வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Monday, September 14, 2015

ஸ்ரீ காரிய சித்தி கணபதி திருக்கோயில்

ஸ்ரீ காரிய சித்தி கணபதி திருக்கோயில் 
ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீவாலீஸ்வரசாமி கோவில்

தொந்தியில்லா கணபதி

உத்தியோகம், திருமணம், பிள்ளைப் பேறு இம்மூன்றையும் நல்குபவராய் நத்தம் கிராமத்தில் எழுந்தருளி உள்ளார் ஸ்ரீ காரிய சித்தி கணபதி. சென்னை செங்குன்றத்திலிருந்து கும்மிடிபூண்டி செல்லும் வழியில் பஞ்செட்டி என்னும் கிராமத்திலிருந்து மேற்கே பிரியும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நத்தம் கிராமம். 


இந்த கிராமத்தில் தென்மேற்கு மூலையில், அழகுற எழும்பி நிற்கிறது ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயில் தென்மேற்கில் கம்பீர மாக காட்சி தருகிறார் ஸ்ரீ காரிய சித்தி கணபதி. பொதுவாக விநாயகர் என்றாலே தொந்தி தான் நம் கண் முன்னே வந்து நிற்கும். இவரோ தொந்தியில்லா கணபதி. 

மேலிருகரங்களில் கோடரியும் ருத்திராட்சமும், ஏந்தி கீழிறு கரங்களில் லட்டுகமும், தந்தமும் பிடித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்து. அடிப்பாகம் குறுகலாகவும், இடையே அகன்றும்,மேலே குறுகியும், ஓங்கார வடிவத்தில் நெற்றிக் கண்ணுடன் காட்சி தருகிறார் காரியசித்தி கணபதி. 

பொதுவாக விநாயகர் பாசம், அங்குசத்துடன் காட்சி தருவார். இங்கு பிரம்மனுக்கு, உபதேசம் செய்தமையால் கோடரியும் ருத்தி ராட்சத்துடன் காணப்படுகிறார். இந்த தோற்றம் தமிழகத்திலோ, இந்தியாவிலோ வேறு எங்கும் காண முடியாத காட்சியாகும்.

தல வரலாறு:-
சிவ தாண்டவத்தை காண தேவர்கள், அனைவரும் கைலாயம் சென்றனர். அப்போது பிரம்மாவும் சென்றார். அனைத்து தேவர்களும் வழியில் விநாயகரையும் முருகரையும் வணங்கி பின்னர் பார்வதி பரமேஸ்வரரை பார்க்க சென்றனர். பிரம்மா மட்டும் பிள்ளைகள் தானே என்ற ஆணவத்தில் விநாயகரை தாண்டி சென்றார். 

விநாயகர் மவுனச்சிரிப்புடன் நின்றுவிட முருகர் பிரம்மனை அழைத்து நீ யார்? உனது தொழில் யாது என்று கேட்டார். அதற்கு பிரம்மா, நான் படைக்கும் கடவுள் பிரம்மா என்றார். அதற்கு ஆதாரம் எது என்று முருகன் வினவ, பிரணவமெனும், ஓங்காரம மென்று பிரம்மா கூறினார் உடனே முருகர் பிரணவப் பொருள் அர்த்தம் கேட்டார்.  

பிரம்மா ரகசியமமாயிற்றே எவ்வாறு கூறுவது என்று தவிக்க பிரணவம் தெரியாத நீ படைக்க வேண்டாம், நானே படைத்துக் கொள்கிறேன், என்ற முருகர் பிரம்மனை சிறையில் அடைத்தார். அவ்வாறு முருகனால் பிரம்மா சிறைபட்ட இடம் ஆண்டார் குப்பம். 

பின்னர் பிரம்மனை விடுதலை செய்யும்படி சிவன் வேண்ட சுவாமி மலையில் சிவனுக்கு உபதேசம் செய்து பிரம்மனை மன்னித்து முருகர் விடுதலை செய்தார். விடுதலை அடைந்த பிரம்மன் மீண்டும் சிருஷ்டியை துவக்க அது வெற்றி பெறவில்லை. இதனால் பிரம்மா கவலையில் ஆழ்ந்தார். 

அப்போது அங்கு நாரதர் வந்து தந்தையே, தம்பியிடம் தண்டனை பெற்றும், அண்ணனை மறந்து போனீர்களே! முழு முதல் கடவுள் விநாயகரை தொழாத காரியம் வெற்றி பெறுமா? என்று கேட்டார். அவரே உபாயமும் கூறினார். தந்தையே நீர் சிறைபட்ட இடத்திற்கு தென் மேற்கே நெல்லிவனம் என்னும் காட்டில் சிவன் உறைந்துள்ளார். 

அந்த தலம் அம்பிகை தன்னுடைய ராகு தோஷம் நீங்க, இறைவனை பூஜித்த தலமாகும். அந்த ஷேத்திரத்தில் நீங்கள் விநாயகனை குறித்து தவம் புரியுங்கள். உங்கள் காரியம் சித்தி அடையும் என்று கூறினார். நாரதர் சொன்னபடி பிரம்மா நெல்லி வனம் வந்து பன்னிரண்டு ஆண்டுகள் தவம் புரிந்து விநாயகரை துதித்தார். 

இறுதியில் கணபதி காட்சி தந்தார். பிரம்மாவுக்கு மீண்டும் படைப்பு தொழில் கை கூடியது. பிரம்மாவின் அகந்தையை அழித்து ஞானத்தை புகுத்தியதால் கோடரியும் ருத்திராட்சமும் மேல் கரங்களிலும் தொந்தியின்றி "குரு''த்துவமாக முக்கண் ணோடு விளங்குகிறார் காரிய சித்தி கணபதி. 

பிரம்மாவின் வேண்டுகோள் படி, அவருக்கு காரியம் சித்தியானபடி அனைவருக்கும், அவரவர் வேண்டுதல்கள் காரியங்கள் சித்தியளிக்க அருள் புரிந்தார். அத்துடன் சிவ தாண்டவம் பார்க்க சென்று சிறைபட்டதால், அந்த சிவ தாண்டவத்தை இங்கே காண வேண்டுமென்று பிரம்மா விரும்ப அதையும் வரமாக தந்தார் கணபதி. பிரம்மனின் காரியம் சித்தியானதால் கணபதி காரிய சித்தி கணபதி ஆனார்.

இவருக்கு ஷோடசமென்னும் 16 நாமாவளிகளினால் அர்ச்சனை செய்து சிதறு தேங்காய் விட்டு வழிபட நாம் விரும்பிய காரியங்கள் சித்தியாகும். திருமணத்தடை உள்ளவர்கள் விரதமிருந்து கணபதிக்கு ரோஜாமாலை சார்த்தி, பச்சரிசி, வெல்லம்,பருப்பு, படைத்து அர்ச்சனை செய்து சிதறு தேங்காய் செலுத்தி வழிபட்டால் விரைவில் திருமணம் கை கூடுகிறது. 

பிள்ளைப்பேறு வேண்டுபவர்களும் இவ்வாறு வேண்டுதல் செய்து வெள்ளெருக்கம் விநாயகர் வாங்கி வந்து விநாயகரிடம் வைத்து வழிபட்டு பிரார்த்தனை செய்து எடுத்துச் சென்று வீட்டில் வைத்து வழிபட புத்திரபாக்கியம் கிடைக்கிறது. 

கல்வி, வேலைவாய்ப்பு, போன்ற கோரிக்கைகளும் சிதறு தேங்காய் வழிபாடு செய்வதால் நிறைவேறுகிறது.  இந்த கோயிலின் பிரதான சுவாமியான வாலீஸ்வரர் ஆனந்த வல்லி அம்பிகையை வழிபட ராகு கேது அங்காரக சர்ப்ப தோஷங்கள் விலகும். இங்கு பிரதோஷ வழிபாடு செய்தால் சுருட்டபள்ளியில் பிரதோஷ தரிசனத்தின் மும்மடங்கு பலன் கிடைக்கும் என்று மயிலை புராணம் கூறுகிறது. 

அர்ச்சகர்கள்:- 
அ.சாமிநாதகுருக்கள் (ஸ்தானீகர்) 
செல்: 9444497425. 
சா.சுரேஷ்பாபு குருக்கள் 
செல்: 9444091441. 

இந்த விநாயகரை வணங்கி சிறுவாபுரி சென்றால் தான் சொந்த வீடு கட்ட முடியும் .சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்று விரும்புவர்கள் சிறுவாபுரி சென்று மனம் உருகி முருகனை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

ஆனால் சிறுவாபுரி செல்லும் முன்பு நத்தம் கிராமத்தில் உள்ள காரிய சித்தி கணபதியை வழிபட்டு சிறுவாபுரி சென்றால் நினைத்த காரியம் எளிதில் கைகூடும் என்று பழங்கால குறிப்புகள் உள்ளன. 

இந்த விநாயகரை வழிபட்டு இந்த ஆலயத்தின் பின்புறமாக செல்லும் வழி வழியாக சிறுவாபுரி சென்று முருகனை வழிபட்டால் அதிக பலன் கிடைக்குமென்று நந்தி ஆருட பலன்களில் கூறப்பட்டுள்ளது. 

ஆலயத்திற்கு வரும் வழி: 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து: கும்மிடி பூண்டி வழியாக செல்லும் பேருந்துகள் பஞ்செட்டி நிறுத்தத்தில் இறங்க வேண்டும். பஸ் ரூட்; 58 சி, 112,113, 90,90, 132,133, 533 
ஸ்ரீ காரிய சித்தி கணபதி திருக்கோயில் செல்ல ரூட் மேப்
செங்குன்றத்திலிருந்து மாநகர பேருந்துகள் : 

547, 533,512,558, 558பி,536 இறங்குமிடம் ; பஞ்செட்டி. பஞ்செட்டியிலிருந்து மூன்றுகி.மீ நடந்து வர வேண்டும். ஆட்டோ வசதி வேண்டும் எனில் ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலை, அல்லது தச்சூர் கூட்டுச் சாலையில் கிடைக்கும். 

மிகச்சிறந்த பரிகாரத்தலம் : 

நத்தத்தில் உள்ள ஸ்ரீஆனந்த வல்லி சமேத ஸ்ரீவாலீஸ்வரசாமி கோவில் மிகச் சிறந்த புண்யாரண்யம் பரிகாரத்தலமாக திகழ்கிறது. வாலி தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க இங்கு வந்து ஸ்ரீவாலீஸ்வரரை பூஜித்து அருள் பெற்றார். 

ஒரு சமயம் அம்பிகைக்கே ராகு-கேது தோஷம் ஏற்பட்டது. அம்பிகை இத்தலத்தில் அமர்ந்து வாலீஸ்வரரை நோக்கி தவம் இருந்து தம் மீதான தோஷத்தில் இருந்து நிவர்த்திப் பெற்றார். அது போல இரணியனைவதம் செய்ததால் ஸ்ரீ நரசிம்மருக்கு தோஷம் ஏற்பட்டது. 


இதையடுத்து நரசிம்மர் இத்தலத்துக்கு வந்து பூஜித்து தோஷ நிவர்த்தி பெற்றார். அதன் பிறகே அவர் லட்சுமியுடன் சேர முடிந்தது. ரோமசர், பராசரர்,வால்மீகி,அகத்தியர், புலஸ்தியர் ஆகிய சித்தர்கள் இந்த தலத்துக்கு வந்து வழிபாடு நடத்தியுள்ளனர்.

இவர்கள் தவிர ஏராளமான ரிஷிகள் வந்து இங்கு பரிகாரம் பூஜைகள் செய்து பலன் அடைந்துள்ளனர். அந்த வகையில் இத்தலம் மிகுந்த பலன்களைத் தரக்கூடிய அருமையான பரிகாரத்தலமாகும். 

ஆனால் இவ்வளவு பழமையான பரிகாரத்தலம் இருப்பதே சென்னைவாசிகளில் பெரும்பாலானவர்களுக்கு இது வரை தெரியாமல் இருந்தது துரதிர்ஷ்டமாகும். இனியாவது இத்தலத்துக்கு சென்று பூஜித்து தோஷ நிவர்த்திப் பெறுங்கள்.
நன்றி :அ.சாமிநாதகுருக்கள் செல்: 9444497425. சா.சுரேஷ்பாபு குருக்கள் செல்: 9444091441. http://thalirssb.blogspot.com/2015/04/sri-kariya-sidhi-ganapathi-temple.html
Print Friendly and PDFபிரிண்ட் எடுக்க

மகாகணபதி

சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி வணங்கும் தெய்வம் விநாயகர். எந்த நல்ல காரியத்தையும் விநாயகரை வணங்கியபின் தொடங்கி னால்தான்  அக்காரியம் விக்னமின்றி நல்ல முறையில் நடக்கும். தேவர்களும் வணங்கும் தெய்வம் இவர். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்திதான் விநாயகரின் அவதார தினமாகும். 

நம் துன்பங்களுக்கெல்லாம் காரணம் நமது வினைகள். இந்த வினைப் பயனைத் தீர்ப்பவர்தான் மகாகணபதி. இவர் 18 கணங்களுக்கும் அதிபதி. இவரை மனதால் நினைக்க, வாக்கினால் பாட, உடம்பால் வணங்க வினைகள் யாவும் தீரும். கருணை புரிவதில் இவர் இணையற்றவர். மிகவும் எளிமையானவர். அதிக செலவும் அதிக சிரமமுமின்றி எளிமையாக வணங்கி மிகுந்த பலனடையலாம்.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர். இந்தியாவில் சிறு கோவில்கூட இல்லாத கிராமத்தைக் காணமுடியாது. ஈடிணையற்ற தெய்வங்களான ஈசன், பெருமாள் இவர்களுக்கு எல்லா இடங்களிலும் கோவில் அமைத்துவிட முடியாது. ஆனால் பிள்ளையார் விஷயம் அப்படியல்ல.

தெருக்கோடி, முச்சந்தி, மரத்தடி, குளக்கரை- ஏன் வீட்டில் விளக்கு மாடம் போன்ற சிறு இடத்திலேயேகூட பிள்ளையாரை நிறுவி வழிபடலாம். இதுவன்றி பசுஞ்சாணம், மஞ்சள் பொடி யில்கூட பிள்ளையாரை உருவாக்கிவிடலாம். பிடித்து வைத்தால் பிள்ளையார் தான்.

"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்

ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்னோப சாந்தயே '

என்பது கணபதி சுலோகம்.


சுக்லாம் பரதரம்- நிறைய வெண்மை (உண்மை,தெளிவு)

விஷ்ணும்- நீல வர்ணம்(ஆகாயத்தினை குறிப்பது-எல்லை இல்லாதது)

சசிவர்ணம்- மேக வர்ணம் (கருணையுடன் கூடிய வளம் செழிக்கும் மழை)

சதுர்புஜம்- நான்கு கரங்கள். (நான்கு வேதம்- இச்சா ,ஞான,கிரியா சக்தியுடன் அரூபமான ஆளுமை சக்தி)

பிரசன்ன வதனம்- ஆனந்த முகம்.

சர்வ விக்னோப சாந்தயே- தடைகள் அகலும்.

திதிக்குரிய கணபதிகள்

பொதுவாக விநாயகருக்கு சதுர்த்தி திதிதான் உகந்தது. என்றாலும் திதி ஒவ்வொன்றிற்கும் அதற்குரிய கணபதிகள் உள்ளனர். அந்தந்த நாளுக்குரிய கணபதியை வழிபடுவ தால் சிறந்த நற்பயன்கள் பெறலாம்.

பிரதமை- பால கணபதி,
துவிதியை- தருண கணபதி,
திரிதியை- பக்தி கணபதி,
சதுர்த்தி- வீர கணபதி,
பஞ்சமி- சக்தி கணபதி,
சஷ்டி- துவிஜ கணபதி,
சப்தமி- சித்தி கணபதி,
அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி,
நவமி- விக்ன கணபதி,
தசமி- க்ஷிப்ர கணபதி,
ஏகாதசி- ஹேரம்ப கணபதி,
துவாதசி- லட்சுமி கணபதி,
திரயோதசி- மகா கணபதி,
சதுர்த்தசி- விஜய கணபதி,
அமாவாசை, பவுர்ணமி- நித்ய கணபதி.

ஒவ்வொரு நாளிலும் அந்தந்த திதிக்குரிய கணபதியின் நாமத்தை 21 முறையோ, 108 முறையோ ஜெபித்து பக்தியுடன் வழிபட்டால் விக்னங்கள் யாவும் விலகி, சகல வளங்களும் கைகூடும்.

நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இதிகாசங்களும் விநாயகரைப் போற்றுகின்றன. மனிதர்கள் மட்டுமல்ல; தேவர்களும் இவரை வழிபட்ட  பின்பே எச்செயலையும் தொடங்குவார்கள்.
பஞ்சபூத விநாயகர்கள்

திருவண்ணாமலை விநாயகர் நெருப்பையும்;
திருவானைக்கா விநாயகர் நீரையும்;
சிதம்பரத்திலுள்ள விநாயகர் ஆகாயத்தையும்;
திருக்காளத்தி விநாயகர் வாயுவையும்;
காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலய விநாயகர் நிலத்தையும் குறிக்கின்றனர்.

இவர்களை வணங்கினால் பஞ்சபூதங்களால் ஏற்படும் அல்லல் நீங்கும் என்பர்.

தேசிய விழா

ஆதிகாலம் முதலே விநாயகர் சதுர்த்தி விழா இருந்து வந்தாலும், அதை மக்கள் அனைவரும் கொண்டாடும் தேசிய விழாவாகப் பிரபலப்படுத்தியவர் தேசபக்தரும், தியாகியுமான பால கங்காதர திலகர்தான். 1893-ல் விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பூனாவில் உள்ள தகடுசேத் கணபதி கோவிலில் தான் முதன்முதலில் விநாயகர் சதுர்த்தி விழாவை தேசிய விழாவாகக் கொண்டாடினர். இவ்விழா பத்து நாட்கள் நடந்தன.  இதையே ஆண்டுதோறும் பற்பல இடங் களில் பொதுவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதம்

அதிகாலை வீட்டை தூய்மைப்படுத்தி நீராடிவிட்டு, மூஷிக வாகனனை நினைத்து கடைக்குச் சென்று வலம்புரியாகவுள்ள மண் பிள்ளையாரை வாங்கி வரவேண்டும். அலங் காரம் செய்தபின் தொப்பையில் காசு வைத்து, விநாயகருக்கு குடை வைக்கவேண்டும்.

பின் இவரை பூஜையறையில் மனையில் அமர்த்தி, இருபுறமும் விளக்கேற்றி, முன்புறம் இலை யில் 21 வகையான நைவேத்திய பண்டங்களை வைக்கவேண்டும். இதில் மோதகம், சுண்டல் கண்டிப்பாக இருக்கவேண்டும். எத்தனை மலர்மாலை இட்டா லும் அறுகு மாலையும், எருக் கம்பூ மாலையும் கண்டிப்பாக சூட்டவேண்டும்.

"ஓம், ஸ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வரவரத ஸர்வ ஜனம்மே, வஸமாயை ஸ்வாஹா


என்ற கணபதி மூல மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். அத்துடன்,
"ஸுக்லாம் பரதரம் விஷ்னும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே'

என்ற விநாயகர் சித்தி மந்திரத்தையும் கூறலாம். முடிந்தால் 21 முறை அல்லது 108 முறைகூட ஜெபிக்கலாம். பின் தூப தீப நைவேத்தியம் முடிந்ததும், பட்சணங்களை மற்றவருக்கு கொடுத்தபின் நாம் உண்ணவேண்டும். விநாயகர் சிலை பின்னப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அன்று முதல் 1, 3, 5, 7-ஆம்  நாட்கள் ஒன்றில் விநாயகரை ஆறு, ஏரி, கிணறு, சமுத்திரம் எங்காவது நீரில் கரைக்க வேண்டும். இதை ஆண்கள்தான் செய்ய வேண்டும். 1, 3, 5, 7 நாட்களில் வெள்ளி, செவ்வாய்க்கிழமை வந்தால் அன்று செய்யாமல் மற்றொரு ஒற்றைப் படை நாளில் கரைக்கலாம். அப்போது விநாய கரைப் பார்த்து, "பிள்ளையாரப்பா! இன்று போய் அடுத்த வருடம் வா' எனக் கூறவேண்டும்.

கணபதியின் அறுபடை வீடுகள்

முருகனுக்கு உள்ளதுபோல் அண்ணன் கணபதிக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன.
திருவண்ணாமலை செந்தூர விநாயகர்,
விருத்தாசலம் ஆழத்துப் பிள்ளையார்,
திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார்,
மதுரை முக்குறுணிப் பிள்ளையார்,
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்,
திருநரையூர் பொள்ளாப் பிள்ளையார்.

நன்றி : தளிர் .சுரேஷ், அண்ணாமலை,
Print Friendly and PDFபிரிண்ட் எடுக்க

Saturday, September 12, 2015

கடன்காரர் - குட்டிக்கதை



ஏன்யா முத்துசாமி! உன்னிடம் நான் கடன் 
வாங்கியது எப்போது?”
-
ஒரு மாதத்துக்கு முன்னே”.
-
 “எப்போது தருவதாகச் சொன்னேன்?”
-
 “இருபது நாளில்”.
-
 “கெடு தாண்டிவிட்டதா இல்லையா?”
-
ஆமாம்”.
-
 ”பின்னே ஏன்யா வந்து கேட்கவில்லை?”
-
 “நீங்களே வந்து தருவீர்கள் என்று இருந்து விட்டேன்”.
-
 “நன்றாக இருக்கிறதே! வாங்குவதற்கும் நான் வர 
வேண்டும்; கொடுப்பதற்கும் உன்னைத் தேடி வந்து 
நான் அலைய வேண்டுமா?”
-
மன்னியுங்கள். எங்கே ஓடிப் போய்விடப் போகிறீர்கள்
 என்று நினைத்தேன்”.
-
 ”நான் ஓட மாட்டேன் என்பதற்கு என்னய்யா உறுதி?”
-
 “உறுதியில்லைதான். அப்படி நான் எவ்வளவு தந்து 
விட்டேன்? ஆயிரமா, பத்தாயிரமா? இருநூறு தானே?”
-
 “இருநூறு உனக்குக் கேவலமாகத் தெரிகிறதா
இருநூறு வாங்கின நான் கேவலமானவன் என்று குத்திக் 
காட்டுகிறாயா?”
-
 “ஐயையோ! அப்படியில்லை. பணம் வந்ததும் தூக்கி 
எறிந்து விடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
-
 “என்னது? எறிகிறதா? பணத்தை மதிக்க வேண்டுமய்யா. 
பொருள்தனைப் போற்றி வாழ்என்று ஒளவையார் 
சொன்னதைப் படித்ததில்லையா?”
-
 “நீங்கள் சொல்வது சரிதான். நானே வந்து வாங்கிக் 
கொள்வேன்”.
-
எப்போது?”
-
நாளைக் காலையிலே”.
-
கண்டிப்பாக வர வேண்டும். டிமிக்கி கொடுத்தால் 
நான் பொல்லாதவன் ஆகிவிடுவேன்.
-
 “கோபிக்காதீங்க. நிச்சயமாக வருவேன்.
-
வார்த்தை தவற மாட்டாயே?”
-
 “மாட்டேன்.
-
ஜாக்கிரதை! காத்திருப்பேன்!
-
---------------------------------------
> சொ.ஞானசம்பந்தன் (ஆனந்த விகடன், -ஒருநிமிடக் கதை, )


Print Friendly and PDFபிரிண்ட் எடுக்க

ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பரமாநுக்ரஹ ஸ்லோகம்

ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பரமாநுக்ரஹ ஸ்லோகம்

துளஸீதாஸ் எழுதிய  ’’ராம் சரித் மானஸ் ராமசரிதமானஸம என்கிற ராமாயணத்தில் வரும் ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பரமாநுக்ரஹ ஸ்லோகம்

அதுலித பலதாமம் ஸ்வர்ண சைலாபதேஹம்தநுஜவன க்ருசாநும் ஞானினாமக்ரகண்யம் |
ஸகல குணநிதானம் வானராணாமதீசம் ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி ||

அதுலித பலதாமம்  - நிகரில்லாத பலம் கொண்டவன்
ஸ்வர்ண சைலாபதேஹம் - ஸ்வர்ண பர்வதமாக தேஹம்
தநுஜவன க்ருசாநும் - ராக்ஷஸ குலமென்ற வனத்தை பொசுக்கும் தீ
ஞானினாமக்ரகண்யம்  ஞானிகளின் தலைவன்
ஸகல குணநிதானம் - ஸகல ஸத் குண நிலயமாக உடையவன்
வானராணாமதீசம் குரங்கு குணத்தையே மாற்றும் புத்தி திறமை
ரகுபதிவரதூதம் ராமனுக்கு தூதனாக சென்றவன்
வாதஜாதம் வாதத் திறமை கொண்டவன்
நமாமி வணக்கம்

****
ஆஞ்சநேயர் காயத்ரி

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹேவாயு புத்ராய தீமஹிதந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!!
***
'நன்மையும் செல்வமும் நாளும் நல்குமேதின்மையும பாவமும் சிதைந்து தேயுமேஜன்மமும் மரணமும் இன்றித் தீருமேஇம்மையே 'ராம' என்றிரண்டெழுத்தினால்'

நல்லன எல்லாம் தரும் 'ராம' நாமத்தை நாளும் நாம் ஜபிப்போமாக!


Print Friendly and PDFபிரிண்ட் எடுக்க

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms