Saturday, September 29, 2012

மகாத்மா என்ற காந்தி


மகாத்மா என்ற காந்தி

மகாத்மா காந்தியின் பிறந்தநாளைப் போற்றும் நேரத்தில், அவரைப் பற்றிய சுவாரஸியமான தகவல்கள் 

1937 முதல் 1948ம் ஆண்டு வரை ஐந்து முறை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் நோபல் பரிசு அளிக்கவிடாமல் பலர் முட்டுக்கட்டை போட்டதால் அவருக்குக் கிடைக்கவில்லை.

மகாத்மா என்ற பட்டத்தை முதன்முதலில் காந்திக்கு வழங்கியவர்ரவீந்திரநாத் தாகூர். 1915ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி இந்தப் பட்டத்தை அவர் வழங்கினார். ஆனால் இதை காந்தியடிகள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.

காந்தியடிகள் தனது வாழ்நாளில் 17 முறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டுள்ளார். அவற்றுள் 1924 மற்றும் 1943ம் ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டங்கள் தலா மூன்று வாரங்கள் நீடித்தன. போராட்டத்தில் அமர்ந்து விட்டால், முடிவு கிடைக்காதவரை யார் சொன்னாலும் போராட்டத்தைக் கைவிடாமல் உறுதி காப்பார்.

காந்தியடிகள் இறந்ததும், நாடு முழுவதும் 13 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

சுதந்திர போராட்டங்களுக்காக தனது வாழ்நாளில் மொத்தம் 2, 338 நாட்கள் (ஆறு ஆண்டுகள்) சிறை வாசத்தை அனுபவித்துள்ளார்.

காந்தியடிகளுக்கு நான்கு மகன்கள். ஹரிலால் (1888ம் ஆண்டு பிறந்தார்), மணிலால் (1892ம் ஆண்டு பிறந்தார்), ராம்தாஸ் (1897ம் ஆண்டு பிறந்தார்) மற்றும் தேவதாஸ் (1900ம் ஆண்டு பிறந்தார்).

தனது நெருங்கிய நண்பரான லியோ டால்ஸ்டாய்க்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். நட்பின் அடையாளமாக, தனது ஆசிரம தோட்டத்துக்கு டால்ஸ்டாய் பண்ணை என்று பெயரிட்டார்.

இந்தியாவின் மிகப் பெரிய மாநகரங்களின் பிரதான சாலைகளின் பெயர் எம்ஜி சாலை (மகாத்மா காந்தி சாலை) என்பதாகத்தான் இருக்கும்.

குழந்தையாக மோகன்தாஸ்
படிமம்:Young Gandhi.jpg
வக்கீலாக
படிமம்:Gandhi costume.jpg

கஸ்தூரிபாய் அவர்களுடன்
7 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
பொதுமக்களுடன்
11 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)

உப்பு சத்யாகிரகத்தில்,தண்டி யாத்திரையில்
16 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)

உப்பு எடுக்கும் மஹாத்மா
18 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)

மஹாத்மா நேருவுடன்
24 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
ஜின்னாவுடன்
படிமம்:Jinnah Gandhi.jpg
மஹாத்மாவின் பிரபலமான புன்சிரிப்பு
28 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms