
உலகின் பெரிய ஜனநாயக நாடு
இந்தியா. இதற்கு முதுகெலும்பாக விளங்கும் இந்திய தேர்தல் ஆணையம், ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. இது 1950 ஜன., 25ல் உருவாக்கப்பட்டு, 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை
சிறப்பிக்கும் வகையில் 2011 முதல், ஜன., 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம்
கொண்டாடப்படுகிறது. தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகப்படுத்தி, ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை
உணர்த்துவது இதன் நோக்கம். தேர்தல் ஆணையம் நவீன வளர்ச்சிக்குப் ஏற்ப, ஓட்டளிக்க மின்னணு எந்திரம், அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை, விரைவாக தேர்தல் முடிவுகள், ஆண்டுதோறும் வாக்காளர் பெயர் சேர்ப்பு
என புதுமைகளை புகுத்தி வருகிறது.
ஓட்டளிப்பது அவசியமா ?
இந்தியாவில் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் முதல் பிரதமர் வரை, ஓட்டளிப்பதன் மூலமே
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஓட்டளிப்பது, 18 வயது நிரம்பிய ஒவ்வொரு
இந்தியரின்...