வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, March 30, 2012

தாயுமானவ ஸ்வாமி


 மாத்ருபூதம்,மாத்ர பூதம்,மாத்திரை பூதம்,ஏமாத்தற பூதம்

ன்னிடம் சில பேர், ‘‘அது என்ன சார் பூதம் என்றெல்லாம் பெயர்?’’ என்று கேட்பார்கள். ‘‘இல்லையப்பா. நான் திருச்சில பிறந்ததால அந்தப் பெயர். தாயுமானவ ஸ்வாமிக்கு சமஸ்கிருதத்தில் மாத்ருபூதம்என்று அர்த்தம். இந்த பூதம் என்ற பெயர் எனக்கு மேலும் பொருத்தமானதுதான். அதாவது... நான் பூதம் என்றால் மற்றவர்களை மாத்ர பூதம், நிறைய மாத்திரைகளைக் கொடுக்கறதினாலே மாத்திரை பூதம் என்றும் சொல்லலாம். ஆனால் ஒருநாளும் நான் ஏமாத்தற பூதம் இல்லை’’ என்பேன்.
-‘புன்னகைப் பூக்கள்நூலில்
 டாக்டர் மாத்ருபூதம்

Wednesday, March 21, 2012

குசும்பு குடுமியாண்டி-6


குசும்பு குடுமியாண்டி   -அரசியல் பார்வையாளர்
ரசித்த கார்ட்டூன்ஸ்
குசும்பு குடுமியாண்டி-5


குசும்பு குடுமியாண்டியின்  ௧மென்ட் : 5

குசும்பு குடுமியாண்டி 
அரசியல் பார்வையாளர்
மும்பை: கூட்டணி ஆட்சி என்பதால் கொள்கை முடிவுகள் எடுக்கும் போது கூட்டணி கட்சிகளை சமாளிக்க வேண்டியுள்ளது. கூட்டணி தர்மத்திற்காக கடும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது, என்ற பிரதமரின் பேச்சு தமக்கு மனதில் வேதனையை ஏற்படுத்துகிறது என மத்திய அமைச்சர் சரத்பவார் கூறினார். 8 வருடங்களாக கூட்டணி இருக்கும் எங்களை இப்படி பேசுவது சரியல்ல எனவும் வருத்தமடைந்தார்.

- தினமலர் 19.03.2012

குசும்பு குடுமியாண்டி : இதெல்லாம்  கூட்டணி சகஜம்ப்பா

Saturday, March 17, 2012

குசும்பு குடுமியாண்டி-4


குசும்பு குடுமியாண்டியின்  ௧மென்ட் : 4

குசும்பு குடுமியாண்டி 
அரசியல் பார்வையாளர்

புதுடில்லி : முக்கியமான விஷயங்களில், கடினமான முடிவுகளை எடுக்கும்போது, கூட்டணி கட்சிகளிடம் கலந்தாலோசிப்போம். அதே நேரத்தில், வேகமான, நிலையான, சமமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
- தினமலர் 16.03.2012

குசும்பு குடுமியாண்டி : பழி போடறது ஆள் வேணும்ல்லே

Friday, March 16, 2012

குசும்பு குடுமியாண்டி-3


குசும்பு குடுமியாண்டியின்  ௧மென்ட் : 3

குசும்பு குடுமியாண்டி 
அரசியல் பார்வையாளர்

சங்கரன்கோவில்: ""சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடிக்க முற்பட்டால் நான் தீக்குளிப்பேன்,'' என சங்கரன்கோவிலில் நேற்று இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
- தினமலர் 15.03.2012

குசும்பு குடுமியாண்டி :
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு

Wednesday, March 14, 2012

குசும்பு குடுமியாண்டி-2


குசும்பு குடுமியாண்டியின்  ௧மென்ட் : 2

குசும்பு குடுமியாண்டி 
அரசியல் பார்வையாளர்


சங்கரன்கோவில்: ""சங்கரன்கோவில் வெற்றியால் தே.மு.தி.க.,வுக்கு பயன் இல்லை,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். திருவேங்கடம் பிரசாரத்தில் அவர் பேசியதாவது: என் மகாலை கட்டித்தர, சட்டசபையில் நான் கோரிக்கை வைக்கவில்லை. மக்கள் பிரச்னையை பேசினேன், அவர்களுக்குப் பிடிக்கவில்லை. சங்கரன்கோவிலில் போட்டியிட சவால் விட்டனர். எனது, 29 எம்.எல்.ஏ.,க்களையும் பதவி விலகச்செய்கிறேன். 234 தொகுதியிலும் போட்டியிடத் தயாரா? தமிழகத்தில் கொள்ளை போவது தான், அ.தி.மு.க., அரசின் கொள்கை முடிவாக உள்ளது. சங்கரன்கோவிலில் வெற்றி பெறுவதால், எங்களுக்கு எந்த பயனும் இல்லை. அ.தி.மு.க., தோற்றால், தமிழகத்தில் விலைவாசி குறையும். என்னை, திட்டுவதற்குத் தான், ஜெ., பிரசாரத்திற்கு வருகிறார். மக்களுக்கு பயன் இருக்காது. நீங்கள் எங்களைப் பேசுங்க; நாங்க உங்களைப் பேசுவோம், அது வேற விஷயம். தேவையில்லாமல், என் தொண்டர்களைச் சீண்டாதீர்கள். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
- தினமலர் 14.03.2012


குசும்பு குடுமியாண்டியின்  ௧மென்ட் :
எங்களுக்கு அப்பிடியெல்லாம் ஒன்னும் பயனில்லாம இல்லை. எங்க தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ.கிடைப்பாருங்கோ.

Tuesday, March 13, 2012

குசும்பு குடுமியாண்டி-1


குசும்பு குடுமியாண்டியின்  ௧மென்ட் : 1

குசும்பு குடுமியாண்டி 
அரசியல் பார்வையாளர்

புதுடில்லி : "பார்லிமென்டில் எங்களுக்கு எதிராக எழுப்பப்படும் சவால்களை சந்திப்பதற்கு, தேவையான அளவுக்கு எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியதை ஒட்டி, பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 
அவர் கூறியதாவது:நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளை அடுத்து, லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்கவுள்ளதாகவும், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள், வேறு கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது அணி அமைக்க முயற்சித்து வருவதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். எங்களை பொறுத்தவரை, பார்லிமென்டில் மத்திய அரசுக்கு எதிராக எழுப்பப்படும் சவால்களை சந்திப்பதற்கு தேவையான அளவுக்கு, எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு பார்லிமென்டில் நெருக்கடி ஏற்படுவது வழக்கமான விஷயம் தான். பார்லிமென்டில், அனைத்து பிரச்னைகளையும், விவாதிப்பதற்கும், ஆலோசிப்பதற்கும், நாங்கள் தயாராகவே உள்ளோம். தற்போதைய சூழலில், நாட்டுக்கு பல சவால்கள் உள்ளன. இந்த சவால்களை வெற்றிகரமாக முறியடிக்க, அனைத்து அரசியல் கட்சிகளும், அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.
- தினமலர் 12.03.2012

குசும்பு குடுமியாண்டியின்  ௧மென்ட் :
பல ழல்கள்,பல விதமான சர்ச்சைகள் , தோல்விகள் என இருந்தாலும் மானம் கெட்டுபோய் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வது மட்டுமே இன்றைய அரசியல் என்பது போல நமது பிரதமரின் ஒரே பேச்சாக உள்ளது இது மிகவும் விந்தையாக உள்ளது.இதைத்தான் என்  குரு சொல்லுவாரு, மானம் கெட்டவன் ஊருக்கு ராஜாவாக இருப்பான்னு. சரியாத்தான் இருக்கு.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms