
மகாத்மா என்ற காந்தி
மகாத்மா காந்தியின் பிறந்தநாளைப் போற்றும் நேரத்தில், அவரைப் பற்றிய சுவாரஸியமான தகவல்கள்
1937 முதல் 1948ம் ஆண்டு வரை ஐந்து முறை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் நோபல் பரிசு அளிக்கவிடாமல் பலர் முட்டுக்கட்டை போட்டதால் அவருக்குக் கிடைக்கவில்லை.
மகாத்மா என்ற பட்டத்தை முதன்முதலில் காந்திக்கு வழங்கியவர், ரவீந்திரநாத் தாகூர். 1915ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி இந்தப் பட்டத்தை அவர் வழங்கினார். ஆனால் இதை காந்தியடிகள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.
காந்தியடிகள் தனது வாழ்நாளில் 17
முறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டுள்ளார். அவற்றுள் 1924
மற்றும் 1943ம் ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டங்கள் தலா மூன்று வாரங்கள் நீடித்தன. போராட்டத்தில் அமர்ந்து விட்டால், முடிவு கிடைக்காதவரை யார் சொன்னாலும்...