வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, November 20, 2013

கொடிய நரகங்கள்

1 . பிறன்மனைவி,குழந்தை,பொருள் இவற்றை கொள்ளையடிப்போர்அடையுமிடம் தாமிரை நரகம். 

2 . 
கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில்இருள்,கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.

3 .
அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப்பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும்.

4. 
குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்துதுன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும்.

5. 
தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில்வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம்.

6. 
பெரியோரையும்பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும்நரகம் காலசூத்திரம்.

7. 
தன தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்தஅதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும்.

8 .
அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக்கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.

9. 
சித்திரவதைதுரோகம்கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம்அந்தகூபம்.

10.
தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து,பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.

11 .
பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால்அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினிகுண்டம்.

12. 
கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும்மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம்.

13. 
நன்மைதீமைஉயர்வுதாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டுஎல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம்சான்மலியாகும்.

14 .
அதிகார வெறியாலோகபடவேசத்தாலோநயவஞ்சகத்தாலோநல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி.

15 .கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தனவழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும்கயவர்கள் அடையும் நரகம் பூயோதம்.

16 .
பிராணிகளைத் துன்புறுத்திக் கொலை புரியும் கொடுமைக்காரர்கள்அடையும் நரகம் பிராணரோதம்.

17 . 
டம்பத்திற்க்காக பசு வதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம்.

18 .
வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி விபரீத மோக இச்சைக்குஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம்.

19 .
வீடுகளுக்கு தீ வைப்பதுசூறையாடுவதுஜீவா வதை புரிவது,விஷமூட்டுவது, கூட்டங் கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்றசெயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.

20 .
பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள்அடையும் நரகம் அவீசி.

21 .
எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும்குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம்.

22 .
தன்னை மட்டுமே பெரியதாய் மதித்து பெரியோரையும்நல்லோரையும்அவமதித்து தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் கஷாரகர்த்தமம்.

23 .
நரமேத யாகம் புரிதல்ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம்புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினைபுரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம்.

24 .
எவ்விதத் தீமையும் புரியோதாரைக் கொல்லுதல்நயவஞ்சகமாகக்கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல்நம்பிக்கைத் துரோகம்புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம்.

25 .
தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம்.

26 .
பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும்நரகம் வடாரேவதம்.

27 .
வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும்பகிர்ந்துண்ண விரும்பாத சுயனலவாதிகாலும் அடையும் நரகம்பரியாவர்த்தனகம்.

28 .
செல்வச் செருக்காலும்செல்வாக்கினாலும்பிறரைத்துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்துஅறநெறிகளில்செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம்என்பதாகும்.

Monday, November 18, 2013

அம்மா உணவகத்தில் சப்பாத்தி


ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரம் சப்பாத்திகளை தயாரிக்கும் நவீன எந்திரம் மூலம், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் நாளை மறுநாள் (21.11.13) முதல் ரூ.3–க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்பட உள்ளது. இந்ததிட்டத்தினை முதல்அமைச்சர் ஜெயலலிதா காணொலிகாட்சி மூலம் அறிமுகம் செய்து வைக்கிறார்.
அம்மா உணவகம்
சென்னையில் வார்டுக்கு ஒன்றுவீதம் 200 வார்டுகளிலும் சென்னை மாநகராட்சியின் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை காலை உணவாக ஒரு இட்லி ரூ.1–க்கும், பொங்கல் ரூ.5–க்கும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் மதிய உணவாக ரூ.5–க்கு சாம்பார் சாதமும், ரூ.5–க்கு கறிவேப்பிலை சாதம் அல்லது எலுமிச்சை சாதமும், ரூ.3–க்கு தயிர் சாதமும் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள 200 அம்மா உணவகங்களிலும் மாலை நேர உணவாக ரூ.3–க்கு, 2 சப்பாத்திகளும், பருப்பு கடைசலும் வழங்கப்படும் என்று முதல்அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
ரூ.3–க்கு 2 சப்பாத்திகள்
அதன்படி, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் (புதன்கிழமை) முதல் மாலை நேர உணவாக ரூ.3–க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான பணியில் சென்னை மாநகராட்சி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.
சென்னையில் 14 மையங்களில் ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரம் சப்பாத்திகளை தயார் செய்யும் நவீன எந்திரம் பொருத்தப்பட்டு, சோதனை அடிப்படையில் சப்பாத்திகள் தயார் செய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகின்றது. சோதனையில் சப்பாத்தியின் சுவையும், பருப்பு கடைசல் சுவையும் அருமையாக வந்துள்ளது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ரூ.3–க்கு 2 சப்பாத்திகள் மற்றும் பருப்பு கடைசல் வழங்கும் திட்டத்தினை முதல்அமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிகாட்சி மூலம்(வீடியோகான்பரன்சிங்)நாளை மாலை அறிமுகம் செய்து வைக்கிறார்.
தனியார் நிறுவனம்
அம்மா உணவகத்தில் சப்பாத்தி வழங்கப்படுவது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சென்னை மாநகராட்சி அம்மா உணவகங்களில் சப்பாத்தி செய்வதற்கான கோதுமைகளை தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகம் வழங்குகிறது.
சப்பாத்தி தயார் செய்யும் பணியினை கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு தனியார் கேட்டரிங் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அந்த நிறுவனம் தான் நவீன சப்பாத்தி எந்திரங்களை கொள்முதல் செய்து வழங்கி உள்ளது.என்றார்.
 பார்சல் கிடையாது
* ஒரு சப்பாத்தி 6 அங்குலம் அளவும், 30 கிராம் எடையும் கொண்டது.
* சப்பாத்தியுடன் 40 மில்லி கிராம் பருப்பு கடைசல் வழங்கப்படும்.
* மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சப்பாத்திகள்(இருப்பு இருக்கும் வரை) கிடைக்கும்.
* காலை மற்றும் மதிய உணவுகளை போன்றே சப்பாத்திகளுக்கும் பார்சல்கள் கிடையாது.
* முதற்கட்டமாக ஒருநாளைக்கு ஒரு அம்மா உணவகத்துக்கு 2 ஆயிரம் சப்பாத்திகள் வீதம் 200 அம்மா உணவகத்துக்கு 4 லட்சம் சப்பாத்திகள் தயார் செய்து வழங்கப்படும்.
* 25 கிலோ கோதுமை மாவு நவீன எந்திரம் மூலம் 15 நிமிடங்களில் பிசையப்படுகிறது.
* ஒரு கிலோ கோதுமை மாவில் 40 சப்பாத்திகள் வரை தயார் செய்யப்படுகிறது.
நன்றி : தினத்தந்தி

Sunday, November 17, 2013

பற்களை பளிச்சென்று வைக்க


பொதுவாகவே கால்சியம் சத்து பற்களுக்கு உறுதியை அளிக்கிறது. பற்கள் எப்போதும் பளிச்சென்று இருக்க அதனை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.
பற்களை தேய்க்கிறோம் என்று பிரஷ்ஷில் பேஸ்டை வைத்து 5 நிமிடம் தேய்த்து துப்பி விடுவதால், பற்களுக்கு எந்த பெரிய நன்மையும் விளைந்துவிடப் போவதில்லை.
அதற்கு பதிலாக பற்களை தேய்த்ததும், பல் ஈறுகளை விரலை வைத்து நன்கு அழுத்தி மசாஜ் செய்வது போல தேய்த்து விட வேண்டும். அப்போதுதான், ஈறுகளில் தேங்கியிருக்கும் கெட்ட நீர் வெளியேறி, ஆரோக்கியமான பற்களைப் பெறலாம்.
அதேப்போல, கருப்பு டீ, சிகரெட் பிடிப்பது, பான்பராக் சாப்பிடுவது, அடர்த்தியான நிற பழச்சாறுகளை அடிக்கடி குடித்தால் பற்களின் நிறம் மங்குகிறது.
எனவே, இதுபோன்ற பொருட்களை சாப்பிட்டதும், பற்களை துலக்கினால் மங்கலான பற்கள் மாறி பளிச்சென்ற பற்களைப் பெறலாம்.

இதய நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள 3 வழிகள்


இதய நோய்.. அவசர உலகில் மோசமான உணவு பழக்க வழக்கம் மற்றும் உடல் உழைப்பின்மை காரணமாக பலருக்கும் ஏற்படும் நோய்களில் ஒன்றாக இதய நோய் உள்ளது.
உடல் உழைப்பின்மையும், நொறுக்குத் தீணி பழக்கமும், உடல் பருமனை ஏற்படுத்துகிறது. இதன் மூலமாக இதய நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
இதனை தவிர்க்க மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும்.
அதாவது, ஆரோக்கியமான உணவு... ஆலிவ் ஆயில், தானியங்கள், காய்கறிகள், கடல் உணவுகள் போன்றவற்றை ஆரோக்கியமாக தயாரித்து சுகாதாரமான முறையில் உண்ண வேண்டும். இன்னமும், க்ரிக் நாடுகளில் தங்களது பழமையான உணவுப் பழக்கத்தைக் கையாறும் மக்களுக்கு இதய நோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வுகள் சான்றளிக்கின்றன.
சிகரெட் பிடிக்காதீர்
இதயநோய்களை ஏற்படுத்தும் காரணிகளில் சிகரெட் பிடிப்பது முக்கியமான விஷயமாக உள்ளது.  இந்த காரணத்தால், அமெரிக்காவில் தற்போது புகைப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஆனால், மோசமான செய்தி என்னவென்றால், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இந்தியா, சீனாவில் புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய் மட்டுமே ஏற்படும் என்று எண்ணி வந்துள்ளோம். ஆனால், புகைப்பதால் இதய நோய் ஏற்படும் என்ற விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
நடையை ஓரம்கட்டாதீர்
பலருக்கும் இப்போது நடப்பதற்கான வாய்ப்பே குறைவாக உள்ளது. எங்கு செல்வதென்றாலும் வாகனத்திலும், ஆட்டோவிலும் செல்கிறோம். முன்பெல்லாம் வசதி இல்லாததால் அதிகம் நடந்தார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தார்கள். இதய நோய் ஏற்பட்டு மருத்துவமனைக்கு நடையாய் நடக்க வேண்டாம் என்று விரும்பினால், இப்போதே ஆரோக்கியமாக நடைபயணம் மேற்கொள்வோம்.

பன்றிக் காய்ச்சலுக்கு மருந்து!


தோஷங்களாகிய வாத, பித்த கபங்களின் சம்பந்தமில்லாமல் எந்தவித காய்ச்சலாகட்டும், நோய்களாகட்டும் ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
வெயிலில் பறக்கும் பறவை, தன் நிழலைப் பார்த்து "நீ மேற்கே போ, நான் தெற்கே போகிறேன்' என்று எவ்வாறு கூற இயலாதோ, அதைப் போலவே, நோய்கள் எத்தனை வகையானாலும், மூன்று தோஷங்களின் சேர்க்கை இல்லாமல் ஏற்பட வாய்ப்பில்லை. அந்த வகையில் பன்றிக்காய்ச்சலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்தே தோஷங்களின் சீற்றத்தை ஊகித்தறிந்து வைத்தியம் செய்தோமேயானால், நோய் விரைவில் விலகிவிடும்.
எச்.என். வைரஸ், உடலில் கட்டுக்கோப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தோஷங்களின் உள்ளே ஊடுருவும்போது, தோஷங்கள் தம் கட்டுப்பாடுகளை இழந்து சீற்றம் கொள்கின்றன. இருமல், தும்மல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, வாந்தி, நாக்கு சுவையற்றுப்போதல், சோம்பல், நாவறட்சி, கொதிப்புடன் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவை வாத கப தோஷங்களின் சீற்றத்தால் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் அவர் அருகில் சென்று பேசுவதை தவிர்க்க வேண்டும். தும்முவது, இருமுவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். மேலும் அந்த நபருக்கு வெந்நீர் பருகச் செய்வது மிகவும் நல்லது.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகளுடன் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டால் பித்த தோஷத்தின் "சரம்' எனும் மலத்தை இளக்கும் குணம் சீற்றமடைந்திருப்பதைத் தெரிவிக்கிறது. அந்த நிலையில் சாதாரண வெந்நீரைவிட கோரைக்கிழங்கு, பர்பாடகம், வெட்டிவேர், சந்தனம், நன்னாரி, சுக்கு ஆகிய மூலிகைகளைச் சம அளவில் மொத்தமாக பதினைந்து கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, அரை லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, வடிகட்டி, சூடு ஆறியதும் சிறுகச் சிறுகப் பருகச் செய்ய வேண்டும். இதற்கு "ஷடங்க பாநீயம்' என்று பெயராகும்.
இந்த இருவகை நீரும் செரிமானத்தைத் தூண்டி உடலில் உணவுச் சத்து, இரத்தம் பரவும் வழிகள், வியர்வை தோன்றும் வழிகள் ஆகியவற்றைத் தூய்மையடையச் செய்யும். உடலுக்கு வலுவைக் கூட்டும். சுவையுண்டாக்கும். உடலை வியர்க்கச் செய்யும். பன்றிக் காய்ச்சல் ஏற்படாதிருக்கவும் இந்த ஷடங்க பாநீயம் எனும் நீரை யாவரும் பருகலாம். வியாக்ரயாதி கஷாயம் 15 மிலி எடுத்து 60 மிலி வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து சிட்டிகை தாளீசபத்ராதிசூரணத்துடன் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட உகந்தது.
முன் குறிப்பிட்ட அறிகுறிகளுடன் நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், சளியில் ரத்தம் கலந்திருத்தல், மயக்கம், ரத்த அழுத்தம் குறைந்து விடுதல், நகங்கள் நீல நிறமாக மாறுதல், கோழை, பித்தம் அதிகமாக வெளியேறுதல், வாய் குழ குழத்தல், வாய்க்கசப்பு, தூங்கி வழிதல் போன்றவை காணப்பட்டால் கபத்துடன் பித்தம் சீற்றமாகியுள்ளதாக அறியலாம்.
ஒரு வில்வாதி குளிகையை, 15 மிலி குடூச்யாதி கஷாயத்துடன் சேர்க்கப்பட்ட 60 மிலி தண்ணீரில் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, காய்ச்சலுடன் கூடிய மேற்கூறிய அறிகுறிகள் மறைந்து விடும். ஆய்வகப் பரிசோதனையில் நோயாளிக்கு எச்.என்.வைரஸ் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டால் ஆஸ்பத்திரி அல்லது வீட்டில் தனி அறையில் ஓய்வெடுத்து மருந்தைச் சாப்பிட்டு வர வேண்டும்.
வாத பித்த தோஷங்களின் சீற்றத்தால் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டால் தலைவலி, விரல் கணுக்கள் சிதைந்து போவது போன்ற துன்பம், உடல் கொதித்தல், மயிர்க்கூச்செரிதல், தொண்டையும் வாயும் வறண்டு போதல், வாந்தி, நாவறட்சி, மயக்கம், மூர்ச்சை, நாக்கு சுவையற்றுப் போதல், தூக்கமின்மை, அதிகமாகப் பேசுதல், கொட்டாவி போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்துகாந்தம் கஷாயம் 15 மிலி, 60 மிலி வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து, ஒரு ஸ்வர்ண முக்தாதி மாத்திரையுடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
பன்றிக் காய்ச்சல் இருமல், தும்மல், சளி அதிகமிருந்தால் சீதச் ஜுராரி எனும் கஷாயம், துளசி மற்றும் மிளகு ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது. அதை காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட இது போன்ற அறிகுறிகள் குறைவதுடன் மற்றவர்களுக்குப் பரவும் தன்மையும் குறைந்துவிடும்.
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

அழகுக்கு அழகு சேர்க்கும் தக்காளி


பொதுவாக தக்காளி அனைத்து வீடுகளிலும் சமையலறையில் பயன்படுத்தும் பொருள். பெண்களின் அழகை கூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களை அழகுப் படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வதை விட வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து நம்மை அழகுப்படுத்தி கொள்ளலாம்.
* தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் பூசினாற் போல் ஆகிவிடும்.
* ஒரு சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும் மேக்கப் போட்டாலும் தங்காது. இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும். எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும்.
* தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.
* உருளைக்கிழங்கு துருவல் சாறு 1 தேக்கரண்டி, தக்காளி விழுது அரை தேக்கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து தக தகவென்று மின்னும்.
* சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டதா? தக்களி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள்.
* தக்காளிச் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பிரகாசிக்கும். இதுதான் இயற்கை ஸ்கரப்பாக உபயோகிக்கலாம்.

சீதாப்பழம் மில்க் ஷேக் ஜூஸ்


தேவையான பொருட்கள்.....
விதை நீக்கிய சீதாப்பழம் - 100 கிராம்,
சுகர் - 200 கிராம்,
தண்ணீர் - 100 மி.லி.
எலுமிச்சம்பழச்சாறு  -  2 அல்லது 3 துளிகள்,
பால் - தேவையான அளவு,
செய்முறை...
* விதை நீக்கிய சீதாப்பழத்தை மிக்ஸியில் அரைத்து கூழாக்கி பால், தண்ணீர், எலுமிச்சம் பழம், சுகர், எல்லாத்தையும் கலந்து ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* தேவையான போதெல்லாம் அப்படியே எடுத்துக் குடிக்கலாம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கெடாமல் இருக்கும். இதை காலை நேரங்களில் குடிப்பது தான் சரியானது!

ஆரோக்கிய ஜூஸ்


தேவையான பொருட்கள்....

புதினா - கைப்பிடி அளவு,
துளசி - கைப்பிடி அளவு,
கற்பூரவள்ளி இலை -கைப்பிடி அளவு,
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
சுக்குப் பொடி - கால் டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
சர்க்கரை- 200 கிராம்,
தண்ணீர் - 100 மில்லி
எலுமிச்சம் பழம் -கால் பழம்.
செய்முறை....
* புதினா, துளசி, கற்பூரவள்ளி இலை, மூன்றையும் நன்றாக கழுவி  மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
• அதோடு மிளகுத்தூள், சுக்குப்பொடி, உப்பு கலந்து கொள்ளவும்.
• சர்க்கரை, தண்ணீர், எலுமிச்சம் பழத்தைக் கலந்து சூடேற்றி ஆறிய பிறகு, தனியாக வைத்திருந்த அனைத்தையும் ஒன்று சேர்த்தால் ஆரோக்கி ஜூஸ் ரெடி.
• அரை க்ளாஸ் மெடிக்கல் ஜூஸோடு பெரியவர்களுக்கு சோடாவை ஊற்றிக் கொடுக்கலாம்.
• குழந்தைகள் என்றால் தண்ணீரைக் கலந்து கொடுப்பதுதான் நல்லது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms