
நடுக்கடலில்
சென்று கொண்டிருந்த ஒரு பெரிய கப்பலின் என்ஜின் செயலிழந்ததால் அந்த கப்பல்
அங்கிருந்து நகர முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கும் தகவலை அறிந்த கப்பலின்
உரிமையாளர்கள் ஒரு சிறு படகில் ஏறி, பழுதாகி நிற்கும்
கப்பலை வந்தடைந்தனர்.
கப்பல்
இயந்திரங்களை பழுதுப் பார்ப்பதில் பிரசித்தி பெற்ற பல பிரபல பொறியாளர்களும்,
மெக்கானிக்குகளும்
அங்கு வந்து சேர்ந்தனர். ஒருவர் மாற்றி, இருவர் அந்த என்ஜினை
சீரமைக்க பல்வேறு கட்ட முயற்சிகளை செய்துப் பார்த்தனர். ‘ஊஹூம்’
அந்த
என்ஜின் மூச்சு விடுவதாக இல்லை.
அவர்களின்
முயற்சிகள் அத்தனையும் விழலுக்கு இறைத்த கானல் நீராகிப் போனது. இறுதியாக இதுபோல் ‘முரண்டுப்
பிடிக்கும்’ என்ஜின்களை வழிக்கு
கொண்டு வருவதில் வல்லவரான ஒரு வயதான அனுபவசாலி மெக்கானிக்கை தேடி கண்டுபிடித்து
நடுக்கடலுக்கு...