வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, October 31, 2012

காதல் விவகாரத் துறை

குசும்பு குடுமியாண்டி : ரொம்ப நாளைக்குப்பிறகு நான் வந்தாலும் நல்ல மேட்டரோடத்தான் வருவேன் . ஆனா பாருங்க, நம்ம வேலையை இவங்க எடுத்துக்கிட்டாங்க 

புதுடில்லி:காதல் விவகாரங்களில் கை தேர்ந்த, சசி தரூருக்கு, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு பதிலாக, "காதல் விவகாரத் துறை' என்ற பெயரில், புதிதாக ஒரு துறையை உருவாக்கி, அந்த துறையின் அமைச்சர் பொறுப்பை, அவருக்கு கொடுத்திருக்கலாம்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

குஜராத் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, நரேந்திர மோடி, சமீபத்தில் அளித்த பேட்டியில், "50 கோடி ரூபாய் பெண் தோழி சுனந்தாவுக்காக, பேரம் பேசியவர் சசி தரூர்' என, கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து சசி தரூர் கூறியதாவது:
என் மனைவி சுனந்தா, 50 கோடி ரூபாய் மதிப்புடையவள் அல்ல; அவளுக்கு விலையே கிடையாது; அதை விட, அதிக மதிப்புடையவள். இதை புரிந்து கொள்ள, அவளைப் போன்ற யாராவது ஒருவரை, நீங்கள் காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்.இவ்வாறு சசி தரூர் கூறியிருந்தார்.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, இந்த காதல் விவகாரம், நேற்று அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான, முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:சசி தரூர், காதல் விவகாரங்களில் கை தேர்ந்தவர். அவரை, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு இணை அமைச்சராக நியமித்திருக்கக் கூடாது. சர்வதேச அளவிலான, காதல் விவகாரங்களில் கை தேர்ந்த அவருக்காக, "காதல் விவகாரத் துறை' என்ற புதிய துறையை உருவாக்கி, அதற்கு அமைச்சராக அவரை நியமித்திருக்க வேண்டும்.இவ்வாறு முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.
இதுகுறித்து, காங்கிரசைச் சேர்ந்த, தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர், மனீஷ் திவாரி கூறுகையில், ""பா.ஜ.,வினர், மிகவும் தரக் குறைவாக விமர்சிக்கின்றனர்; அவர்கள் அளவுக்கு தரக்குறைவாக விமர்சித்து, எங்களின் தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை,'' என்றார்.சசி தரூர் ஏற்கனவே, திலோத்தமா, கிறிஸ்டினா என்ற இரு பெண்களை மணந்து, விவாகரத்து செய்தவர். மூன்றாவதாக, சுனந்தா புஷ்கரை திருமணம் செய்தார். கொச்சி, ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியை, சுனந்தாவுக்கு பேரம் பேசியதாக, சசி தரூர் மீது புகார் கூறப்பட்டது.
இதனால், ஏற்கனவே அமைச்சர் பதவியை இழந்த அவரை, காங்., மேலிடம் தற்போது, மீண்டும் அமைச்சராக்கியுள்ளது. இதுகுறித்தே, நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருந்தார்.
அது என்ன 50 கோடி கணக்கு? கேள்வி எழுப்புகிறார் சுனந்தா

சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கூறியதாவது:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, என்னை, 50 கோடி ரூபாய் பெண் தோழி எனக் கூறியுள்ளார். அது என்ன 50 கோடி ரூபாய்; இது என்ன கணக்கு; என்னுடைய வருமானத்துக்கு, முறையாக வரி செலுத்தியுள்ளேன்; அதற்கான ஆவணங்கள் உள்ளன.தரக்குறைவாக விமர்சிக்கும் நரேந்திர மோடிக்கு, குஜராத் மாநில பெண்கள், இந்த தேர்தலில் ஓட்டளிக்கக் கூடாது. நானும், சசி தரூரும், எங்களுடைய அன்பை வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறோம்; இதில் என்ன தவறு உள்ளது. தற்போதுள்ள அனைத்து, இளம் அமைச்சர்களும், இவ்வாறு தானே நடந்து கொள்கின்றனர்.இவ்வாறு சுனந்தா கூறினார்.

இதற்கிடையே, சில நாட்களுக்கு முன், திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு, சசி தரூரும், சுனந்தாவும் வந்தபோது, அங்கு கூடியிருந்த காங்கிரஸ் கட்சியினரிடையே இருந்த ஒரு இளைஞர், சுனந்தாவிடம் தவறாக நடந்து கொண்டார். இதனால், சுனந்தாவும், சசி தரூரும் ஆத்திரமடைந்தனர். ஆனாலும், இதுகுறித்து போலீசில் புகார் எதையும், அவர்கள் அளிக்கவில்லை.

குசும்பு குடுமியாண்டி : அது என்ன 50 கோடி கணக்கு? இன்னும் மேலேப்பா.

நீலம் எனும் அசுரன்நீலம் எனும் அசுரன் 

சென்னை, அக் 31, 2012


வங்க கடலில் உருவான நீலம் புயல் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. 

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், உள்பட 20 மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டியது. 

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மழை காரணமாக வேதாரண்யத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கிறார்கள். 

தஞ்சையில் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பஸ் நிலையம் - மார்க்கெட் பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

தஞ்சை மாவட்டத்தில் மழையால் 12 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் அழுகும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழை தண்ணீரை வடிய வைக்கும் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக ஏரி- குளம்- வாய்க்கால் உடைப்பை சீரமைக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் இன்று 4- வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. மணப்பாறை, துறையூர், முசிறி, தொட்டியம், தா.பேட்டை, ஜீயபுரம், லால்குடி பகுதிகளில் பெய்த இடைவிடாத மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பலத்த காற்று வீசியதால் வாழைகள் சாய்ந்தன. மேலும் சாலைகளில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். 

கடலோர மாவட்டமான புதுக்கோட்டையில் 5-வது நாளாக மழை நீடித்து வருகிறது. கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினம், முத்துக்குடா, புதுப்பட்டினம், மீமிசல் ஆகிய பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்பட்டது. நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடலில் ராட்சத அலைகள் உருவானது. நள்ளிரவு முதல் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. 6-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 

கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, தோகைமலை, குளித்தலை, லாலாப்பேட்டை உள்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை முதல் இடைவிடாது மழை கொட்டி வருகிறது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. 

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பா ளையம், திருமானூர், ஜெயங் கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய, விடிய கன மழை பெய்தது. இன்று காலையும் மழை தொடர்கிறது. 

பெரம்பலூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்து கொண்டே இருந்தது. தற்போதும் மழை தொடர்ந்து தூறிக் கொண்டே இருக்கிறது. மழை விடிய, விடிய பெய்தது. தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது. 

இந்த மழையின் காரணமாக ஏற்காடு நகரமே நேற்று மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது. மலைப்பாதையில் வாகனங்கள் முகப்பு விளக்கை போட்டுக் கொண்டு மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது. மலைப்பாதையில் ஏதாவது மண் சரிவு ஏற்படுகிறதா? என்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் மழை விடாமல் கொட்டி வருகிறது. கொல்லிமலை பகுதியிலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது. நிலச்சரிவு ஏற்படுகிறதா? என்று அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் விடிய, விடிய சாரல் மழை பெய்தது. மழை காரணமாக ஓசூர் பகுதியில் ரோஜா மலர்கள், மற்றும் கொய்மலர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று காலை மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசாக மழை தூறி வருகிறது. பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

வங்க கடலில் சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் நிலை கொண்ட 'நீலம்' புயல் தமிழக கடற்கரையை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்தது. இதனால் கடந்த 3 நாட்களாக மிரட்டிய இந்த புயல் இன்று மாலை கடலூருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே மகாபலிபுரத்தில் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

புயல் கரையை கடக்கும்போது சூறாவளி காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வந்தது. இதனால் காலையில் மணிக்கு 55 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று வீசியது. 

சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. புயல் தாக்கம் குறைந்ததும் மின்சாரம் வழங்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்தது.   

இதற்கிடையே, இன்று மாலையில் புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், முன்கூட்டியே கரையை கடந்தது. 4 மணியளவில் மகாபலிபுரத்தில் புயல் கரையை கடக்க ஆரம்பித்தது. அப்போது பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. 
இதையொட்டி கடற்கரை பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. மாமல்லபுரத்தில் கரையைக் கடந்த புயல் விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டம் வழியாக சென்று வலுவிழக்கும். இதனால் அப்பகுதியில் பலத்த காற்று வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மழை படிப்படியாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் ,தினத்தந்தி 

Tuesday, October 16, 2012

சப்தக்கன்னிகள் தொடர்ச்சி .....


3.கௌமாரி

கவுமாரி. கவுமாரன்என்றால்குமரன். குமரன்என்றால்முருகக்கடவுள். ஈசனும், உமையாலும்அழிக்கஇயலாதவர்களைஅழித்தவர்தான்குமரக்கடவுள்எனப்படும்முருகக்கடவுள். முருகனின்அம்சமேகவுமாரி.

இவளுக்குசஷ்டி, தேவசேனாஎன்றவேறுபெயர்களும்உண்டு. மயில்வாகனத்தில்வருபவள். அஷ்டதிக்கிற்கும்அதிபதிஇவளே. கடலின்வயிறுகிழியுமாறுவேற்படையைச்செலுத்தியசக்திஇவள். இவளைவழிபட்டால், குழந்தைச்செல்வம்உண்டாகும். இளமையைத்தருபவர்


தியானசுலோகம்

அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை
பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி
பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா
மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள
கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!

மந்திரம்

ஓம் கெளம் கெளமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:

காயத்ரிமந்திரம்

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.


4.வைஷ்ணவி

அம்பிகையின்கைகளில்இருந்துபிறந்தவள்வைஷ்ணவி. இவள்விஷ்ணுவின்அம்சம். கருடனைவாகனமாககொண்டவள். வளமானவாழ்வுதருபவர். சகலசவுபாக்கியங்கள்,செல்வவளம்அனைத்தையும்தருபவளேவைஷ்ணவி. குறிப்பாகதங்கம்அளவின்றிகிடைத்திடவைஷ்ணவிவழிபாடுமிகஅவசியமாகும்.


விஷ்ணுவின்சக்தியானஇவர்நீலநிறமானவர். ஆறுகரங்களைக்கொண்டிருப்பார். வலதுகரங்களில்ஒன்றுவரதமுத்திரையிலிருக்கும். மற்றையகரங்களில்கதா, தாமரைஎன்பனகாணப்படும். இடதுகரங்களில்ஒன்றுஅபயமுத்திரையினைக்காட்டுவதாகவும்மற்றையனசங்கு, சக்கரம்ஏந்தியவாறும்காணப்படும். வைஷ்ணவிஅழகியகண்களையும், முகத்தினையும், மார்பினையும்கொண்டிருப்பார். மஞ்சள்ஆடைஅணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரியஆபரணங்களைஅணிந்துகருடனைவாகனமாகவும்கொடியாகவும்கொண்டிருப்பார்.

தியானசுலோகம்

சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.

மந்திரம்

ஓம் வை வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

காயத்ரிமந்திரம்

ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

5.வாராஹி
பன்றி முகத்தோடுகாட்சியளிப்பவள். இவள்அம்பிகையின்முக்கியமந்திரியாகவிளங்குகிறாள். வராஹம்எனப்படும்பன்றியின்அம்சமானதுவிஷ்ணுவின்அவதாரங்களில்ஒன்றாகும். இவளுக்கும்மூன்றுகண்கள்உண்டு. இதுசிவனின்அம்சமாகும்.

அம்பிகையின்அம்சமாகபிறந்ததால், இவள்சிவன்,ஹரி,சக்திஎன்றமூன்றுஅம்சங்களைக்கொண்டவளாவாள். எதையும்அடக்கவல்லவள். சப்தகன்னிகைகளில்பெரிதும்வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும்கொண்டஇவள்பக்தர்களின்துன்பங்களைதாங்கிக்காப்பவள். பிரளயத்தில்இருந்துஉலகைமீட்டவளாகச்சொல்லப்படுகின்றாள். எருமையைவாகனமாகஉடையவள்.

கலப்பை, உலக்கைஆகியவற்றைப்பின்னிருகரங்களில்தாங்கிஅபயவரதம்காட்டுவாள். லலிதாம்பிகையின்படைத்தலைவிஇவளே. தண்டினிஎன்றபெயருடன்சிம்ஹவாஹினியாய்க்காட்சிகொடுப்பாள். இவளைவணங்குவோர்வாழ்வில்சிக்கல்கள், தடைகள், தீராதபகைகள்தீரும்.

வராகமூர்த்தியின்சக்தி. கறுப்புநிறமானவர். பன்றியின்பன்றியின்முகத்தினைஒத்தமுகத்தினையும்பெரியவயிற்றினையும்கொண்டிருப்பார். இவருக்குஆறுகரங்கள்காணப்படும். வலதுகரங்களில்ஒன்றுவரதமுத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில்தண்டம், வாள்என்பனஇடம்பெற்றிருக்கும். இடதுகரங்களில்ஒன்றுஅபயமுத்திரையினைக்காட்டமற்றையனகேடயம், பாத்திரம்என்பனவற்றினைஏந்தியவாறுகாணப்படும். இவர்எருமையைவாகனமாகக்கொண்டிருப்பார்.

தண்டநாதவராகிபொன்னிறமானவர். பன்றியின்முகத்தினைஒத்தமுகத்தைக்கொண்டிருப்பார். இவரதுகரங்களில்சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம்என்பனகாணப்படும். இருகரங்கள்அபய, வரதமுத்திரையிலிருக்கும்.

சுவப்ன வராகிமேகநிறமானவர். மூன்றுகண்களைக்கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச்சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள்என்பனகரங்களில்இடம்பெற்றிருக்கும். இருகரங்கள்அபய, வரதமுத்திரையிலிருக்கும்.

சுத்த வராகிநீலநிறமானவர். பன்றியின்முகத்தினைஒத்தமுகத்தினைக்கொண்டவர். வெண்மையானபற்கள்வெளியேநீட்டப்பட்டவாறிருக்கும். தலையில்பிறைச்சந்திரனைச்சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம்என்பனகரங்களிற்காணப்படும்.


தியானசுலோகம்

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

மந்திரம்
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

காயத்ரிமந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்


6.இந்திராணி

இந்திரனின்அம்சம். கற்பகமலர்களைகூந்தலில்சூடியவள். யானைஇவளதுவாகனம். சொத்துசுகம்தருபவர். தன்னைவழிபடுபவர்களின்உயிரைப்பேணுவதும், அவர்களுக்குநல்லவாழ்க்கைத்துணையைஅமைத்துத்தருவதிலும், மிகவும்தலைசிறந்தஅதேசமயம்முறையானகாமசுகத்தைத்தருவதும்இவளே!.

மணமாகாதஆண்கள்இவளைவழிபட்டால், அவர்கள்மிகச்சிறந்தமனைவியையும், கன்னிப்பெண்கள்இவளைவழிபட்டால், மிகப்பொருத்தமானகணவனையும்அடைவார்கள்.

இந்திரனின்சக்தியானஇவள்ரத்னமகுடம்தரித்தவள். பொன்னிறமேனிஉடையவள். நாற்கரத்தினள். சக்திஆயுதமும், வஜ்ராயுதமும்தாங்கிஅபயகரம்காட்டுவாள். சத்ருபயம்போக்குபவள். மாகேந்திரிஎன்றபெயரையும்கொண்டவள்.

இவரது வாகனமாகவும், கொடியாகவும்யானைஇடம்பெற்றிருக்கும்.

தியானசுலோகம்
அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை
இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:

மந்திரம்

ஓம் ஈம் இந்திராண்யை நம:
ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:

காயத்ரிமந்திரம்

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.

7.சாமுண்டி

ஈஸ்வரனின்நெற்றிக்கண்ணிலிருந்துதோன்றியபத்திரகாளியானவள், தனதுகோரமானமுகத்தைமாற்றிசாமுண்டியாகஆனவள். இவள்தனதுஆறுசகோதரிகளுடன்சேர்ந்துதாருகன்என்றஅரக்கனைஅழித்தாள்.

பதினாறுகைகள், பதினாறுவிதமானஆயுதங்கள், மூன்றுகண்கள், செந்நிறம், யானைத்தோலால்ஆனஆடையைஅணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில்முதலில்தோன்றியவள்இவளே! சப்தகன்னிகைகளில்சர்வசக்திகளையும்கொண்டிருப்பவள். மனிதர்களுக்குமட்டுமல்ல; தேவர்களுக்கேவரங்களைஅருளுபவள்இவளே!

இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்துநம்மைக்காப்பதோடு,நமக்குத்தேவையானசகலபலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத்தருவாள். இனிவேறுவழியில்லைஎன்றசூழ்நிலைஏற்படும்போது, இவளைஅழைத்தால், புதுப்புதுயுக்திகளைக்காட்டுவதோடு, முடியாததையும்முடித்துவைப்பாள்.

கறுப்புநிறமானவர். பயங்கரமானதோற்றம்கொண்டவர். இறந்தமனிதஉடலைஇருக்கையாகக்கொண்டவர். பாம்புகளைஉடலில்அணிந்திருப்பார், ஒட்டிப்போனமெலிந்தவயிறு, குழிவிழுந்தகண்களைக்கொண்டிருப்பார்.

தியானசுலோகம்

சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.
நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே
நிஷண்ணசுவா!
ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா
சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.

மந்திரம்

ஓம் சாம் சாமுண்டாயை நம:
ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

காயத்ரிமந்திரம்

ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்

கன்னித்தன்மையை தாய்மைக்கு இட்டுச்செல்லலாம். அதற்கு அனுமதி ஒவ்வொரு ஜீவனுக்கும் உண்டு. ஆனால்,கன்னித்தன்மையை களங்கப்படுத்தக் கூடாது. (அப்படி களங்கப்படுத்தினால் களங்கப்படுத்துபவனுக்கு மேற்கூறிய சப்தகன்னிகைகளின் வரங்களில் ஏதாவது ஒன்று மட்டுமாவதை இழந்தே ஆக வேண்டும் என்பது சாபம்) இவர்களின் அவதார நோக்கமும் தங்களுடைய முழுமையான சக்தியோடு விளங்கிடுதல் மற்றும் ஆண்மைசக்தி எனப்படும் சிவமூலத்தை துணையாகக் கொள்ளாததும் இவர்களின் சிறப்பாகும்.

சப்தகன்னியர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல;ஆண்களுக்கும் ஒரு பலமே!

சப்த கன்னியரை, அன்புடன் மனதால் நினைத்தாலே போதும். நம் அன்னையாக, உயிர் தரும் தோழியராக, அன்பும், அபயமும், அருளும் அற்புத தேவியர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms