகளும் புயல் மழை பூகம்பம் விபத்து என நேர் முகக் காரணிகளும் நமக்கு தந்துருக்கிறது. டிசம்பர் 31 நமது முடிவாகாது அதேப் போல் ஜனவரி 1 நமது ஆரம்பமாகாது .வாழ் நாளின் எல்லா நாட்களுமே நமக்கு புதுப்புது வழியினை  வலியினை ஆனந்தத்தை இழப்பினை என பல அடுக்கு அனுபவங்களை தருகின்றது இதில் இன்பம் துன்பம் என்பது அவரவர் வாழ்வில் கலந்தே நடக்கிறது. எனவே டிசம்பர் 31 ல் கூத்தடிப்பதும் ஜனவரி 1 ல் பவ்யமாக நடந்துக் கொள்வதும் நாம் புது வருடத்தினை வரவேற்பது ஆகாது . காலம் அதன் பணியினை தானாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாமும் நமது பணியினை தனி மனித ஒழுக்கத்தின் மூலமாக தொடருவோம்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்    - திருவள்ளுவர் 


நமது கடந்த கால  நல்ல குணத்தையும், கெட்ட குணத்தையும் ஆராய்ந்து அவற்றுள் எது அதிகம் என்பதை அறிந்து கெட்ட குணத்தை தவிர்த்து நல்ல குணத்தை வளர்த்து புது வருட சபதமாக மேற்கொள்ளுவோம். 

அதேப் போல்,
கடந்த கால தோல்வியின் அனுபவங்களை இனி வரும் வெற்றிக்கு  
படிகளாக்குவோம்.

அனைவருக்கும் எனது  புது வருட  நல் வாழ்த்துக்கள் .

Monday, December 24, 2012

ஆசிரியனுக்கு இருக்க வேண்டிய குணங்கள் 

மஹா பாரதத்தில் நமக்கு வேண்டிய அரிய பல விஷயங்கள் உள்ளன.  திருதராஷ்டிரனுக்கு விதுரர்உபதேசித்தது  நமக்கு இன்றும் உபயோகமுள்ளது ஆகும்.  மேற்கொண்டு சிறந்த ஆசிரியனாக விளங்க கீழ்க் கண்ட குணங்கள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

1.
யார் ஒருவன் அடங்கிப் போன சண்டையை மூட்டிவிடாமல்  இருப்பானோ அவன் சிறந்த ஆசிரியன்.  - இந்த காலத்தில் நமது பகையை மறந்து இருக்கும்போது நமக்கு அதை நினைவூட்டி பகையை ஞாபகமூட்டி சண்டையை மூட்டி விடுபவர்களே அதிகம் இருக்கிறார்கள்.  நாம்தான் கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டும்.

2.
யாரிடம் கர்வம் இல்லையோ அவன் சிறந்த ஆசிரியன் - ஆசிரியனிடம் கர்வம் சிறிதளவும் இருக்கக் கூடாது.  எல்லாம் தெரிந்திருப்பதால்தான் அவன் ஆசிரியன் ஆவான்.  தனக்கு தெரிந்து  இருப்பதை கர்வமாக நினைப்பவன் சிறந்த ஆசிரியன் ஆக மாட்டான்.

3.
தனது வறிய நிலையை சொல்லாதவனே  சிறந்த ஆசிரியன் -  ஆசிரியன் தனது கஷ்டத்தப் பற்றி மாணவர்களிடம் சொல்லக் கூடாது.  எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கொடது.  இந்த காலத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம் இருந்தாலும் அவர்கள்  இன்னும் கிடைக்கவேண்டும் என்று நினைத்தால் அதை வறிய நிலை என்று எடுத்துக் கொள்ளலாம்.

4.
எந்த துன்பத்தில் இருந்தாலும் செய்ய கூடாத காரியத்தை செய்யாதவனே   சிறந்த ஆசிரியன். - ஆசிரியன் மிகுந்த ஒழுக்கத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும்.  தனக்கு எதாவது கஷ்டம் வந்தால் அதிலிருந்து தப்பிக்க எந்த கெட்ட காரியத்தையும் செய்து விடக் கூடாது.  பகவான் நம்மை சோதிக்கலாம்.  நாம்தான் மன தைரியத்துடன் எந்த கஷ்டத்தையும் தாங்கிக்கொள்பவராக  இருக்க வேண்டும்.
இவ்வாறு ஆசிரியனுக்கு இருக்க வேண்டிய குணங்களை விதுர நீதியில் கூறியுள்ளார்.

Sunday, December 23, 2012

நலன் தரும் சூரியபகவானின் திருநாமங்கள்

 
ஓம் மித்ராய நமஹ... சிறந்த நண்பன் ஓம் ரவயே நமஹ... போற்றுத்தலுக்குரியவன்
ஓம் சூரியாய நமஹ... ஊக்கம் அளிப்பவன்
ஓம் பானவே நமஹ... அழகூட்டுபவன்
ஓம் சகாய நமஹ... உணர்வுகளுக்கு வலிமை தருபவன்
ஓம் பூஷ்ணே நமஹ... புத்துணர்ச்சி தருபவன்
ஓம் ஹுரண்யகர்ப்பாய நமஹ... ஆற்றல் அளிப்பவன்
ஓம் மரீசயே நமஹ... நோய்களை அழிப்பவன்
ஓம் ஆதித்யாய நமஹ... கவர்ந்திழுப்பவன்
ஓம் சவித்ரே  நமஹ.... சிருஷ்டிப்பவன்
ஓம் அர்க்காய நமஹ... வணக்கத்திற்கு உரியவன்
ஓம் பாஸ்கராய நமஹ... ஒளிமிகுந்து பிரகாசிப்பவன்.
மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்தவாறு சூரிய நமஸ்காரம் செய்யும்போது நமது மனம் சிதறாமல் ஒருமுகப்படுகிறது. மந்திரத்தை உச்சரிக்கும் போது அதன் அதிர்வு நமது உடலின் எல்லா பகுதிகளுக்கும் செந்று பல உணர்வுகளை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.

Thursday, December 13, 2012

இறைவன்


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

 நன்றி: கவியரசு கண்ணதாசன்

ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம்

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத்தோரணாய அஜாமிள
பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

Monday, December 10, 2012

தர்மவான் சனீஸ்வர பகவான் 
பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம்.ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்றஒரே கிரகம் சனியாகும்.

ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும்முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு.ஆகையால்தான் சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லைஎன்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.

சாக்கடையில் பதுங்கிய இந்திரன்

ஒரு சமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று, ‘நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம்?’ என்று கேட்டான். அதற்கு சனி பகவான், ‘நான் நீதிமான். எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாதுஎன விளக்கம்சொன்னார். அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடுஎன்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரர் அந்த கால நேரத்தை தெரிவித்தார்.

சனீஸ்வரர் தெரிவித்த அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டுசாக்கடையில் போய் ஒளிந்துகொண்டான். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்த பிறகு வெளியே வந்த தேவேந்திரன், சனீஸ்வரரிடம் சென்று, ‘உங்கள் பார்வையில் இருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களாஎன்று பெருமையடித்துக் கொண்டான். சனீஸ்வரர்சிரித்துக்கொண்டே, ‘நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில்உழன்றீர்களே.. அதுகூட என் பார்வை, பீடிப்பினால்தான்என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் சமத்துவ நாயகன் என்பதை அறிய முடிகிறது.

சனீஸ்வரரின் அதிகாரம்

எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் திசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. ஆனால்சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன், கோச்சார பலமும் அதிகமாகும்.ஒருவர் பிறந்த ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும் ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார்.

நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், ‘சனியனே! உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுதுஎன்று சொல்லி திட்டுவார்கள். உன்னை புதன் பிடித்து ஆட்டுகிறது. கேது ஆட்டுவிக்கிறான் என்று யாரும் சொல்வதில்லை. எந்த கிரக திசா புக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும்.

இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் நம்மிடையே தவறாக ஏற்பட்டு விட்டது. இப்படி சர்வ வல்லமை பெற்ற சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. அந்த வகையில் சனிபகவான் தன் உச்ச ராசியை அடைய சுமார் 30 ஆண்டுகள் பிடிக்கும். தற்போது 2012-ம் ஆண்டு முதல் சனி தன் உச்ச வீடான துலா ராசியில் அமர்ந்துள்ளார்.

ஆகையால் பூரண பலத்துடன் திகழ்கிறார். இதனால் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த உச்ச சனியால் சகல யோக அதிர்ஷ்டங்கள், சுப விசேஷங்கள் கூடிவரும். யோக பாக்யத்தைஅருள்வார். மற்ற ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கங்கள், நிறை, குறைகள், கஷ்ட-நஷ்டங்கள் இருந்தாலும் உச்ச பலம் காரணமாக சில சாதகமான பலன்கள் உண்டாகும். ஜாதகத்தில் சனி திசை நடப்பவர்களுக்கு இந்த உச்ச நேரம் மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும்.

-
நன்றி  : ஜோதிட முரசுமிதுனம் செல்வம்

Saturday, December 8, 2012

மகனை கொன்ற இந்திய பெண்


பிரிட்டன சேர்ந்த இந்திய பெண் ஒருவர், குரானை மனப்பாடம் செய்யாத தன் மகனை நாய் போல அடித்தே கொன்றுள்ளார்.
ஐதராபாத சேர்ந்த யூசுப், சாரா ஈஜ் தம்பதியினர் பிரிட்டனில் வசித்து வருகின்றார். இவர்களின் மகன் யாசினை குரான் கற்கச் சொல்லி இருவரும் அறிவுறுத்தியுள்ளனர்.

குரான மனப்பாடம் செய்ய இயாலாமல் தவித்த யாசின் மீது கோபமடைந்த சாரா, மகனை தொடர்ந்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு, சாரா அடித்ததில் யாசின் இறந்து இருக்கிறார். பிறகு குற்றத்தை மறைக்க யாசின் உடலை எண்ணை ஊற்றி எரித்து புதைத்து இருக்கிறார்.

இந் செய்தி காவல் துறையினருக்கு தெரியவர சாரா மீது வழக்கு தொடரப்பட்டது. சாராவுக்கு எதிராக அவரது கணவன் இந்த வழக்கில் சாட்சியம் அளித்துள்ளார்.

கோபம தாங்காமல் குச்சியால் யாசினை முதுகில் ஒரு நாயை அடிப்பது போன்று அடித்து கொன்றதாகவும், அதில் யாசின் இறந்துவிட்டதாகவும் அவர் குற்றத்தை ஒப்புகொண்டுள்ளார்.

இதன அடுத்து சாரா குற்றாவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு , வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 வெள்ளி, 7 டிசம்பர் 2012( 16:35 IST )
குசும்பு குடுமியாண்டி : மதம், மனிதனை நல்வழி படுத்த மட்டும்தான். மனிதனை,மனித நேயத்தினை கொல்ல  அல்ல. இதை புரிந்துக்கொள்ளாத எந்த மதத்தை சார்ந்த மனிதனும் மனிதன் அல்ல. மிருக ஜாதியை விட  கீழ் தரமானவன். காட்டுமிராண்டி  ஆவான்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms