
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பதினாறு என்றாலே பதினாறு சம்பத்துக்களை கூறும்
வழி.இந்த சம்பதுக்களை அடைய அருளும்
ஷோடஸ(பதினாறு) மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரம்.
மஹாலக்ஷ்மி என்றாலேயே சுத்தம்,
செல்வம், சந்தோஷம், நிம்மதி என்று மனதை மகிழ்விக்கும் அனைத்து அம்சங்களுக்கும் உரியவள் என்றுதான் பொருள். இந்த மஹாலக்ஷ்மி பல ரூபங்களில் வழிபடப்படுகிறாள். மஹாலக்ஷ்மியாகவும்,
அஷ்ட லக்ஷ்மியாகவும்,
ஷோடஸ லக்ஷ்மியாகவும் பலவாறு போற்றி வணங்கப்படுகிறாள். வாழ்வில் சந்தோஷத்துக்குத் தேவையான பதினாறு குணநலன்களை நமக்கு அளிப்பவர்கள் இந்த ஷோடஸ மஹாலக்ஷ்மிகள் என்று பெரியவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இங்கே அந்த ஷோடஸ மஹாலக்ஷ்மிகளின் 16 துதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் இரண்டே வரிகள் கொண்ட சமஸ்கிருத ஸ்லோகங்கள். ஒவ்வொரு ஸ்லோகத்துக்கு...