
பங்குனி மாதம் புனர் பூச நட்சத்திரத்தில்,
கிருஷ்ண பட்ச நவமி திதியில்தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக
புராணங்கள் கூறுகின்றன.
ராமர் அவதாரம் எடுத்தநாளையே
ராமநவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். ராம நவமி இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்
படுகிறது.
மனிதன்
உலகில் எப்படி வாழவேண்டும் என்பதை மக்களுடன் மக்களாக வாழ்ந்து வாழ்ந்து
உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம்.
இந்த
நன்னாளில் ராமனின் பெருமைகளை அறிந்துகொள்வோம்.
தர்மம்காக்க
அவதரித்த ராமன்
தர்மம் அழிந்து, அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் மண்ணுலகையும், மக்களையும் காக்க மகா விஷ்ணு அவதாம் எடுத்தார்
என்கின்றன புராணங்கள். இவற்றில் ஏழாவதாக எடுத்த ராமஅவதாரம் மனித அவதாரமாக
இருந்ததால் சிறப் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முந்தைய அவதாரங்களான மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம...