
தீபாவளி பற்றி எழுத நினைத்த போது தினமணியில் 2012 தீபாவளி தீபாவளி மலரில் வந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது.அதில் தீப வழிப்பாட்டை
பற்றி இலக்கியங்களில் உள்ள பாடல்கள் மூலம் மேற்கோள் காட்டியிருந்தது அதனை இங்கே
பதிவிட்டுள்ளேன். அனைவருக்கும் பயனாக இருக்கும். மற்றும் மக்களின் அனைத்து
பண்டிகைகளுக்கும் தனித்துவமும் அதன் மூலம் மனித இனம் ஒற்றுமையாக செயல்ப்படவும்
நன்றாக இருக்கும்.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி தேசிய
ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்கி வருகிறது. எனினும், தமிழகத்தில்
தீபாவளிக்கு எதிரான பிரசாரம் அவ்வப்போது தலை தூக்குவதுண்டு; வடவர்
பண்டிகையான தீபாவளிக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற குரல்கள் அபசுரமாக எழுவதுண்டு.
அவ்வாறு கூறுவோர், தமிழ் இலக்கியத்தில்
தீபாவளி குறித்த பதிவுகள் இல்லை என்று கூறுகின்றனர். அவர்கள் வசதியாக ஒன்றை மறந்து
விடுகின்றனர்....