
திருக்கழுக்குன்றம்
வேதகிரீஸ்வரர் திருக்கோவில் புராண வரலாற்று சிறப்பு மிக்கத் திருத்தலமாகும்.
வேதங்கள் மலை வடிவில் வந்து தவம் செய்த தலம் இதுவாகும். அந்த மலையின் மீதே
வேதகிரீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
முனிவர்கள்
8 பேர் கழுகு உருவில், இத்தலத்து இறைவனை
வழிபட்டதால் ‘திருக்கழுக்குன்றம்’ என்று பெயர் பெற்றது.
இங்கு
தஞ்சாவூரில் நடைபெறும் மகாமகம் போல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்னும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. பொதுவாக உவர்நீரில்தான்
சங்கு தோன்றும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு
ஒரு முறை இந்த ஆலயத்தில் உள்ள நன்நீர் நிறைந்த குளத்தில், ஒரே ஒரு சங்கு பிறந்து
வெளி வருவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். அவ்வாறு தோன்றும் சங்கைதான், சங்குதீர்த்த புஷ்கர
மேளாவின் போது, இறைவனை
அபிஷேகம் செய்ய பயன்படுத்துவார்கள்.
ஒரு
சமயம்...