என்னை பற்றி.....


என்னை பற்றி.....

முழுக்கக்முழுக்க சென்னைவாசி நான். உலகத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும் என் மனம் சென்னையை விட்டு அகலாது. சென்னையின் திருவான்மியூர், மயிலை, பாரிமுனை, எழும்பூர், கடற்கரை, கோவில், அலுவலகங்கள்,கடைகள்,மரங்கள்,கூவம், பகல், இரவு, மழை,குளிர்,காற்று என எல்லாமே எனக்கு ப்ரியம். எப்படி? ஏன்? எதற்கு? என்று கேட்டால் தெரியாது.பிடிக்கும் அவ்வளவுதான்.

தஞ்சை, காஞ்சிபுரம் சென்னை என தென்சென்னை எல்லையில் 1970ல்   சென்னை அறிமுகமானது. உடனே பிடித்துப் போனது (சினிமாவில் ஹீரோ ஹீரோயினை பார்த்தவுடன் லவ்வாகி போனதுப்போல்)

தமிழ்,
கவிதை,
இன்ஜ்னியரிங்,
அரசியல்,
ஆன்மீகம்,
மகாபாரதம்,
கலை,
அறிவியல்,
கம்பூயுட்டர்,
ஜோதிடம்,
புத்தகம்,
நகைச்சுவை,
சினிமா,
பத்திரிகைகள்  
இவையெல்லாம் நான் நேசிக்கும் எல்லைகள்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா நன்மை,தீமை அடுத்தவரால் வருவதில்லை என்பதில் மிக நம்பிக்கை.
வாசிப்பவனிடம்  உலகம் கற்றுக் கொடுக்கும்
நேசிப்பவனிடம்  உலகம் கற்றுக் கொள்ளும்.
இதை நான் புரிந்தும் கற்றும்  கொண்டது சென்னையில்தான்.

அன்பு-அமைதி-ஆனந்தம் இது என் வாசகம். இதற்காக நான் ஏற்றுக் கொள்ளும் பாடங்கள் தினம் தினம்.

1 கருத்துரைகள்:

vishwa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

hi cant able to download e books..please upload

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms