Thursday, April 11, 2013

மனித பிரம்மா

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.


மனதை வருடும் புல்லாங் குழல் இசையும் யாழின் மெல்லிய இசையும் கூட தராத இன்பத்தை மழலையின் சொல் தரும் என்பதை எல்லோரும் அறியவே இந்த மேற்காணும் குறள்.

இது சிலரது வீட்டில் இல்லாத போது அவர்களின் மனம் படும்பாட்டை தவிர்க்க வந்த பிரம்மத்தேவன் தான் ராபர்ட் ஜெப்ரி எட்வர்ட்ஸ் (Robert.G. Edwards)


1925-ம் வருடம் செப்டம்பர் மாதம், 27ந் தேதி இங்கிலாந்தில் உள்ள யார்க்சயரில், நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். இரண்டாம் உலகப்போரின்போது, பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்தார். அதன்பின்னர், விவசாயம் குறித்தும், விலங்குகளின் மரபணு குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். முயல்களின் கருமுட்டையோடு, விந்தணுவை சோதனைக் குழாயில் இணைத்து, கரு உருவானபோது, இதனை மனித ஆராய்ச்சியில் செயல்படுத்தலாம் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.

அதன் விளைவாக 1968ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியின் தொடர் முயற்சிகளுக்குப்பின், பத்து வருடங்கள் கழித்து, 1978ஆம் முதல் சோதனைக்குழாய் குழந்தை உருவாக்கப்பட்டது. 

தற்போது, ஐந்து கோடிக்கும் மேற்பட்ட சோதனைக்குழாய் குழந்தைகள் பிறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த முயற்சிக்காக, அவர் இங்கிலாந்து அரசால் சர் பட்டம் அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். உலகின் தலை சிறந்த விஞ்ஞானி என்ற பெயருடன் நோபல் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது.

பேராசிரியர் சர் ராபர்ட் எட்வர்ட் தனது 87வது வயதில் காலமானார்.நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்து 2013 ஏப்ரல் 10ந் தேதி தூக்கத்திலேயே உயிர் பிரிந்ததாக, அவர் உறுப்பினராக இருந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


இவரின் மரணம் மட்டுமே நமக்கு மனிதனாக சொன்னாலும் இவரின் ஆராய்ச்சியும் கண்டுபிடிப்பும் மனித பிரம்மா என்பதை இவ்வுலகம் மறவாது.


இவரின் ஆத்மா சாந்தியடைய எல்லா வல்ல இறைவனை ப்ரார்த்திப்போம்.

6 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

Arrow Sankar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இணைப்புக்கும் பின்னோட்டத்திற்கும் நன்றி

அன்பு ராஜன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மனித பிரம்மாக்கள் இன்னும் வருவார்கள்.திரு .ராபர்ட் எட்வர்ட் அவர்கள் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனை உரித்தாகட்டும்

BHARKAVI PAKKAM said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மனித நேய மிக்க கண்டுபிடிப்பும், சமுதாய ஆராய்ச்சியும்,மனித வள மேம்பாடும் ஒரு மனிதனை பிரம்மா ஆக்கும்.

அன்பு ராஜ்ன் அவர்களின் www.coffeemasala.blogspot.in ல் என்னை கவர்ந்த பாடல் வரிகள் இருக்கிறது. பாராட்டுக்கள்

Rasikka Padikka said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எரொ சங்கர் அவர்களுக்கு ஜமீலா எழுதியது.படித்தேன்.நெகிழ்ந்தேன்.இந்த புனித ஆத்மா சாந்தியடையட்டும்

LAKSUNS said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
This comment has been removed by the author.
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms