
`திருமகள் இருக்குமிடத்தில் கலைமகள் இருக்க மாட்டாள்'
என்று பொதுவாகச் சொல்வது உண்டு. அதாவது,
`செல்வம் இருக்கும் இடத்தில் கல்வி இருக்காது’
என்று பொருள். ஆனால்,
வித்தை, தனம் ஆகிய இரண்டுக்குமே அதிதேவதையாக ராஜமாதங்கி இருந்து வருகிறாள். ஒப்பற்ற அழகும், எவரையும் வணங்கச் செய்யும் கம்பீரமும்கொண்ட அன்னை ராஜமாதங்கியின் அவதாரப் பெருமையையும்,
வணங்கும் முறைகளையும் காண்போம். ராஜ ஸ்யாமளா,
மாதங்கி, காதம்பரி, வாக்விலாஸினி என்று பலவாறு துதிக்கப்படுபவள் இந்த அன்னை. ஆதிசங்கரர் தொடங்கி சங்கீத மும்மூர்த்திகள் வரை இவளைப் பாடிப் பணிந்து பல சிறப்புகளைப் பெற்று இருக்கின்றனர். கவிகாளிதாஸர் ஷ்யாமளா தண்டகத்தில் பாடிப் பாடி பரவசப்பட்ட அன்னை. ஆதிபராசக்தியின் மந்திரிணியாக இருந்து அற்புதமான ஆலோசனைகள் சொல்பவர். `ராஜ ஷ்யாமளா’
என்று ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் இவளைக்...