வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, July 31, 2013

மிராசுதாரை மிரள வைத்த மகா பெரியவர்

ஒரு சித்ரா பௌர்ணமி அன்று திருவிடைமருதூர்  மகாலிங்க ஸ்வாமிக்கு  அவ்வூர் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் ருத்ர ஜபத்துடன் அபிஷேகம் நடத்தினார். மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் காஞ்சி பெரியவரிடம் அபரிதமான பக்தி உடையவர். அதனால் தான் நடத்திய ருத்ர ஜப பிரசாதத்தினை காஞ்சி பெரியவரிடம் ஒப்படைக்க எண்ணி உடனே காஞ்சி சென்றார். அவர்  காஞ்சி மடம் வந்தடைந்த போது  பெரியவர் தியானத்தில் இருந்தப்படியால் அவரிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தவர்களின் கூட்டம் நின்றிருந்தது. மிராசுதார்  நாராயணஸ்வாமிஐயர் கூட்டத்தை  முந்தி  காஞ்சி பெரியவர்  அருகில் நிற்க பெரியவர் அவரை பார்க்க பெரியவருக்கு வணக்கத்தினை தெரியப்படுத்தி தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு  மிராசுதார்  நேற்று திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமிக்கு நடந்த...

Monday, July 22, 2013

குரு பூர்ணிமா

குரு பூர்ணிமா 22.07.2013 பரதகண்டம் என பெயர்பெற்ற இந்த புண்ணிய பூமியில் பல சான்றோர்கள் இருந்திருக்கின்றனர். அவர்களின் தலை சிறந்தவராக வியாசர் கருதப்படுகிறார். வியாசர் துவாபராயுகம் முடியும் சமயத்திலும், கலியுகம் ஆரம்பமாவதற்கு முன்பும் அவதாரம் செய்தவர் என்று புராணங்கள் வழியாக அறியமுடிகிறது. அவர் இந்த மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் அறநெறியையும், ஆன்மிக தத்துவத்தையும் உலகிற்கு வழங்கிய வண்ணம் இருந்தார். எல்லாவற்றிற்கும் ஆதாரமான வேதத்தில் சொல்லியுள்ளபடி கலியுகத்தில் பக்திமார்க்கம் குறைந்து நசித்து போகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரே வடிவாக இருந்த வேதத்தையும், அதன் சிதறிக்கிடந்த பாகங்களையும் தொகுத்து ரிக் வேதம், யஜுர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் என நான்காக பிரித்தார். பரமாத்மாவான இறைவனை ஜீவாத்மாவான மனிதன் எப்படி கண்டறியவேண்டும் என்பதை...

Sunday, July 21, 2013

விதையும்,கனியும்

ஏப்ரல் 8, 1928ல் அப்போதைய தஞ்சை மாவட்டம், இப்போதைய நாகை மாவட்டம் விளநகர் கிராமத்தில் பிறந்த எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் பிற்காலத்தில் பேனா முனையால் இலட்சக்கணக் கான உள்ளங்களை உலுக்கியெடுத்து, எழுச்சி யடையச் செய்யப்போகிறார் என்று யாரும் கனவு கூட கண்டிருக்க முடியாது. கடந்த ஜனவரி 21 அன்று இவ்வுலகிலிருந்து பிரிந்த அவரின் உன்னத வாழக்கையிலிருந்து இன்றைய இளைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன. மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வி. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப்பட்டம். பிறகு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் வேதியியல் மற்றுமொரு முதுநிலைப் பட்டம். அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் மருத்துவ ரசாயணத்தில் டாக்டர் பட்டம். எனத் தொடர்ந்த படிப்பு 85 வயதில் அவரின் இறுதி நாட்கள் வரை தொடர்ந்தது. வாழ்க்கையில் சாதிக்க விரும்புவோர்...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms