Friday, February 1, 2013

கமல்ஹாசனின் “விஸ்வரூபம்"

தமிழகத்தில் தொடர்ந்து சிக்கலை சந்தித்து வரும் கமல்ஹாசனின் விஸ்வரூபம்திரைப்படம் மும்பையில் நாளை திரையிடப்படுகிறது. இதற்காக மும்பை (மும்பை, 31-01-2013) சென்றுள்ள கமல் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


எனக்கு வந்ததைப் போன்று யாருக்கும் பிரச்சினை வரக்கூடாது. கலைஞர்களை அவமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களை ஹாலிவுட், பாலிவுட் என வேறுபடுத்தி பார்க்கவேண்டாம். பிரச்சினையை சந்தித்து வரும் நேரத்தில், ஊடகங்கள் எனக்கு ஆதரவாக நின்றது நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. மதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

விஸ்வரூபம் பிரச்சினையில் முன்வந்து விளக்கம் அளித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. சினிமா உலகமும் ரசகிர்கள் கொடுத்த ஆதரவும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. போராட்டத்தில் நான் தனி ஆள் இல்லை. ஆதரவு அளித்த ஊடகங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

மிரட்டல் தொடர்ந்தால் நாட்டைவிட்டு வெளியேறுவது பற்றி பரிசீலனை செய்வேன். எனக்கு ஆஸ்கர் விருது தேவையில்லை, தேசிய விருதையே விரும்புகிறேன்.

நான் எதிர்கொள்ளும் எதிர்ப்பு மத ரீதியானது அல்ல; அரசியல் ரீதியானது. மற்ற இடங்களில் படத்தைப் பார்த்தவர்கள் சிறப்பாக உள்ளதாக கூறுகின்றனர். விஸ்வரூபம் மூலம் விளம்பரம் தேட நான் முயற்சிப்பதாக கூறுவது மோசமானது. நான் கோபத்தில் பேசவில்லை, காயப்பட்டதால் பேசுகிறேன். நம்ப முடியாத அளவுக்கு எனக்கு இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது. எனது படத்திற்கு விதிக்கப்பட்ட தடையால் ரூ.30 கோடி முதல் ரூ.60 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
  
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

குசும்பு குடுமியாண்டி : நீங்கள் மதத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் கமல் , ஆனால் எந்த மதத்தையும், அரசியல், கலை, சினிமா, கதை, பத்திரிக்கை , அரசியல்  கட்சி  என்கிற எந்த ரூபத்திலும் காயப்படுத்தக்கூடாது. அது யாராக இருந்தாலும் சரி.

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms