
'தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்' என்று தலைக்கனம் பிடித்த பண்டிதர்
ஒருவர் இருந்தார்.
அடர்த்தியான புருவம், பெரிய மீசை, அடிக்கடி மொட்டை போட்டுக்
கொள்ளுவதால் ஈர்குச்சி போல் காணப்படும் முடிகளுடன்
கூடிய தலை. இதுவே அவரது அடையாளம்.
வீதியில் அவரைக்
கண்டு விட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால் மட்டந்தட்டிவிடுவார்.இதில் சிலர் அழுது விடுவது கூட உண்டு...
ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை.
ஊர் எல்லை வரை வந்து விட்டார்...
அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு
நாவிதரைப் பார்த்தார்.
நாவிதரின் உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும்,
அதை அவர் சுத்தமாய்த்
துவைத்து, நேர்த்தியாய்
உடுத்தியிருந்த...