வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Monday, August 31, 2015

மதுராஷ்டகம்


ஸ்ரீ வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் தமிழில்..


அத‌ர‌‌ம் ம‌துர‌ம் வ‌த‌ன‌ம் ம‌துர‌ம்
ந‌ய‌ன‌ம் ம‌துர‌ம் ஹ‌ஸித‌ம் ம‌துர‌ம்
ஹ்ருத‌ய‌ம் ம‌துர‌ம் க‌ம‌ன‌ம் ம‌துர‌ம்
ம‌துராதிப‌தேர் அகில‌ம் ம‌துர‌ம்
உன்
இதழும் இனியது; முகமும் இனியது;
கண்கள் இனியது; சிரிப்பும் இனியது;
இதயம் இனியது; நடையும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

வசனம் மதுரம் சரிதம் மதுரம்
வஸ‌னம் மதுரம் வலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்

உன்
சொல்லும் இனியது; குணமும் இனியது;
உடைகள் இனியது; உடலும் இனியது;
இயக்கம் இனியது; உலவல் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

வேணுர்மதுரோ ரேணுர்மதுர:
பாணிற்மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸ‌க்யம் மதுரம்
 மதுராதிபதேரகிலம் மதுரம்

உன்
குழலும் இனியது; கால் தூசியும் இனியது;
கைகள் இனியது; பாதம் இனியது;
நடனம் இனியது; நட்பும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

கீதம் மதுரம் பீதம் மதுரம்
புக்தம் மதுரம் சுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம்
 மதுராதிபதேரகிலம் மதுரம்

உன்
பாடல் இனியது; பட்டாடை இனியது;
உண்ணல் இனியது; உறக்கம் இனியது;
உருவமும் இனியது; திலகமும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

கரணம் மதுரம் தரணம் மதுரம்
ஹரணம் மதுரம் ரம‌ணம் மதுரம்
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம்
 மதுராதிபதேரகிலம் மதுரம்

உன்
குறும்பு இனியது; வெற்றி இனியது;
கள்ளம் இனியது; உள்ளம் இனியது;
எச்சில் இனியது; வெட்கம் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

குஞ்சா மதுரா மாலா மதுரா
யமுனா மதுரா வீசீ மதுரா
சலிலம் மதுரம் கமலம் மதுரம்
 மதுராதிபதேரகிலம் மதுரம்

உன்
மணிகள் இனியது; மாலை இனியது;
யமுனை இனியது; அலைகள் இனியது;
தண்ணீர் இனியது; தாமரை இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

கோபி மதுரா லீலா மதுரா
யுக்தம் மதுரம் புக்தம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம்
 மதுராதிபதேரகிலம் மதுரம்

உன்
தோழியர் இனியது; கொண்டாட்டம் இனியது;
கூடல் இனியது; குணமும் இனியது;
பார்வை இனியது; பாவனை இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

கோபா மதுரா காவோ மதுரா
யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்

ஆயர் இனியது; ஆக்கள் இனியது;
செண்டை இனியது; பிறவி இனியது;
வீழல் இனியது; ஆழல் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

இதி மதுராஷ்டகம் சம்பூர்ணம்.!
இங்ஙனம் இனியவை எட்டும் நிறைவே!

Courtesy :Mr Ramki




Print Friendly and PDFபிரிண்ட் எடுக்க

Friday, August 14, 2015

வாழ்க இந்தியா

கட்டுண்டோம்
பொறுத்திருப்போம்.
காலம் மாறும்
என்றான் பாரதி.

ஒன்றுபட்டோம்
கைகோர்த்தோம்
காலம் மாறியது
என்றான் காந்தி.

ஆகஸ்டு பதினைந்து
ஆர்ப்பரித்தது மக்கள் வெள்ளம்.
ஆவேசமானது சங்கொலி!
ஆணையிட்டாள் சுதந்திரதேவி!

வெள்ளையன் கொடி
கீழே இறங்கியது.
பாரதக்கொடி
மேலே பறந்தது.


அஹிம்சை வென்றது!
அகிலம் வாழ்த்தியது!
நன்னாள்!
இனிய பொன்நாள்!.

பெற்ற சுதந்திரத்தை
பேணிக் காப்போம்!.
பெருமைக் கொள்வோம்!.
சபதம் செய்வோம்!.

வெற்றி இந்தியா
வல்லரசு இந்தியா
விவேக இந்தியா
வாழ்க இந்தியா.

Print Friendly and PDFபிரிண்ட் எடுக்க

Thursday, August 13, 2015

சுதந்திரம்

வீட்டின் ஓரமாய் கட்டுண்டு கிடந்த நாய் தன்னை விடுவித்துக் கொள்ள ஏக ரகளை செய்து கொண்டிருந்தது.

அமைதி அமைதி! என்றது எதிர்த்தாற் போல் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கிளி.


அமைதியாவது மண்ணாவது! இந்த அடிமை வாழ்விலிருந்து
விடுதலை பெறும் வரை இனி எனக்கு அமைதி என்பதே கிடையாது! என்றது நாய்.

அந்த நாளைக்குத்தான் நானும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால்.....

என்ன ஆனால்?கேள்வி கேட்டது நாய்.

மூன்றாவது ஆள் துணையாலே மட்டுமே முடியும்! என்றது கிளி.

யார் இருக்கிறார்கள் நமக்கு உதவ? என முகாரியிட்டது நாய்.

நான் உதவலாமா?அருகே வந்து முகத்தை காட்டியது குரங்கு.

நன்றி! நன்றி! என ஒருமித்தக் குரலில் நாயும் கிளியும் வரவேற்றன.

அவ்வளவுதான் குரங்கு கூண்டை திறந்தது.
கிளி விடுதலை! விடுதலை! என கூவி வானில் பறந்தது.

கட்டை அவிழ்த்தது குரங்கு,சுதந்திரம்! சுதந்திரம்! என
கூத்தாடிக் கொண்டே நாய் தெரு நோக்கி ஓடியது.

சிலநாட்களுக்கு பிறகு, தன்னால் விடுதலை பெற்ற
கிளியிடம் கேட்டது குரங்கு எப்படி இருக்கிறது சுதந்திரம்?

ஆனந்தம் ,பரமானந்தம் என ஆனந்தமுடன் உரைத்தது கிளி.

நாயை நோக்கி, குரங்கு கேட்டது. எப்படி இருக்கிறது சுதந்திரம்?.

காலையில் பால்,மத்தியானம் இறைச்சி,மாலையில் ரொட்டி,இரவு மீண்டும் பால் எனது காலடியில். இது என் பழைய வாழ்க்கை.

ஒரு கவள எச்சில் சோற்றுக்கு, ஓராயிரம் நாய்களோடு ஒவ்வொரு நாளும் போராட்டம். இது இன்றைய வாழ்க்கைசுதந்திர வாழ்க்கை.மோசம் போனேன்!.நொந்துப் போய் முனகியது நாய்.

சுதந்திரத்தில் கூட, சிலருக்கு சுகம் கிடைக்காது போலிருக்கு?

என்று முணுமுணுத்த குரங்கு மரத்திற்கு தாவியது.

நன்றி : விந்தன் "குட்டிக் கதைகள்"
Print Friendly and PDFபிரிண்ட் எடுக்க

Friday, August 7, 2015

பசி

பசி
பஞ்சத்தின் மீதேறி
பவனி வந்தது



இனி எனக்கு
இங்கு இடமில்லை
என்றது அன்பு.

எனக்கும்
இதே கதிதான்
என்றது பண்பு.

இனி என்னை யார்
ஏற்றுக் கொள்வாரோ?
வேதனைக் கொண்டது வெட்கம்.

நீ தொலைந்தால்
எனக்கு நிம்மதி.
மகிழ்ச்சியானது வேட்கை.

என்னை மறந்துவிட
மனிதனுக்கு நேரம் வந்துவிட்டது
பெருமூச்சு விட்டது மானம்.

மானத்தையே மறந்துவிட்டால்
எனக்கு என்ன கதி?
தவித்தது மரியாதை.

தலைகுனிந்து குறுகி
நிலை உணர்ந்து
தள்ளாடியது ஈகை.

ஈகையே தலைகுனிந்தால்
இதயமொழி பேசப்படுமோ?
ஆதங்கப்பட்டது இரக்கம்.

இன்னும் சந்தேகமா?
கேள்வி கேட்டது
சண்டாள பொய்.

பசி வந்தால்
பத்தும் பறந்து போகும்!
மெல்ல சொன்னது உண்மை.

Print Friendly and PDFபிரிண்ட் எடுக்க

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms