வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Thursday, February 28, 2013

பழைய மஹாபலிபுரம் சாலை (O.M .R )

சர்தார் பட்டேல் ரோட்டின் மையப் பகுதி மத்ய கைலாஸ் கோவிலிருந்து ஆராம்பமாகும்  ரோட்டின்  பழைய   வடிவம்  தான் பழைய மஹாபலிபுரம் சாலை .



2006-07-ல் ஐ.டி.எக்ஸ்பிரஸ் வே (IT EXPRESS WAY) என்று உருமாறி தமிழக முன்னாள் முதல்வர் திரு கருணாநிதியால் 2007-ல் மீண்டும் ராஜீவ் காந்தி சாலை என மாற்றப்பட்டு  புதிதாய் சாலை சீரமைக்கப்பட்டு  வாகன வரி வசூலுடன் பொலிவுடன் இருக்கிறது 

இன்று ஓ.எம்.ஆர் (O.M.R ) என்ற சுருக்கத்துடன் எல்லோருக்கும் தெரிந்த சாலையாக உள்ளது . டைடல் பார்க், இன்போசிஸ், விப்ரோ,அக்சன்சர்,ஹெசிஎல் மற்றும் பல  மாபெரும்  .டி நிறுவனங்களாலும், பல பொறியியல், மருத்துவ  கல்லூரிகளாலும் வியாபித்து  மேலும்  இந்த .எம்.ஆர் மக்களிடம் மிக பிரபலமாக உள்ளது . .டி நிறுவனங்கள், கல்லூரிகள் என்றதும்  மக்களின் தேவைக்கு ஏற்றார்ப்போல் குடியிருப்பு கட்டிடம், பள்ளி வளாகம், ஷாப்பிங் மால், மருத்துவமனை,திரையரங்குகள் என இந்த சாலை விஸ்வரூபமானது . சுமார்  கிட்டத்தட்ட 44 கிலோ மீட்டர்களை ஆட்க் கொண்ட இந்த சாலை இப்பொழுது மிக அதிகமான வாகனங்கள் சென்று வரும் சாலையாக மாறிவிட்டது. அதனால்  கவனசிதறலும்,  வாகன விபத்துக்களும்,உயிர் இழப்புகளும் மிக அதிகமாகிவிட்டது.

1.பாத சாரிகளின்  (walkers) ஒழுங்கீனம்
செல்போனில் பேசிக்கொண்டே நடைப்பாதையை கடப்பது . சாலையை கடக்கக்கூடாத இடத்தில் கடப்பது. சாலையின் மத்தியில் உள்ள வேலிகளை எகிறித் தாண்டி குதிப்பது. இன்னும் பல ஒழுங்கீனங்கள் 

2.வாகன ஓட்டிகளின் (சைக்கிள்,மோட்டார் சைக்கிள்,கார் மற்றும் மற்ற வாகன ஓட்டிகள்) ஒழுங்கீனம்.
சைக்கிளில் செல்வோர் தகுந்த டிராக்கில் செல்லாமல் சாலையை ஆக்கிரமிப்பது ,செல்போன் ஆடியோ வீடியோ மற்றும் ரேடியோக்களை வாகனம் ஓட்டும் பொழுது கையாள்வது,அளவுக்கு மீறிய சரக்குகளை சுமந்து செல்வது , எச்சரிக்கை சமிஞ்சைகளை உபயோகிக்காமல் இருப்பது, ஒழுக்கமற்ற செயல்களை செய்வது (எச்சில் துப்புவது , புகைப்பது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது),சரியாக பராமரிக்காத வாகனத்தை உபயோகிப்பது, ஓவர்டேக் செய்வது மற்றும் போக்கு வரத்து விதி முறைகளை மீறுவது.

3.போக்குவரத்து காவல் துறையினரின் கவனக்குறைவு.
எச்சரிக்கை,சமிஞ்சை,அறிவிப்புப்பலகை (NO ENTRY,U TURN,HOSPITAL ZONE, SCHOOL ZONE), சுவரொட்டி, மின்னொளி பலகை தகுந்த இடத்தில் வைக்காமல் இருப்பது ,விபத்து பகுதிகளை அறிவிக்காமல் இருப்பது.சாலை பாதுக்காப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்தாமல் இருப்பது. விபத்து நடந்ததிற்க்கான உண்மையான காரணத்தினை அறியாமல் விசாரிக்காமல் இருப்பது.

4.அரசு பொது பணித் துறையினரின் அலட்சியம்.
சர்வீஸ் சாலை மற்றும் சாலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது. அரசு வளாகங்கள்  ,கடைகள் ,மதுக்கடைகள், இவற்றின் ஒழுக்க மற்றும் சட்ட விதி முறைகளை முறையாக  பயன் படுத்துவது .

5.அரசு நெடுஞ்சாலை  துறையினரின் அலட்சிய பணி மெத்தனம். 
சர்வீஸ் சாலை மற்றும் சாலைகளை பராமரிப்பதில் மெத்தனம் . குறுக்கீடு,குழி,குப்பை அசுத்தம் ஆகியவைகளை அதற்குரிய துறைகளே அகற்றும் சரி செய்யும் என நினைப்பது .


இந்த குறைப்பாடுகளை அகற்றினால், செயல்பாடுகளை செய்வித்தால், .எம்.ஆர் (O.M.R ) இனி புது சாலையாக மாறும். வெறும் பெயர் மாற்றம் மட்டுமே ஏற்றம் தராது 

Tuesday, February 26, 2013

சின்னதாய் ஒரு கடிதம்

நான் பிளாக் எழுதஆரம்பித்து இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது.


நான் படித்த,கேட்ட,தெரிந்த, குறித்து கொண்ட கதைகள், நானாக எழுதிய கவிதைகள்,படித்தவைகளை தொகுத்து கட்டுரையாக மாற்றியது, ஆன்மீக கருத்துக்கள்,விஷயங்களை ஒரு டைரியில் எழுதி வைத்தேன். இதை ஒரு நாள் படித்த என் நண்பர் R.சோமசுந்தரம் உனக்கு நன்றாக எழுத வருகிறது. பத்திரிகைக்கு அனுப்பி வை என்றார்.
பத்திரிகையில் படித்ததை பத்திரிகைக்கு எப்படி அனுப்புவது.ஆனால் நான் படித்ததை மற்றவர்கள் படிக்காமல் இருக்கலாம் அவர்களுக்கு நான் குறித்து கொண்ட செய்திகளை கருத்துக்களை எப்படி பகிர்ந்து கொள்வது.?
இதற்கான விடையாக எனக்கு தெரிந்தது மின்னஞ்சல்.ஆனால் இதிலும் ஒரு பிரச்னை  இருக்கிறது. அதாவது இந்தந்த விஷயங்கள் இந்தந்த நபருக்கு பிடிக்குமா? பிடிக்காதா?  என்பதை நான் அறிய வாய்ப்பில்லை.பத்திரிகை மாதிரி அதாவது ஒரு மெனு கார்டு மாதிரி  இருக்க வேண்டும் . அப்படி இருந்தால்தான் அவரவர்களுக்கு  பிடித்ததை படித்துக்கொள்ளலாம் .அப்பொழுதுதான்என் மகன் செல்வபரத் இன்டர் நெட்டில் ப்ளாக் என்று ஓன்று இருக்கிறது அதை உருவாக்கி அதில் எழுதுங்கள் அதை உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் அவரவர்களுக்கு பிடித்ததை படித்து கொள்வார்கள் என்றான் .மேலும் இதற்காக நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று இலவச பரிமாற்றதினையும் கூறினான்.

இந்த தகவல் எனக்கு உற்சாகத்தினையும் பல தகவல்களை சேகரிக்கவும் வழி வகுத்தது. ஆனால் பிளாக்கில் எழுத எனக்கு தெரியவில்லை. அதுவரை நிறைய விஷயங்களை காப்பி,கட் அண்டு பேஸ்டு (COPY,CUT & PASTE) என்கிற முறையில் எழுதினேன். 

ஆங்கிலத்தில் எழுத பான்ட்(font) இருக்கிறது ஆனால் தமிழில் எழுத எனக்கு பான்ட்(font) கிடைக்கவில்லை அதுவுமில்லாமல் எனக்கு டைப் அடிக்கவும் தெரியாது .கம்பூயுட்டர் பற்றி தெரிந்த நண்பர்களிடம் கேட்டு தெரிந்தும் என்னால் தமிழில் எழுத முடியவில்லை சில நாட்களின் தேடல் பிறகு நண்பர் திரு A .R.வெங்கட்நாராயணன் மூலமாக கூகுல் ட்ரான்சிலேட்டர்  பற்றி அறிந்துக்கொண்டேன் . அன்று முதல் எழுத ஆரம்பித்தேன்.

எச்டீஎம்எல் (HTML) பற்றி இன்டெர் நெட்டிலேயே படிக்க ஆரம்பித்தேன். பல வெப் சைட்டுகள் .பிளாக்குகள் என எனது பிளாகிற்காக படித்தேன் . புத்தனுக்கு போதி மரம் , ரத்னாகரனுக்கு (வான்மீகி முனிவர் ) ராம் என்ற ஈரெழுத்து மந்திரம், விசுவாமித்திரனுக்கு நந்தினி எனும் பசு, எனக்கு இன்டர்நெட் எனும் மாபெரும் அட்சய பாத்திரம்.

எனது போஸ்டிங்-ல்(POSTING) காப்பி அடித்த, எடுத்துக் கொண்ட, குறித்துக்கொண்ட தகவல் ஆதாராத்தினை எனது போஸ்டிங் கீழே எழுதினேன் .இதை படித்த எனது நண்பர்கள்  C.திருநாவுக்கரசு , அன்புராஜன் ஆகியோர் மூலத்தினை மறைக்காமல் அதனையும்  எழுதியதை பாராட்டினார்கள்.

மேலும் நண்பர்கள் திரு.திலீப் சந்தன்,திரு A .R. வெங்கட் நாராயணன். திரு.நசிர்கான்,திருமதி.ஜமீலா,திரு.ஜான்பிட், திரு ப்ரியா கண்ணன், திரு.வெங்கடேஸ்வரன் என்கிற ஈசா, அம்பத்தூர்.திரு.ரகுராமன்  திரு.அனந்தபத்மநாபன், திருமதி லக்ஷ்மி,திரு.சிவானந்தம், திரு.தினேஷ் ராஜ், திரு.வெங்கடராஜூலு , அண்மையில் நண்பரான  திரு.திண்டுக்கல் தனபாலன்  ஆகியோருக்கும் என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்கள் மற்றும்  வழிக்காட்டிகள், எல்லோருக்கும் எனது நன்றியினையும் வணக்கத்தினையும் இந்த ஓராண்டு நிறைவுக்காக தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தவறினை சுட்டிக்காட்டவும், விமர்ச்சிக்கவும் உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும் வரவேற்கிறேன். 

Monday, February 25, 2013

குரங்கு வியாபாரி

ஒரு கிராமத்தில் அதிகமான குரங்குகள் இருந்தன. அதனால் அந்த கிராம மக்களுக்கு மிக தொல்லையாக இருந்தது. அக்கிராமத்திற்கு ஒரு வியாபாரி வந்தான். அவன் அக்கிராமத்தில்  உள்ள குரங்குகளை பார்த்தான். அக்கிராமத்து மக்களிடம் எனக்கு நிறைய குரங்குகள் தேவை படுகிறது. ஒரு குரங்கை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்கிற்கு  பத்து ரூபாய் வீதம் தருகிறேன் என்றும் கூறினான்.

கிராமத்து மக்கள் சிலர் உனக்கு எதற்கு குரங்கு? என கேட்க, மருத்துவ ஆராய்ச்சிற்கு தேவைப்படுகிறது  என்று வியாபாரி கூறினான்.

கிராம மக்களும் பணத்திற்கு பணமும் ஆயிற்று, குரங்கின் தொல்லையும் குறையும் என்று எண்ணி அவரவரால் எத்தனை குரங்கினை பிடிக்க முடியுமோ  அத்தனை குரங்கினை பிடித்து பத்து ரூபாய் வீதம் பல பத்து ரூபாய்க்களை பெற்றனர் . கிராமத்தில் உள்ள  அனைத்து குரங்குகளையும்  மக்கள் பிடித்து கொடுத்து பணம் பெற்றனர். கிராமத்தில் குரங்குகள் தீர்ந்து போயின.

குரங்கு வியாபாரி எல்லா குரங்குகளையும்  எடுத்துக்கொண்டு  கிராமத்தை விட்டு கிளம்புவதற்க்கு  முன் கிராம மக்களிடம் எனக்கு இன்னும் நிறைய குரங்குகள் தேவை படுகிறது. இனி பிடித்து கொடுக்கும் ஒவ்வொரு  குரங்கிற்கும்  ஐநூறு  ரூபாய் வீதம் தருகிறேன் என்றும் கூறினான்.

கிராமத்திலோ ஒரு குரங்குக்கூட இல்லை . ஒரு குரங்கிற்கு  ஐநூறு  ரூபாய் கிடைக்கும் என்பதால்  கிராம மக்கள் அனைவரும் குரங்கிற்காக  தேடித்தேடி அலைந்தனர். ஒரு குரங்கும் கிடைக்க வில்லை.

சில நாட்களுக்கு பிறகு ஒரு வியாபாரி  இந்த கிராமத்திற்கு வந்தான். அவன்  கிராமத்து மக்களிடம் என்னிடம் நிறைய குரங்குகள் உள்ளது,ஒரு குரங்கு நூறு ரூபாய் ஆகும்  என்றான்.

கிராம மக்கள் அனைவரும் இந்த வியாபாரியிடமிருந்து நூறு ரூபாய்க்கு வாங்கி  முதலில் வந்த குரங்கு வியாபாரியிடம் ஐநூறு ரூபாய்க்கு  விற்கலாம் என்றெண்ணி  போட்டிப்போட்டுக்  கொண்டு  வாங்கிக் கொண்டனர் . குரங்குகள் தீர்ந்து போயின.வியாபாரி கிளம்பினான் .

கிராமமக்கள் ஐநூறு ரூபாய்க்கு வாங்கி கொள்ளப் போகும் வியாபாரிக்காக காத்துக்கொண்டிருந்தனர்.அந்த வியாபாரிவரவேயில்லை.  அவன் வரப்போவேதேயில்லை. ஏனெனில் அந்த வியாபாரித்தான்  வேறொருவனை அனுப்பி பத்து ரூபாய்க்கு வாங்கிய குரங்கை நூறு ரூபாய்க்கு விற்றுவிட்டான் .

சன் டிவியில் வரும் வாணி-ராணி தொடரிலிருந்து எடுக்கப்பட்டது.
Print Friendly and PDF

Friday, February 22, 2013

பஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி?

பஞ்சாங்கமில்லாமல்  லக்னம் கண்டுபிடிப்பது எப்படி?


லக்ன  எண்கள் 

மாத  எண்கள் 
மேஷம்
77-181

ஜனவரி
726
ரிஷபம்
182-302

பிப்ரவரி
850
மிதுனம்
303-436

மார்ச்
996
கடகம்
437-566

ஏப்ரல்
1086
சிம்மம்
567-691

மே
1208
கன்னி
692-818

ஜூன்
1327
துலாம்
819-949

ஜூலை
6
விருச்சிகம்
950-1083

ஆகஸ்ட்
126
தனுசு 
1084-1208

செப்டம்பர்
250
மகரம்
1209-1319

அக்டோபர்
366
கும்பம்
1320-1419

நவம்பர்
491
மீனம் 
1420-1440(1-76)

டிசம்பர் 
604



 மேலே காட்டப்பட்டுள்ள அட்டவணைக் கொண்டு எளிதாக லக்னத்தினை கண்டுப்பிடிக்கலாம்


எப்படி என்பதினை இப்பொழுது காணலாம்.

ஒருவரது பிறந்த தேதியினை யும் ,பிறந்த நேரத்தினையும்  கொண்டு  கண்டுப்பிடிக்கலாம்  எவ்வாறு ?

உதாரணம் - 1
உதாரண பிறந்த தேதியும் நேரமும் 

1-7-1980  நேரம் காலை  5 – 15 A.M ( அதாவது காலை 5 மணி 15 நிமிடம்)

பிறந்த தேதி 1 - தை  4 ஆல்  பெருக்கி கொள்ளவும் . வருவது 4 ஆகும் .(1 x4 = 4)

பிறந்த நேரம்  5-தை  60 ஆல்  பெருக்கி கொள்ளவும் (காலை எனில் அப்படியே 60 ஆல்  பெருக்கி கொள்ளவும் , மாலை எனில் நேரத்தின் மணியினை மட்டும் ரயில்வே டைமாக மாற்றி , அதாவது 12 உடன் கூட்டி வந்த தொகையினை  60 ஆல்  பெருக்கி கொள்ளவும் )

பிறந்த தேதி 1 x 4 = 4
பிறந்த நேரம்  5 x 60 =300
பிறந்த மாதம் ( 7- அதாவது ஜூலை)
அதன் மாத  எண்  = 6
பிறந்த நேரத்தின் நிமிடம் = 15 

அதாவது ,

4 (1x4) + 300(5x60) + 6(மாத  எண்) + 15(பிறந்த நேரத்தின் நிமிடம்) எல்லாவற்றையும் கூட்ட 

= 4 + 300 + 6 + 15 = 325 (இந்த எண்  எந்த லக்ன எண்ணில் வருகிறது என்பதினை அட்டவணையில் பார்க்கவும் )

அட்டவணைப்படி மிதுனத்தில் வருகிறது .

எனவே இந்நேர டைம் படி இது மிதுன லக்னம் ஆகும் .

உதாரணம் - 2

இதுவே வேறொரு தேதியும் மாலை நேரம்மும் 


3 -7-1980  நேரம் மாலை  5 – 15 P.M ( அதாவது மாலை 5 மணி 15 நிமிடம்)

பிறந்த தேதி 3 x 4 = 12
பிறந்த நேரம்  17 x 60 = 1020 (மாலை எனவே 5 உடன் 12 யை கூட்டி 17 ஆக அதனுடன் 60  ஆல் பெருக்க வேண்டும் )
பிறந்த மாதம் ( 7- அதாவது ஜூலை)
அதன் மாத  எண்  = 6
பிறந்த நேரத்தின் நிமிடம் = 15 

அதாவது ,

12 (3 x 4) + 1020(17x60) + 6(மாத  எண்) + 15(பிறந்த நேரத்தின் நிமிடம்) எல்லாவற்றையும் கூட்ட 

= 12 + 1020 + 6 + 15 = 1053 (இந்த எண்  எந்த லக்ன எண்ணில் வருகிறது என்பதினை அட்டவணையில் பார்க்கவும் )


அட்டவணைப்படி விருச்சிகத்தில் வருகிறது .

எனவே இந்நேர டைம் படி இது விருச்சிக லக்னம் ஆகும் .

இப்படி கூட்டி வரும் தொகை 1440 - க்கு மேல் வருமானால் அத்தொகையிலுருந்து  1440 - தை கழிக்க மீதம் வரும் தொகை எதுவோ அது, எந்த லக்ன எண்ணிலுக்குள் வருகிறதோ அதுவே அந்த லக்னமாகும் 

உதாரணம் - 3

29 -7-1980  நேரம் மாலை  11 – 50 P.M ( அதாவது மாலை 11 மணி 50 நிமிடம்)

பிறந்த தேதி 29 x 4 = 116
பிறந்த நேரம்  23 x 60 = 1380 (மாலை எனவே 11 உடன் 12 யை கூட்டி 23 ஆக அதனுடன் 60  ஆல் பெருக்க வேண்டும் )
பிறந்த மாதம் ( 7- அதாவது ஜூலை)
அதன் மாத  எண்  = 6
பிறந்த நேரத்தின் நிமிடம் = 50

அதாவது ,

116 (29 x 4) + 1380(23x60) + 6 (மாத  எண்) + 50 (பிறந்த நேரத்தின் நிமிடம்) எல்லாவற்றையும் கூட்ட 

= 116 + 1380 + 6 + 50 = 1552 (இந்த தொகை 1440 - க்கு மேல் வருகிறது எனவே இந்த தொகையிலுருந்து  1440 - தை கழிக்க மீதம் வரும் தொகை(1552 -  1440) = 112
(இந்த எண்  எந்த லக்ன எண்ணில் வருகிறது என்பதினை அட்டவணையில் பார்க்கவும் )

அட்டவணைப்படி மேஷத்தில் வருகிறது .

எனவே இது மேஷ லக்னம் ஆகும்.

நன்றி: யுனிவேர்சல் ரிசர்ச் அகாடமி

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms