வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Tuesday, December 31, 2013

புது வருட வாழ்த்துக்கள்


இந்த வருடத்தில் இதுவரை அவரவர் வழியில் நடந்த நிகழ்வில் இருந்து நாம் அனுபவித்து கற்றுக் கொண்டவை அனைத்தும் இனி வரும் நாட்களுக்கு பாடமாகவும் முன்னோட்டமாகவும் இருக்கும்.

அதில் உற்சாகம்,சந்தோசம்,விழா,கலவரம்,சங்கடம்,சோகம் என எல்லாமே அடங்கும். இவையெல்லாம் இனி மீண்டும் வரலாம் வராமல் போகலாம். ஆனால் தடுக்க வேண்டியவைகளை தடுத்தும் உற்சாகத்தினையும் மேலும் அதிகரிக்கவும்  சந்தோசத்தினை பகிர்ந்துகொள்ளவும் இனி வரும் நாளை எதிர்க்கொள்ளும் மனோபாவத்தினை கொண்டு தயாராவோம். எந்நாளும் புத்தாண்டாய் மலரும் .


அனைவருக்கும்
வான்மீகீ பிரார்த்தனை மன்றம்
சார்பில்

எனது இனிய உள்ளங்கனிந்த 
ஆங்கில புத்தாண்டு 2014 வாழ்த்துக்கள் 

அன்புடன்
‘ARROW ’ சங்கர்

Tuesday, December 24, 2013

வரலாறு படைத்த துப்பாக்கியின் வரலாறு


உலகம் முழுவதும் .கே.–47’ துப்பாக்கி பிரபலமாக விளங்குகிறது. 10 கோடிக்கும் அதிகமானதுப்பாக்கிகள் புழக்கத்தில் இருக்கின்றன. இந்த துப்பாக்கியை ரஷியாவை சேர்ந்த நிபுணர்  கலாஷ்நிகோவ் என்பவரே  வடிவமைத்து  தயாரித்தார்.
அவரின் பெயரினை கொண்டே அதாவது A என்பது ஆட்டோமாட்டிக் (தானியங்கி) என்றும் K என்பது அவர் பெயரின் (கலாஷ்நிகோவ்) முதல் எழுத்தும் ஆக மற்றும் வெளியிட்ட ஆண்டு 1947 என்பதின் 47 இணைத்து  AK 47 என  அழைக்கப் பட்டது
94 வயதான அவர் தனது சொந்த ஊரான இஸ்ஹெவ்ஸ்க் நகரில் நேற்று முன் தினம்  மரணம்  அடைந்தார். உடல்நலக்குறைவு காரணமாக  அவர் மரணம்  அடைந்ததாக உட்மெர்தியா  குடியரசின்  செய்தித் தொடர்பாளர்  விக்டர் ஷூல்கோவ் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் கலாஷ்நிகோவ் தனது  21-வது  வயதில் உள்ளூர் ரெயில்வே  ஒர்க்ஷாபில்  துப்பாக்கி  ஒன்றை  தயாரித்தார். பிறகு  5  ஆண்டுகள்  தீவிர முயற்சியில் ஈடுபட்டு அதில் பலமாற்றங்களை செய்து 1946–ல்  .கே.–47 துப்பாக்கியை வடிவமைத்தார்.
1947 பிப்ரவரி மாதம் பெரியஅளவில் உற்பத்தி தொடங்கப்பட்டது. பிறகு 1949–ல்  அது சோவியத் ரஷியா ராணுவத்தில்சேர்க்கப்பட்டது. தனது 30–வது  வயதில்  ஸ்டாலின் பரிசை பெற்றார்.
90-வது  வயதில்  அவரை  பாராட்டி ரஷியாவின் ஹீரோ  என்ற  பட்டம்  வழங்கி  தங்கப்பதக்கம் அணிவித்து கவுரவிக்கப்பட்டார். கடந்த ஜூன்மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு பேஷ்மேக்கர் பொருத்தப்பட்டது. இப்போது அவர் மரணசெய்தி வெளிவந்துள்ளது.
விக்கிப்பீடியாவில் இருந்து.....ஏகே-47 (Ak-47, 1947 இன் கலாசுனிக்கோவ் தானியங்கி துப்பாக்கி) 7.62 மிமீ  தாக்குதல் துப்பாக்கி  சோவியத் ஒன்றியத்தில் மிக்கைல் கலாசுனிக்கோவ்  என்பவரால் இரு வகையாக உருவாக்கப்பட்டது.ஒன்று நிலையான பிடியுடன் (Fixed Stock) கூடிய ஏகே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன் (Metal soulder stock) தயாரிக்கப்பட்டது.இந்தத் துப்பாக்கி 1944 முதல் 1946 வரை வீரர்கள் பழகுவதற்காக சோதனை முயற்சியாக இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது.  1949  முதல் அதிகாரப்பூர்வமாக சோவியத் இராணுத்தில்  சுடுகலனாக (Carbine) அல்லது துப்பாக்கியாக சேர்க்கப்பட்டது.இதுதான் முதன் முதலில் குறைந்த செலவில் நீடித்து உழைக்கக்கூடிய, பயன்படுத்துவதற்கு எளிதான தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கியாகும். உலகளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கியும் இதுவே.இரண்டாம் உலகப்போரின் போது தயாரிக்கத் தீர்மானிக்கப்பட்டு அதன்படி உருவாக்கப்பட்டு உலகப்போர் முடிவுற்றபின் பயன்பாட்டுக்கு வந்தது.

அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Monday, December 23, 2013

தூங்குவது எப்படி?


பல விதமான விஷயங்களை எல்லா மதங்களும் ஆராய்ந்து அதனை அம்மதத்தின் அடிப்படையில் மனித நலத்திற்கு வழங்கப்படுகிறது.அப்படி உள்ள விஷயங்களில் தூங்குவது கூட எப்படி என்று கூறப்பட்டுள்ளது.

தூங்கும் முறைகள்
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.
இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி
சித்தர் பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்
இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.
மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

குறிப்பு :இதை எந்த புத்தகத்தில் இருந்து எடுத்தது என்பதை வரும் பதிவில் தெரிவிக்கிறேன்.
Thursday, December 5, 2013

நெல்சன் ரோபிசலா மண்டேலா


நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா என்பதாகும். 1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி பழங்குடி இனத் தலைவரின் மகனாக பிறந்த நெல்சன் மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக் கிடந்த தென்னாப்ரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு கொண்டு சென்ற மகத்தான தலைவர் ஆவார்.
குத்துச் சண்டையிலும், போர் கலையிலும் வல்லவராக திகழ்ந்த மண்டேலாவுக்கு அவரது ஆசிரியர் சூட்டியப் பெயரே நெல்சன் என்பதாகும். பழங்குடியினத்தில் பிறந்திருந்தாலும், படிப்பறிவை பெறுவதில் பெரும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன், தென்னாப்ரிக்க பல்கலைகளில் பட்டப்படிப்பை முடித்து தென்னாப்ரிக்காவில் சட்டக்கல்வியையும் பெற்றார்.
தென்னாப்ரிக்காவில் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையர்களிடமே ஆட்சி அதிகாரம் இருந்தது. அவர்களது அடக்குமுறை கருப்பின மக்கள் மீது திணிக்கப்பட்டது.
இதனால் வெகுண்டு எழுந்து, தென்னாப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய தலைவர்களில் முக்கியமானவராக விளங்கிய மண்டேலா, முதலில் காந்திய முறையில் அகிம்சை வழியில்தான் தனது போராட்டத்தைத் துவக்கினார். ஆனால், பிறகு அவரே ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் ராணுவப் பிரிவுக்கும் தலைமை தாங்கி போராட்டத்தை வழி நடத்தினார். இதன் மூலம், நிறவெறி அரசுக்கு எதிராக மிகக் கடுமையான கெரில்லாப் போர் முறைத் தாக்குதலை நடத்தினார்.
இதனால், 1962ஆம் ஆண்டு அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நிறவெறி அரசு, 27 ஆண்டு காலம் மிகச் சிறிய சிறை அறையில் அடைத்து தனது நிறவெறியை வெளிக்காட்டியது. ராபன் தீவுப் பகுதியில் அமைந்த திறந்தவெளி சிறிய சிறை அறையில் பெரும்பாலான சிறைக் காலத்தை கழித்த மண்டேலா, சிறைக் காலத்தில் அனுபவித்த கொடுமைகள் சொல்லி மாளாதவை. எனினும், அவரது போராட்ட உணர்வு மட்டும் சோர்ந்து போகவில்லை.
உலக வரலாற்றிலேயே மண்டேலாவைப் போல இத்தனை காலம் சிறையில் கழித்த தலைவர் யாரும் இல்லை என்கிறது வரலாறு.
மண்டேலாவை விடுதலை செய்ய உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வலுத்தன. அவரது மனைவி சார்பில் தென்னாப்ரிக்காவில் போராட்டம் வலுத்தது. இதையடுத்து, 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி  மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.  அப்போது அவருக்கு வயது 71.
1990ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா விடுதலையானதை உலகமே வரவேற்றது. தென்னாப்ரிக்காவில் குடியரசு மலரவும் காரணமானார். அதோடு, தென்னாப்ரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகவும் 1994ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார் நெல்சன் மண்டேலா. அவரது பதவிக் காலம் முடிந்ததும், 2வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார். 2008ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்தார் மண்டேலா.
அப்போதும் ஓயாமல், பல்வேறு நலப் பணிகளுக்காக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருந்தால் மண்டேலா.
பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு குணமடைந்து, வீடு செல்வதும், சில நேரம் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்று வந்த நெல்சன் மண்டேலா சில வாரங்களாக மரண படுக்கையில் விழுந்தார். அவர் தனது பேசும் திறனை இழந்து, குடும்ப உறுப்பினர்களின் ஆறுதல் வார்த்தையாலும், உற்சாக மொழிகளாலும் உயிர் பிழைத்து வந்தார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று (2013ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி)நெல்சன் மண்டேலா தனது 95வது வயதில் உலக மக்களை எல்லாம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு மரணம் அடைந்தார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms