
தமிழும்
கடவுள்களும்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவையே ஐந்திணைகள். திணைக்கடவுள்கள் பற்றி தொல்காப்பியம்,
'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே' என்கிறது.
இதில் பாலைத் திணை தவிர்த்து நான்கு திணைக் கடவுள்கள் பற்றி தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ஏனெனில்,
`பாலை’ என்பது தனி நிலம் அல்ல. குறிஞ்சியும் முல்லையும் மழை இல்லாமல் காய்ந்து போன நிலமே பாலை எனப்படும். எனினும், பாலைக்கும் தெய்வம் உண்டு. ஒவ்வொரு திணை மக்களும் ஒவ்வொரு கடவுளை வழிபட்டனர். அவை மாயோன், சேயோன், வேந்தன் ,
வருணன், கொற்றவை ஆகியன. ஐந்திணை மக்களின் வழிபாட்டு முறையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
முருகன்
ஐந்து...