வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, May 30, 2012

பிள்ளையார்


கலைமகளின் குரு

எப்போது மனித முயற்சிகள் தோற்றுப்போய் , ஏதாவது வழி கிடைக்காதா எனும் ஏங்கும்போது, இறைவனின் திருவடிகளை தவிர இளைப்பாற  வேறு  இடமே இல்லை. இதை ஒவ்வொருவரும் நம் வாழ்வில் எதோ ஒரு தருணத்தில் நிச்சயமாக உணர்ந்தே இருப்பர்.
நாம் செய்த கர்ம வினைகளுக்கேற்ப நமக்கு துன்பங்களும், துயரங்களும் நம் வாழ்வில் தொடரும். ஆனால், தீவிர இறைவழிபாடு , அந்த கர்மங்களின் தாக்கத்தை பெருமளவில் குறைத்து , கஷ்டங்களை தாங்கும் சக்தியை நமக்கு கொடுக்கும்.
சிக்கல்கள் தீர்ந்தவுடன் , திரும்பவும் நம் மனம் முருங்கை மரமேறி விடுகிறது. ஏழரை, அஷ்டம சனி இருப்பவர்கள் மட்டும் , அந்த சூட்டை உணர்ந்து தங்கள் வாலை சுருட்டி கொண்டு , ஒழுங்கான பிள்ளைகளாய்  கடவுளை பற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
இறை வழிபாடு - ஹயக்ரீவர் காயத்ரி, துதி, ஸ்ரீ ஹயக்ரீவாஷ்டோத்தரசத நாமாவளி
ஹயக்ரீவர். திருமாலின் மிக சக்தி வாய்ந்த மூர்த்தங்களில் முக்கியமானவர் ஹயக்ரீவர். ஆனால், இதுவரை ஒரு ரகசியம் போலவே மறைத்துவைக்கப் பட்டிருக்கிறது. ஹயக்ரீவர் , கலைமகளுக்கே குரு வாக மதிக்கப் படுகிறார். 
கல்வி பயிலும் குழந்தைகள் , நல்ல ஞானம் பெற ஹயக்ரீவரை வழி பட, அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று மிக நல்ல நிலை அடைவது உறுதி. சினிமா, தொலைக்காட்சி போன்ற வெகுஜனத் தொடர்பு உடைய துறைகளை தேர்ந்து எடுப்பவர்கள் , இவரை வழிபட , அவர்கள் தடைகள் நீங்கி , பிரபலம் அடைவர். இது ஏன் என்பது, அவரது அவதார வரலாற்றை அறிந்து, அவரை வழிபட நம் வாழ்வில் படிப்படியாக ஏற்படும் மலர்ச்சியை வைத்து உணர்ந்து கொள்ள முடியும்.


அவதாரம் :
பகவான் விஷ்ணு, பிரளய காலத்தில் இந்த உலகையும் மக்களையும் தன்னுள்ளே தாங்கி, ஆலிலை மேல் பாலகனாய் பிரளயகால சமுத்திரத்தில் யோக நித்திரை செய்து வந்தார். பின் உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மனை படைத்து நான்கு வேதங்களையும் உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார்.ஒருமுறை பெருமாளின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த்திவலைகள் தோன்றி, மது, கைடபன் என்ற அசுரர்களாக மாறினர். இவர்கள் பெருமாளிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங்களே படைப்புத்தொழில் புரிய ஆசைப்பட்டனர். குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தார். பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகம் வர, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார். அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன.

தியான காயத்ரி : 
ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

துதி :
ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே

பொருள் : ஞானத்தின் இருப்பிடமும், ஆனந்த மயமானவரும்; படிகம் போன்ற நிர்மலமான குணம் உள்ளவரும்; எல்லாக் கலைகளுக்கும், கல்விக்கும் ஆதாரமாகத் திகழ்பவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன் என்று சொன்னபடியே தரிசியுங்கள். நீங்கள் ஜெயிப்பது நிஜம்!


ஸ்ரீ ஹயக்ரீவாஷ்டோத்தரசத நாமாவளி
ஓம் ஹயக்ரீவாய நம:
ஓம் மஹாவிஷ்ணவே நம:
ஓம் கேஸவாய நம:
ஓம் மதுஸூதநாய நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் புண்டரீகாக்ஷõய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் விஸ்வம்பராய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸர்வவாகீஸாய நம:
ஓம் ஸர்வாதாராய நம:
ஓம் ஸநாதநாய நம:
ஓம் நிராதாராய நம:
ஓம் நிராகாராய நம:
ஓம் நிரீஸாய நம:
ஓம் நிருபத்ரவாய நம:
ஓம் நிரஞ்ஜநாய நம:
ஓம் நிஷ்களங்காய நம:
ஓம் நித்யத்ருப்தாய நம:
ஓம் நிராமயாய நம:
ஓம் சிதாநந்தாய நம:
ஓம் ஸாக்ஷிணே நம:
ஓம் ஸரண்யாய நம:
ஓம் ஸர்வதாயகாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் லோகத்ரயாதீஸாய நம:
ஓம் ஸிவாய நம:
ஓம் ஸாரஸ்வதப்ரதாய நம:
ஓம் வேதோத்தர்த்ரே நம:
ஓம் வேதநிதயே நம:
ஓம் வேதவேத்யாய நம:
ஓம் புரதநாய நம:
ஓம் பூர்ணாய நம:
ஓம் பூரயித்ரே நம:
ஓம் புண்யாய நம:
ஓம் புண்யகீர்த்தயே நம:
ஓம் பராத்பரஸ்மை நம:
ஓம் பரமாத்மநே நம:
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம:
ஓம் பரேஸாய நம:
ஓம் பாரகாய நம:
ஓம் பரஸ்மை நம:
ஓம் ஸகலோநிஷத்வேத்யாய நம:
ஓம் நிஷ்களாய நம:
ஓம் ஸர்வஸாஸ்த்ரக்ருதே நம:
ஓம் அக்ஷமாலா ஜ்ஞாநமுத்ரா யுக்தஹஸ்தாய நம:
ஓம் வரப்ரதாய நம:
ஓம் புராண புருஷாய நம:
ஓம் ஸ்ரேஷ்டாய நம:
ஓம் ஸரண்யாய நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் ஸாந்தாய நம:
ஓம் தாந்தாய நம:
ஓம் ஜிதக்ரோதாய நம:
ஓம் ஜிதாமித்ராய நம:
ஓம் ஜகந்மயாய நம:
ஓம் ஜராம்ருத்யுஹராய நம:
ஓம் ஜிவாய நம:
ஓம் ஜயதாய நம:
ஓம் ஜாட்யநாஸதாய நம:
ஓம் ஜபப்ரியாய நம:
ஓம் ஜபஸ்துத்யாய நம:
ஓம் ஜபக்ருதே நம:
ஓம் ப்ரியக்ருதே நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் விமலாய நம:
ஓம் விஸ்வரூபாய நம:
ஓம் விஸ்வகோப்த்ரே நம:
ஓம் விதிஸ்துதாய நம:
ஓம் விதயே நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் சிவஸ்துத்யாய நம:
ஓம் ஸாந்திதாய நம:
ஓம் க்ஷõந்தி பாரகாய நம:
ஓம் ஸ்ரேய: ப்ரதாய நம:
ஓம் ஸ்ருதிமயாய நம:
ஓம் ஸ்ரேயஸாம் பதயே நம:
ஓம் ஈஸ்வராய நம:
ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்த ரூபாய நம:
ஓம் ப்ராணதாய நம:
ஓம் ப்ருதிவீபதயே நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் வ்யக்த ரூபாயை நம:
ஓம் ஸர்வஸாக்ஷிணே நம:
ஓம் தமோஹராய நம:
ஓம் அஞ்ஞாநநாஸகாய நம:
ஓம் ஜ்ஞாநிநே நம:
ஓம் பூர்ணசந்த்ரஸமப்ரபாய நம:
ஓம் க்ஞாநதாய நம:
ஓம் வாக்பதயே நம:
ஓம் யோகிநே நம:
ஓம் யோகீஸாய நம:
ஓம் ஸர்வகாமதாய நம:
ஓம் மஹாமௌநிநே நம:
ஓம் மஹாயோகிநே நம:
ஓம் மௌநீஸாய நம:
ஓம் ஸ்ரேயஸாம்நிதயே நம:
ஓம் ஹம்ஸாய நம:
ஓம் பரம ஹம்ஸாய நம:
ஓம் விஸ்வகோப்த்ரே நம:
ஓம் விராஜே நம:
ஓம் ஸ்வராஜே நம:
ஓம் ஸுத்தஸ்படிக ஸங்காஸாய நம:
ஓம் ஜடாமண்டல ஸம்யுதாய நம:
ஓம் ஆதிமத்யாந்தரஹிதாய நம:
ஓம் ஸர்வவாகீஸ்வரேஸ்வராய நம:Saturday, May 26, 2012

மஹாபாரதம் - முழுக்க முழுக்க தர்மத்தின் பார்முலா.


ஹாபாரதம் என்ற இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் பார்முலா. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் வாழும் விளக்கங்கள். இதி ஹாஸம்என்றால் இது நடந்ததுஎன்று பொருள். நமது பண்டைய வரலாறு.
கற்பனைக் கதையா? தனிமனிதனால் எழுதப்பட்ட புனைவா அல்லது நடந்த உண்மையா? எதுவாயினும் கதாபத்திரங்கள் மூலமாக சொல்லப்பட்ட அத்தனை தர்மங்களும் எல்லா மனிதர்களுக்கும் எல்லா காலத்திற்கும் ஏற்றவை என்பதே இதன் பெருமை.
இந்த பரந்த பாரத நாட்டிற்கு அந்தப் பெயர் வந்ததற்கு காரணம் இந்நாட்டின் பேரரசர் பரதன். சிறுவயதில் பள்ளிக்கூட பாடத்தில் கூட படித்த ஞாபகம் உண்டு. முன்னொரு காலத்தில் இந்த நாட்டை பரதன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான். அதனால் இது பாரத நாடு என பெயர் பெற்றது என்று. தற்போது எந்த பள்ளிப் புத்தகத்திலும் அது போன்ற வாசகம் காண முடியாது. ஏனெனில் அது போன்ற வாசகம் இந்தியாவை இந்து நாடு என்று குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்து விடுமே. அதனால் அப்படி போடமாட்டார்கள். சரி, அதை அப்புறம் பார்ப்போம்.
மகோந்நதமான சக்கரவர்த்தி. வீரம் பொருந்தியவர். ஹஸ்தினாபுரத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய வீரர் பரதன். அகண்ட பாரதத்தை ஒரு குடையின் கீழ் உண்டாக்கியவர். இத்தகைய கம்பீரமான அரசருக்கு பிற்காலத்தில் இந்த தேசம் அவரது பெயராலேயே காலங்காலமாக அழைக்கப்படப் போகிறது என்பது அப்போது தெரியாது.
தர்மவானான அவருக்கு அத்தகைய சிறப்பை உண்டாக்கிய காரியம் எது? நாட்டின் எல்லைகளை விரிவு படுத்திய வீரமா? கொடை வள்ளல் என்ற பெருமையா? அரசன் என்பதால் பயமா? இல்லை.
ஒரு நாள் அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்பு அவருக்கு அத்தகையப் பெரும் பெயரை உண்டாக்கியது. இந்த உலகில் எதிர் வரும் அரசாங்கங்களுக்கெல்லாம் ஒரு சிறந்த வழிகாட்டும் தர்மமாக மாறியது.
துஷ்யந்த ராஜாவுக்கும் சகுந்தலைக்கும் பிறந்த சக்ரவர்த்தி பரத மாமன்னர் தனக்கு வயதாகி விட்டதை உணரத்துவங்கினார். தனக்குப் பிறகு இந்நாட்டை ஆளப்போகும் இளவரசனை அறிவிக்க ஆவலுற்றார். ஆனால் யார் என்பதை அறிவிக்க வேண்டுமே. பரத மன்னருக்கு ஒன்பது மகன்கள் இருந்தனர். அவர்களில் மூத்த மகனுக்குத்தான் இளவரசன் என்ற பட்டத்தை அளிப்பார் என்று சபையோர் எல்லாம் எதிர்பார்த்து அறிவிப்புக்குக் காத்திருந்தனர்.
ஆனால் பரத மன்னன் மிகுந்த மனசஞ்சலத்திற்கு ஆளானார். தனது தாத்தாவும் மகரிஷியுமான கந்தரிடம் சென்று தனது சஞ்சலத்திற்கு தீர்வு கிடைக்குமா என்று கேட்கலானார்.
மகரிஷியே ஒன்பது மகன்களுக்குத் தந்தையான நான் யாரை இளவரசனாக ஆக்குவது என்பதில் சஞ்சலமுற்றிருக்கிருக்கிறேன்என்றார்.
அதற்கு ரிஷியோ இந்தப் பிரச்சனையின் அர்த்தம், அகண்ட பூமியை வென்ற பரதன் தன்னைத்தானே வெல்லவில்லை என்பதையே காட்டுகிறது. உன்னையே நீ வெல்லாவிடில் உன்னால் ஞாயம் சொல்ல முடியாது. உன்னையே நீ வெல்ல முயற்சி செய். உனது மனம் எதை விரும்புகிறது என்று நீ முதலில் முடிவு செய். அதில் உறுதியாக இரு. எனது ஆசீர்வாதங்கள்என்று மட்டும் சொல்லி அனுப்பிவைத்தார்.
மறுநாள் பரத மன்னன் அரசவைக்கு வருகிறார். தனது சிம்மாசனம் நோக்கிச் செல்கிறார். அருகில் அமர்ந்திருந்த தனது தாய்க்கு வணக்கம் தெரிவித்து விட்டு மகா மந்திரியை அருகில் அழைத்து தான் எழுதி வந்த ஓலையை வாசிக்கச் செய்கிறார்.
பரத மன்னரின் அறிவிப்பை மந்திரி வாசிக்கத் துவங்கினார், “நான் துஷ்யந்த புத்திரன் பரதன் எனது நாட்டு மக்களுக்கு வணக்கத்தை தெரிவிக்கிறேன். என்னுடன் வெற்றி பயணத்தில் பிரயானித்த எனது வீரர்களுக்கும் எனது வணக்கத்தையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன். அவர்களால் தான் இந்த எல்லைகள் விரிவடைந்து பெருமைமிக்க நாடு உண்டானது. இதோ இந்த ராஜ சிம்ஹாசனத்திலிருந்து சொல்ல விழைகிறேன். ஒரு அரசன் என்பவன் தேசம் மற்றும் தேச மக்களை விட முக்கியமானவன் அல்ல.
ராஜாவுக்கு மூன்று முக்கிய கடமைகள் உண்டு.
1. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நீதி வழங்குவது
2. நாட்டையும் மக்களையும் காப்பது.
3.அந்தக் கடைமைகளை தவறாமல் நிறைவேற்றும் இளவரசனை நாட்டுக்குத் தருவது
இந்த குணங்களை எனக்குப் பிறந்த எந்த மகனிடமும் நான் காணவில்லை”. இதை வாசித்த மந்திரி அரசனை அதிர்ச்சியுடன் பார்க்க பரதனோ மேலும் படி என்று சைகை காட்டினார். மந்திரி மேலும் படித்தார். ஆகையால், இந்நாட்டின் ப்ரஜையும், சிறந்த வீரனுமான பாரத்வாஜ பூமன்யூவை எனது புத்திரன் ஆக்கி அவனை இளவரசனாக அறிவிக்கிறேன்என்றார்.
அரசவையே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பரதனோ, “இந்த முடிவு எல்லோருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கும். யாருக்காகிலும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்இப்படி ஒரு அறிவுப்பு வரும் என்று சற்றும் எதிர்பாராத மந்திரி மன்னரிடம் தன் கருத்தைச் சொல்ல அனுமதி கேட்கிறார்.
மன்னன் அனுமதிக்கிறான். மந்திரி கூறினார், “மகாராஜா, மனதில் தோன்றியதைத் தான் கேட்கிறேன். வாழையடி வாழையாக மன்னனின் புத்திரனுக்குத்தான் அரச சிம்மாசனம். ஆகவே…” என இழுக்கையில் மன்னன் அரியனையிலிருந்து வேகமாக எழுந்தான்.
ஆகவேதான் இந்த பாரம்பர்யத்தை மாற்ற நினைக்கிறேன் மந்திரியாரே!என்றார். கேவலம் பிறப்பின் அடிப்படையில் மட்டுமே யாராலும் நாட்டின் அரசனாக முடியாது. ராஜசிம்மாசனத்தின் மீதுள்ள அதிகாரம் என்பது பிறப்பின் அடிப்படையால் மட்டுமல்ல, செயல்பாடு யோக்கியதை போன்றவைகள் வைத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். ராஜா என்ற அதிகாரம் தன் குடும்பத்திற்காகவும் மகனுக்காகவும் அல்ல. அவனது தேசம் மற்றும் நாட்டின் விசுவாசிகளுக்காகத்தான். எனது புத்திரர்கள் கடமையும் கண்ணியமும்
தவறியதால் அவர்களுக்கு அரியனை ஏறும் தகுதி கிடையாது.
அரசியலின் ஆதாயம் புத்திர நலன் அல்ல உலக நலன் தான். ஒரு ராஜா என்பவன் புத்திர மோகத்தில் தனது நாட்டின் எதிர்காலத்தை அடகு வைப்பவன் அல்ல. எனது முடிவே இறுதியானதுஎன்று கூறி சபையை விட்டு வெளியேறினார்.
அன்றிரவு பரதனின் தாய் சகுந்தலை கவலையுடன் காணப்பட்டாள். தனது மகன் அரசனாக இருந்தும் அதிகாரத்தை தனது பேரப்பிள்ளைகளுக்கு கொடுக்காமல் யாரோ ஒருவருக்குக் கொடுத்து விட்டான் என்று வருத்தத்தமடைந்தாள். இதை கேள்விப்பட்ட பரத சக்ரவர்த்தி தன் தாயிடம் சொன்ன வாக்கியங்கள் அரச தர்மத்தின் உச்சம்.
பரதன் தன் தாயிடம் விளக்கினான்
தாயே எனது மகனுக்கு அதிகாரத்தைக் கொடுக்கவில்லை என்று நீங்கள் வருந்துகிறீர்கள். ஆனால் தாயே, நான் தந்தை மட்டுமல்ல அரசனும் கூட. தர்மத்தின் பொருட்டு செயல் படும் கடமை எனக்கு உள்ளது. என் குடும்பம் மிகப்பெரியது தாயே! இப்போது இளவரசனாக அறிவிக்கப்பட்டிருப்பவனும் என் புத்திரன் தான். அவனும் இந்நாட்டின் ப்ரஜை தானே. என் நாட்டின் பிரஜைகள் யாவருமே என் குடும்பம் தான். ஒரு வேளை எனது புத்திரனின் ஒருவனை நான் அரசனாக அறிவித்திருந்தால் இந்த நாடு, இதன் பிரஜை இரண்டுக்குமே அநீதி நடந்திருக்கும். அம்மா, உங்கள் புத்திரன் ஒரு ஞானவான் என்று கர்வம் கொள்ளுங்கள். அதுவே எனக்கும் பெருமை
என்று தன் தாயின் வருத்தத்தை துடைத்து வெளியேறினார் தர்மவான் பரதன்.
ராஜாவின் வாரிசே ராஜாவாக முடியும் என்ற நிலையை தர்மத்தின் பொருட்டு மாற்றிய முதல் அரசன் சகுந்தலையின் மகன் பரதன் ஆவான். அதற்குப் பின் பலகாலம் பாரதத்தில் மக்களில் தகுதிவாய்ந்தவரே அரனாக ஆனார்கள். பின்னர் பல தலைமுறைக்குப்பிறகு வந்த சாந்தனு என்ற அரசனுக்குப் பிறகு மீண்டும் வாரிசுக்கு உரிமை என்ற நிலை உண்டானது. சாந்தனுவின் மகன் தான் கங்கை மைந்தன் பீஷ்மர். தனி மனிதர்கள் பூமியை சொந்தம் கொண்டாடத் துவங்கினார்கள்.
ஆம், குருக்ஷேத்ரம் போருக்குத் தயாராகிக்கொண்டிருந்தது அப்போது தான்.
பரதனின் அந்த ஒரு நாள் அறிவிப்பு நமது நாட்டில் அரசன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அற்புதமான உதாரணமாக இன்னும் உலகுக்கெல்லாம் போதித்துக் கொண்டிருக்கிறது.
அன்றைய அரசன் வாரிசு அரசாங்கத்தை மாற்றி மக்களாட்சியை நிறுவினான். இன்றைய அரசர்களாக விளங்கும் அரசியல் வாதிகள் மக்களாட்சியை மாற்றி வாரிசு அரசாங்கத்தை விதைக்கிறார்கள்.
-Arrow Sankar

Wednesday, May 23, 2012

அறிஞன்

வான்மீகீயூர் L.L.சங்கரின் மௌனக் கதைகள் தொகுப்பிலிருந்து 
 6. அறிஞன்

அறிஞன் ஒருவன் இருந்தான். தனக்கு எல்லாம் தெரியும் என்கிற கர்வம் அவனுக்குத் தலைக் கேறியிருந்தது. மற்றவர்களை முட்டாளாகக் கருதினான்.
ஒரு நாள் அவன் ஒரு கிராமத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தான். அந்தக் கிராமத்து மக்கள் நல்ல அனுபவ ஞானமுள்ளவர்கள் என்பதை அறிந்து அவர்களைச் சோதிக்க எண்ணிணான்.
மாடு மேய்க்கும் இளைஞன் ஒருவன் மரக்கிளையின் மேல் அமர்ந்து இருந்தான். அறிஞன் அவனிடம் போய் , “ உன்னிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன்.” என்றான்.
அவனும் மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து “கேளுங்கள்” என்றான். படித்திருக்கும் நம்மில் பலரும் யாராவது நம்மைக் கேள்வி கேட்கப் போகிறேன் என்றாலே சிறிய அச்சம் வந்து விடும்.
ஆனால் அந்த இளைஞன் தயக்கமின்றி “கேளுங்கள்” என்றதும் அதிர்ச்சியுற்று, “ ஏனப்பா நான் கேள்வி கேட்பதாகச் சொன்னவுடன் உனக்குத் தயக்கமோ,அச்சமோ ஏற்படவில்லையா? என்று கேட்டான்.
இளைஞன், “ உலகில் அனைத்தும் தெரிந்தவரும் இல்லை. ஓன்றுமே தெரியாதவரும் இல்லை. நீங்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் தெரிந்தால் சொல்லப் போகிறேன். தெரியாவிட்டால் உங்களiடமிருந்து தெரிந்து கொள்கிறேன். இதில் அச்சமோ, தயக்கமோ எதற்கு? என்றான்.
இளைஞனுடைய கலக்கமில்லாத மனநிலை அறிஞனுக்கு புதிராக இருந்தது. அறிஞன் அவனிடம் கேள்வி கேட்டான், “ உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது?
இளைஞன், “ சூரிய ஒளி .அதற்கு மேற்பட்ட ஒளியே இல்லை” என்றான்.
அறிஞனும் அதை ஏற்றான்.
உலகில் சிறந்த நீர் எது? என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்.
இளைஞனும், “ கங்கை நீர். சிவனின் சிரசிலிருந்தும் விஷ்னுவின் பாதத்திலிருந்தும் வந்து அதில் மூழ்கியவர்களுக்கு மோட்சம் அளிக்கும் கங்கை நீரை விடச் சிறந்த நீர் வேறு எது இருக்க முடியும்?.
அறிஞன் வியந்தான்.
உலகில் சிறந்த மலர் எது?
இளைஞன் சற்று யோசித்தபடி “தாமரை” என்றான். மலர்களில் அகன்று விரிந்த மலர்.தேவ,தேவியர் வீற்றிருக்கும் பாக்கியம் பெற்ற மலர்.
அறிஞன் அந்த வாலிபனின் அறிவுத்திறனை மெச்சித் தன்னிடமிருந்த முத்துமாலையைப் பரிசளித்தான்.
ஆனால் அந்த இளைஞனோ அந்தப் பரிசை வாங்கிக் கொள்ளவில்லை.
அறிஞனின் கர்வத்தை நீக்கும் வகையில், “ அய்யா , நான் சொன்ன விடைகள் மூன்றுமே தவறு. தவறான விடைகளையேப் பாராட்டி எனக்குப் பரிசு தர விரும்புகிறீர்களே, சரியான விடைகளுக்கு வேறு என்ன தருவீர்களோ?” என்றான்.
தன் தலையில் சம்மட்டியால் ஓங்கி அடிப்பதாக உணர்ந்தான், அந்த அறிஞன்.
சுயநிலையடைந்த அறிஞன் சற்றுப் பணிந்தபடி, “ நீ சொன்ன விடைகள் தவறு என்கிறாயே?, சரியான விடைகளைச் சொல் பார்க்கலாம்.” என்றான்.
இளைஞன் தெளிவாகப் பேசினான்.
அய்யா, சூரியஒளி சிறந்தது என்றேன். நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். ஆனால் கண் ஒளி இல்லையென்றால் சூரிய ஒளியைப் பார்க்க முடியுமா? கண் ஒளி இல்லையென்றால் உலகமே இருட்டுதானே...ஆகவே எல்லா ஒளிகளையும் பார்த்து உணரக்கூடிய கண் ஒளியே சிறந்த ஒளி. இது இறைவன் நமக்களித்த வரப்பிரசாதம். இதற்காக நாம் இறைவனுக்குப் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறோம்.
இளைஞன் தொடர்ந்தான். “உங்களது இரண்டாவது கேள்விக்கு கங்கை நீரே சிறந்த நீர் என்ற போது நீங்கள் மறுக்கவில்லை. உலகில் உள்ள மற்ற நாட்டவர்கள், மற்ற மதத்தினர் இதை ஏற்பார்களா? ஆகவே பாலைவனத்தில் உள்ள சோலையில் அபூர்வமாகக் கிடைக்கும் நீரே சிறந்தது.
“தாமரை மலர் பெரியதாக இருக்கலாம்.அதனால் மக்களுக்கு என்ன பயன்? நீரிலிருந்து வெளியில் எடுத்தால் வாடிவிடும். உண்மையில் மலர்களில் சிறந்தது பருத்தி மலர்தான். அதன்மூலம் கிடைக்கும் நூலினால் துணி நெய்யப்படுகிறது. உலகிலுள்ள மக்கள் அனைவரது மானத்தைக் காக்கும் மலர் என்பதால் அதுவே சிறந்தது.
அறிஞன் அவனைப் பாராட்டியதோடு தன் கர்வத்தையும் அன்றோடு விட்டொழித்தான்.
Print Friendly and PDF

Tuesday, May 22, 2012

வெற்றியின் இரகசியம்


மௌனக் கதைகள் -
வான்மீகீயூர் L.L.சங்கரின் மௌனக் கதைகள் தொகுப்பிலிருந்து 
5. வெற்றியின் இரகசியம்

ஒருவன் தினந்தோறும் கடவுளிடம் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக வழிபாடு செய்து வந்தான். ஒரு நாள் இரவு வந்த கனவில் அவன் காட்டிற்குள் சென்று கொண்டிருக்கும் போது ஏதோ ஒன்று வழிகாட்டுவது போலவும் அதணால் அவனுக்கு வாழ்வின் இலட்சியம் விளங்குவதாகவும் தோன்றியது.
மறு நாளே தான் வசித்த இடத்திலிருந்து கிளம்பி பக்கத்தில் உள்ள காட்டிற்குச் சென்றான். பல மணி நேரம் அலைந்து திரிந்தும் அவனுக்கு எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை.
களைப்புற்று போனவன் கடைசியாக ஒய்வெடுப்பதற்காக ஒரிடத்தில் அமர்ந்தான். கொஞ்சம் தூரத்தில் நிழலாக தெரிந்த இடத்தில் இரண்டு பாறைகளுக்கு நடுவில் நரி ஒன்று படுத்திருந்தது. அதற்கு கால்கள் எதுவுமே இல்லை.
அதைப் பார்த்து வியந்தவன், எப்படி கால்களற்ற நரி உயிர் பிழைத்து வாழ்கிறது என்பதனைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்து, அங்கேயே அமர்ந்து கவனிக்கலானான்.
வெகு நேரம் கழித்து சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் புலி ஒன்று அங்கு வந்தது, தான் உன்னும் இறைச்சியில் கொஞ்சம் நரிக்கு முன்னால் வைத்து விட்டுச் சென்றது.
"ஆ! இப்பொழுது புரிந்து விட்டது" என்று கூறியவன், "கடவுளை முழுமையாக நம்பி ஒப்படைப்பதே வெற்றியின் இரகசியம், நான் இனி எதையும் செய்யத் தேவை இல்லை, கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
இரண்டு வாரங்கள் கழித்து, பசி மயக்கத்தோடு உடலில் தெம்பில்லாமல் இருந்த போது இன்னொரு கனவு வந்தது அதில் "முட்டாளே, நரியைப் போல் இருக்காதே! புலியைப் போல் இரு" என்று யாரோ சொல்வது போல் கேட்டது.
Print Friendly and PDF

Monday, May 21, 2012

நடுக்குவாதம் (Parkinson's disease) &பக்கவாதம் (Stroke) மின் புத்தகம்(e- book)


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.ஆயினும் மனிதன் பிறக்கும் போதே நோய்களும்  மனிதனுடனே பிறந்துவிட்டன. இதனை ஒழிக்க மருத்துவ உலகம் இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறது. எனினும் சூழ்நிலைகளினாலும் தவறான ௨ணவுபழக்கங்களினாலும் நெறிமுறையற்ற வாழ்க்கை முறைகளாலும் நோய்கள் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நோய்களினால் மனித இழப்பும், மனிதலாற்றல் இழப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கு  தீர்வாக மருத்துவர்கள் மட்டுமே செயல்பட முடியாது. மனிதனின் முழுமுற்சியும், தன்னார்வமும், சுய விழிப்புணர்ச்சியுமஂ மிக அதிகமாக நோய் தீர்க்க வழிவகுக்கிறது. அதற்கு நோய்பற்றியும், நோயின் தாக்குதல் பற்றியும் அறிவினை பெற வேண்டும்.இதனை மருத்துவர்கள் மட்டுமே போராட வேண்டும் என்கிற தார்மீக பொறுப்பில்லை. தன்னார்வமிக்க ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட. எனவேதான் எனது முதல் முயற்சியாக, நடுக்குவாதம் (Parkinson's disease) &பக்கவாதம் (Stroke) என்கிற நோயறிவு நூலாக இந்நூலை எழுதியுள்ளேன். இந்நூலில்  குறிப்பிட்டப் பட்டுள்ள கருத்துக்களும், தீர்வுகளும் நான் படித்த, கேட்க பெற்ற விஷயங்களே. எனது சுய சிந்தனையினாலோ அல்லது அனுபவத்தினாலோ எழுதவில்லை எனினும் இந்நூல் நோயைப்  பற்றி அறியவும் அதனை தவிர்க்கவும், தீர்க்கவும் வழி வகுக்கும் என நம்புகிறேன்.


நடுக்குவாதம் (Parkinson's disease) &பக்கவாதம் (Stroke) என்கிற நோயறிவு நூலை மின் புத்தகமாக(e- book) பெற கீழே ௨ள்ள லிங்கினை அழுத்தி டவுன்லோடு செய்யவும்


Friday, May 18, 2012

மகாபாவி


மௌனக் கதைகள் -
வான்மீகீயூர் L.L.சங்கரின் மௌனக் கதைகள் தொகுப்பிலிருந்து
4. மகாபாவி
சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.
ஒரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.
பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.
வெகு நேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.
பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் 'நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்' என்று சொன்னான்.
மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள்.
இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.
அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர்.
பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.
மற்ற ஒன்பது விவசாயிகளும் "இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு" என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.
அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.
அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.
அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.
மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்.
Print Friendly and PDF

கவிதை -2 பொய்


கவிதை -2

மூன்றுஎழுத்து கவிதை ஒன்றை சொல்லேன்
காதலி என்றேன்.
'அம்மா ' என்று சொல்லக்கூடாதா
அம்மா வருத்தப்பட்டாள்.
அம்மா நீ
'அன்பு' என்ற மூன்றெழுத்தின் உண்மையென்றேன்.
காதலியோ
'பொய்' என்ற இரண்டெழுத்தின் நிஜமென்றேன்.
அடப்பாவி என்று ஆச்சரியமுற்றாள்.
கவிதைக்கு 'பொய்'அழகுத்தானே.

- Arrow சங்கர்

பார்வையற்ற துறவி


மௌனக் கதைகள் - 2
பார்வையற்ற துறவி
வான்மீகீயூர் L.L.சங்கரின் மௌனக் கதைகள் தொகுப்பிலிருந்து 
ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது.

அவ்வழியாக வந்த ஒருவன் “ ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி, “ இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை.” என்றார்.
சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, “ ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்.” என்றார்.
மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் “துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்” என்று பணிவோடு கூறினான்.
உடனே துறவி, “ மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்.” என்றார்.
மிகவும் வியந்த அரசன், “ துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.
“அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்.”
முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார். அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது. ஆனால் நீங்களோ மிகவும் பணிவாகப் பேசுறீர்கள்.” என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.
Print Friendly and PDF

தானாக வந்த தத்துவம் -2


தானாக வந்த தத்துவம் -2

சீனபழமொழியிலிருந்து

மீன் சாப்பிட கற்றுக்கொடுத்தால் ஒருநாள் மட்டும் சாப்பிடுவான்
மீன் பிடிக்க  கற்றுக்கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் சாப்பிடுவான்


நண்பர் சீனீவாசன் வர்கள் என் வலைப்பதிவிற்கு அனுப்பிய சுவாரஸ்யமான நல்ல பழமொழி இது.   திரு.சீனீவாசன் வர்களுக்கு என நெஞ்சார்ந்த நன்றி.

தானாக வந்த தத்துவம் -1


தானாக வந்த தத்துவம் -1
திருவான்மீயூர் முடிதிருத்தகமொன்றில் (26.02.2012)

முதலாமவன் : என்ன மச்சான் புது போனா?
இரண்டாமவன் : ஆமான்டா டுயல் சிம்மு, கேமரா கூட இருக்குடா.
முதலாமவன் : போதும்டா. இருக்குறத வச்சி அட்ஜஸ் பண்றதுதான்டா லைப்பே!

கவிதை -1 காதல்


கவிதை -1


காதல்
நான் சொன்ன கதை௧ள்
நீ சிரித்தபோது
விழுந்த முத்து  விதை௧ள்
இரண்டும் ஒன்றானது
-வி-தை

- Arrow சங்கர்
   

பெண்


மௌனக் கதைகள் -1 
பெண்
வான்மீகீயூர் L.L.சங்கரின் மௌனக் கதைகள் தொகுப்பிலிருந்து 


சாமியாரும் சீடர்களும் ஆற்றை கடக்க முற்பட்டனர்.   அப்போது ஒரு பெண்  தான் ஆற்றை கடக்க உதவும்படி கேட்டுக்கொண்டாள்.  உடனே சாமியார் அந்த பெண்ணை தோளில் போட்டுகொண்டு ஆற்றைக்கடந்தார்.
கரை வந்ததும் அப்பெண்ணை இறக்கிவிட்டு சாமியார் நடந்தார்.  சீடர்கள் சாமியாரை பின் தொடர்ந்தனர்.
ஐந்து கிலோமீட்டர் கடந்து வந்தபிறகு சீடர்கள் சாமியாரிடம்,   ‘’சாமி…நீங்கள் எப்படி ஒரு பெண்ணைத்தூக்கலாம்…என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த சாமியார்,  நான் அந்த பெண்ணை எப்போதோ இறக்கிவிட்டுவிட்டேன்.  ஆனால் நீங்கள் இன்னமும் அவளை சுமந்து கொண்டிருக்கிறீர்கள்’’என்று சொன்னார்.

Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms