வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, January 25, 2013

பாவங்கள்

 
ஒரு ஊரிலே ஒருவன் பல பாவங்கள் செய்து கொண்டு வந்தான். அவனுடைய குரு " இப்படி பாவங்களைச் செய்து ஏன் கெட்டுப் போகிறாய்? இனி அப்படிச் செய்யாதே..." என்று பல புத்திகளை அடிக்கடி அவனுக்குச் சொல்லி வந்தார்.
அவன் "எல்லாப் பாவங்களையும் என்னால் விட முடியாது.உம்முடைய சொல்லுக்காக நீங்கள் விடச் சொல்லும் பாவம் ஒன்றை மட்டும் விட்டு விடுகிறேன் என்றான்.
குருவும் " இனி பொய் சொல்லும் ஒரு பாவத்தையாவது விட்டு விடு. உண்மை மட்டும் பேசு " என்று கட்டளையிட்டார்.
அதற்கு உடன்பட்ட சீடன் ஒருநாள் இரவு அந்த ஊரில் அரசனுடைய அரண்மனையில் திருடுவதற்காகப் போய் பதுங்கியிருந்தான்.
அப்போது நகர சோதனைக்காக மாறுவேடம் போட்டுப் புறப்பட்ட அரசன் அவனைப் பார்த்து விட்டான்.
அவனைப் பார்த்து " இந்த அரண்மனைக்கு ஏன் வந்தாய்? உண்மையைச் சொல் " என்று கேட்டான்.
திருட வந்த அவனும் அவனுடைய குருவுக்கு அளித்த வாக்குப்படி, "இந்த அரண்மனையிலே திருட வந்திருக்கிறேன்." என்றான்.
அரசனுக்கோ அவனுடைய உண்மைப் பேச்சு கேட்டு ஆச்சரியம்.
அவனுடைய செய்கை முழுவதையும் பார்க்க நினைத்து,"நானும் இங்கே திருடத் தான் வந்திருக்கிறேன். திருடுவதில் ஆளுக்குப் பாதி வைத்துக் கொள்வோம்." என்றான்.
திருட வந்தவவனும் சம்மதித்தான். அரசனையேக் காவல் வைத்து விட்டு அரண்மனைக்குள் புகுந்தான்.
அங்கிருந்த ஒரு பெட்டியில் விலையுயர்ந்த வைரக்கற்கள் மூன்று இருப்பதைப் பார்த்தான். மூன்று வைரக் கற்களை எடுத்தால் பாதியாகப் பங்கு பிரிக்க முடியாது என்பதால் ஒரு வைரக் கல்லை அங்கேயே வைத்து விட்டு இரண்டு வைரக்கற்களை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
உள்ளே மூன்று வைரக்கற்கள் இருந்தன. மூன்றை சமமாகப் பிரிக்க முடியாது என்பதால் இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு ஒன்றை அங்கேயே வைத்துவிட்டு வந்து விட்டதாகத் தெரிவித்தான். இரண்டு வைரக்கற்களில் ஒன்றை அரசனிடம் கொடுத்து விட்டு மற்றொன்றை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அரசனுக்கு அவனுடைய உண்மையான பேச்சு பிடித்துப் போய்விட்டது. அவனுடைய முகவரியைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அரசனும் உள்ளே சென்று பெட்டியைப் பார்த்தான் பெட்டியில் ஒரு வைரக்கல் மட்டும் இருந்தது.
மறுநாள் காலையில் அரசன் அமைச்சரை அழைத்து, "முந்தையநாள் இரவில் அரண்மனைப் பெட்டியிலிருந்த வைரக்கற்கள் திருடு போய்விட்டதாகத் தெரிகிறது. சென்று சரிபார்த்து வாருங்கள் " என்றான்.
அமைச்சர் பெட்டியைப் பார்த்தான். உள்ளே ஒரு வைரக்கல் மட்டும் இருந்தது. அந்த ஒரு வைரக் கல்லை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டான்.
"அரசே விலையுயர்ந்த மூன்று வைரக்கற்களும் காணாமல் போய்விட்டன." என்றான்.
உடனே அரசர், அந்த அமைச்சரை சிறையிலடைக்க உத்தரவிட்டான். உண்மை பேசிய அந்த திருடனை அழைத்து வரச் செய்து அமைச்சராக்கினான்.
உண்மையின் பலன் திருடனைக் கூட உயர்த்தி விட்டது பாருங்கள்.
Print Friendly and PDF

Friday, January 18, 2013

குறை

 
ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.
இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதன் எஜமானன் கூறினான்.
"பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.

Print Friendly and PDF

Saturday, January 12, 2013

வரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்






 
ஓம் நமோ பகவதே
சுப்ரமணியாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய
வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய  பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய
மம ஸர்வா பீஷ்டம்
ப்ரயச்ச ஸ்வாஹா!
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!


இதை அனுதினமும் முருகன் திருவுருமுன் 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரகிக்கப்படும் மந்திரமாகும். இதை யந்திரத்தில் ஸ்தாபனம் செய்து 48 நாட்கள் பூஜித்தால் முருகன் காட்சி கிட்டும் என `மாலா மந்திரம்' என்னும் பழங்காலத்து நூல் தெரிவிக்கிறது.

Thursday, January 3, 2013

தொழுகை - சொர்க்கம்




குர்ரானில் கூறப்பட்டுள்ளபடி சன்மார்க்க கடமைகள் அனைத்தையும் தவறாது செய்துவந்த ஒரு முஸ்லிம் இறந்த பிறகு சொர்க்கத்துக்கு செல்கிறார். அங்கே இறைவனை அவர் சந்திக்கும்போது இறைவன் கேட்கிறார்…. “உனக்கு நான் ஏன் சொர்க்கம் கொடுத்தேன் தெரியுமா?”

தெரியுமே.. எனக்கு மட்டுமில்லேஎல்லாருக்கு தெரியும். நான் இஸ்லாம் கூறியுள்ள ஐந்து கடமைகளையும் தவறாது நிறைவேற்றியவன். ஒரு நாள் கூட தொழுகை தவறியது கிடையாது. அதன் பலனாக சொர்க்கத்திற்கு வந்திருக்கிறேன்என்கிறார்.

அதற்கு அல்லா… “இல்லை நீ ஒரு நாள் தொழுகை தவறிவிட்டாய்அதற்காகத் தான் சொர்க்கம் கொடுத்திருக்கிறேன்என்கிறார்.

இவருக்கு தூக்கி வாரப்போட்டதுஏதோ ஒரு வேளை தொழுகை தவறிட்டோம் போல…. ஆனா அது பெரிய பாவமாச்சேஎன்று நினைத்தவர்… “அல்லாதொழுகை தவறியது மிகப்பெரிய பாவமல்லவா ஆனால் நீங்கள் அதற்காக எனக்கு சொர்க்க அளித்தேன் என்று சொல்வது எனக்கு விளங்கிவில்லை

நீ தொழுகைக்கு ஒரு நாள் சென்றுகொண்டிருந்தாய். அப்போது மழை பெய்துகொண்டிருந்தது. பள்ளிவாசலின் சுவரையொட்டி அந்த மழையில் நனைந்த படிஒரு பூனைக்குட்டி ஒன்று கிடந்தது. குளிரில் அதன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. நீ அதை பார்த்து பரிதாபப்பட்டாய். அதை எடுத்து அதன் ஈரத்தை உனது ஆடையால் துடைத்தாய்…. அப்போதும் அதன் குளிர் நடுக்கநிற்கவில்லை. இறுதியில் உன் சட்டை பொத்தான்களை அகற்றி உன் மார்பை ஒட்டி அதை வைத்துக்கொண்டாய்உன் உடம்பின் சூட்டினால் அது சிறிது குளிர் நீங்கப்பெற்றது. சற்று நேரத்தில் மழை நின்றுவிடநீ அதை கீழே வைத்துவிட்டாய்அது மகிழ்ச்சியுடன் ஓடிவிட்டது…. பூனைக்கு நீ உபகாரம் செய்தாலும், உனக்கு தொழுகை நேரம் கடந்துவிட்டது. அன்று நீ தொழவில்லை. ஆனால்அதற்காகத் தான் நான் உனக்கு சொர்க்கம் கொடுத்தேன்என்கிறார்.

 குட்டி கதைத்தான்,அதை எந்த மதத்தின் கோட்பாடில் சொன்னாலும் சத்தியத்திற்கு மகத்துவம் உண்டு 
                                      -Arrow Sankar (Vanmigiyur L.L.Sankar)

Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms