
சர்வதேச யோகா தினம் 21.06.2015 அன்று உலகம் முழுவதும் சிறப்பாக
கொண்டாடப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பிரமாண்டமான யோகா
நிகழ்ச்சியில் 36 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் யோகா என்னும் அரிய கலையை உலகுக்கு
தந்த நாடு இந்தியா.
அந்த கலையை கவுரவிக்கும் வகையிலும், அது
குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தும் விதத்திலும் பிரதமர் நரேந்திர
மோடியின் வேண்டுகோளை ஏற்று, 177 நாடுகளின்
ஆதரவுடன், ஜூன் 21–ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை
கடந்த ஆண்டு டிசம்பர் 11–ந் தேதி அறிவித்தது.
அந்த வகையில் முதலாவது சர்வதேச யோகா தினம், நேற்று உலகமெங்கும் வெகு விமரிசையாக
கொண்டாடப்பட்டது.
பிரதமர் மோடி வாழ்த்து
முதலாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உலக
மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ‘டுவிட்டர்’...