
மகாசிவராத்திரியை
முன்னிட்டு இன்று மாலை கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் தொடங்குகிறது. பக்தர்கள்
ஓடி ஓடி வழிபடும் 12 சிவ ஆலயங்கள்
பற்றி அறிந்து கொள்வோம்.
திருமலை
சிவாலய
ஓட்டத்தினர், திருமலை எனும்
திருத்தலத்தில் உள்ள ஈசனை முதலில் வழிபடுகிறார்கள். மூலவர், சூலபாணி என்று போற்றப்படுகிறார். இங்குள்ள
கல்வெட்டு இவரை 'முஞ்சிறை
திருமலைத்தேவர்' என்று
அழைக்கிறது.
திக்குறிச்சி
தாமிரபரணி
ஆற்றங்கரையில் உள்ள இத்தலம், இரண்டாவது
வழிபாட்டுத் தலம். சிவாலயங்களில் முக்கியத்துவம் பெறும் நந்தி, இந்தக் கோயிலில் இல்லை. மூலவர், திக்குறிச்சி மகாதேவர். நாற்சதுரமண்டபக்
கருவறையில் அருள்கிறார், இந்த ஈசன்.
திற்பரப்பு
முக்கண்ணனை
தரிசிக்க ஓடும் ஓட்டத்தில் மூன்றாவது கோயில், திற்பரப்பு. மூலவர் உக்கிரமான தோற்றத்தோடு விளங்குவதால் ஜடாதரர்
என்றும் வீர பத்திரர் என்றும்...