
நம்பிக்கை நாயகன்
முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல்
ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை
அறியாதவளா பார்வதிதேவி?! ஆனாலும்
அவளுக்கு, ‘இந்தத் தொழிலை ஈசன் சரிவர கவனிக்கிறாரா?’ என்றொரு சந்தேகம். அதற்குத் தீர்வு காண
முனைந்தாள். சிறு பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து அதற்குள் கறுப்பு எறும்புகள்
சிலவற்றைப் பிடித்துப் போட்டு மூடி விட்டாள். ‘இந்த எறும்புகளுக்கு ஈசன் எப்படி உணவு அளிக்கிறார், பார்க்கலாம்!’ என்பது அவளது எண்ணம்.
டி - சர்டில் விநாயகர்
மறு நாள், ”ஸ்வாமி, நேற்று
எல்லா ஜீவராசிகளுக்கும் படியளந்தீர்களா?” என்று ஈசனிடம் கேட்டாள்.
‘உலகநாயகி தன்னோடு விளையாடுகிறாள்!’ என்பது ஈசனுக்குப் புரிந்தது. ஆனாலும்
அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ”இதிலென்ன
சந்தேகம்… பாத்திரத்தில் நீ சிறை வைத்த
எறும்புகளைப் பார்த்திருந்தால்,...