Saturday, March 15, 2014

மனிதனும் நேர்த்திக்கடனும்


மனிதனும் நேர்த்திக்கடனும்

மனிதனின் வளர்ச்சி,நாகரீக பாதையில் மதம் ஒரு முக்கிய பாதையினை வளர்க்கிறது. அந்த பாதை ஆன்மீகம் எனும் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையினை தந்து மனிதனை வழி நடத்துகிறது. இந்த நம்பிக்கை வெறும் மூடநம்பிக்கை எனும் ஒரு வழி பாதையில் பயணிக்க விடாமல் நமது பெரியோர்கள் சில வழி முறைகளை பகுத்தறிவுக்கு சார்ந்து அறிவியல் உண்மையினை பரிகாரம்,நேர்த்திக்கடன் என வைத்து மதத்தினையும்,மனிதனின் மனிதநேயத்தினையும் வளர்த்து உள்ளனர்.

இதனால் மனிதனின் உடல் ஆரோக்கியம், மனத்தெளிவு, அறிவு வளர்ச்சி பெருகுகிறது.இதற்க்கு பல மதங்கள் பல விதமாக முன்வைத்தாலும் தமிழர்கள் முன்னுதாரணமாக இந்து மதத்தில் பல நேர்த்திக்கடன்களை பரிகாரம் என்று செய்து வந்து உள்ளனர். இவை எவ்வாறு செயல் படுகின்றன என்பதையும்  அவை எனென்ன என்பதையும் நாம் தற்போது காணாலாம்.


 பொங்கல் வைப்பது
பொங்கல் வைப்பதின் நோக்கம், ஒரு விருப்பம் நிறைவேறியதன் வெளிப்பாடேயாகும். மேலும், தெய்வ காரியத்தை மையமாக வைத்து, யாவரும் தெய்வத்தின் குழந்தைகளே என்று உணர்வுப்பூர்வமாகப் பங்கு கொள்வதால், சமூக ஒற்றுமை வளர அது ஒரு காரணமாகிறது. பொங்கல் பொங்கி வழிவது போன்று, வாழ்வில் இனிமை நிறையட்டும் என்ற ஆன்மிக மனோதத்துவத்தின் வெளிப்பாடே இந்நிகழ்வு.

 அலகு குத்துவது
அலகு குத்துவது நமது பார்வைக்கு வேண்டுமானால் மிகவும் அதிர்ச்சியைத் தரலாம். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அதை வலியுடன் தாங்கக் கூடிய அவசியத்தின் பின்னால் என்ன காரணம் இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். வாழ்வில் நிற்கதியாக நிற்கும் ஒரு குடும்பத்தலைவனின் அல்லது ஒரு தனிமனிதனின் துயரமான காலங்களில், சக மனிதர்களின் அன்பும் ஆதரவும் அற்ற நிலையில், வாழ்வை முடித்துக்கொள்ள நினைக்காமல், ஏதாவதொரு சக்தி நம்மை மீட்காதா? என்ற ஆழ்ந்த மன ஏக்கத்தின் வெளிப்பாடான தமது பிரார்த்தனை நிறைவேறியதன் காரணமே இருக்க முடியும். தொழில் நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் தைப்பூசத் திருவிழாவன்று காவடி, பால்குடம், அலகு குத்துதல் போன்ற சடங்குகள் உண்டு. மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் தைப்பூசம் அன்று பொது விடுமுறையாகும்.  
  

தீ மிதித்தல்
 தீ மிதித்தல் என்ற சடங்கு அம்மனின் திருவிழாவில் பல இடங்களில் பிரசித்தம். தீ மிதித்தலுக்கு முன்பு 21 நாட்களோ, 12 நாட்களோ, அல்லது ஒரு வாரமோ தீ மிதிப்பவர்கள் காலில் செருப்பு அணியக்கூடாது. உணவு, உடை, உறக்கம் ஆகிய அன்றாட வாழ்வுமுறைகளிலும் மனதிற்குக் கட்டுப்படான நெறிமுறைகளைப் பழக்கப் படுத்துகின்றனர். அதன் வழியாக உடலும் மனமும் சமச் சீர்மையைப் பெறுகின்றன. குளிப்பது, பேசுவது ஆகிய யாவிலும் பலவிதமான வரைமுறைகள் நடைமுறையிலுள்ளன. தீ மிதித்தலின்போது நமது காலின் கீழ் பகுதிகளில் உள்ள நரம்பு முனைகள் மின்தூண்டுதல்களைப் பெறுகின்றன.
 பஞ்சபூத மயமான நமது உடல் பஞ்சபூத சக்திகளின் நேரடித் தொடர்பில் இருப்பது அந்த விரத காலத்தில் மட்டுமே. அதாவது, செருப்பணியாமலிருப்பது நிலத்தின் தொடர்பாகும். தினமும் இருமுறை குளிப்பதும், திரவ ஆகாரங்களே அதிகம் எடுத்துக் கொள்வது நீரின் தொடர்பாகும். காற்று, ஆகாயம் இவையிரண்டும், உண்ணா நோன்பிலும், மவுன விரதத்திலும் அடங்குகிறது.


முடியிறக்குதல் (மொட்டை போடுதல்)
முடியிறக்குதல் (மொட்டை போடுதல்) என்ற விஷயத்தில் பலவிதமான காரணகாரிய நுட்பங்கள் அடங்கியுள்ளன. அதை ஒரு புதிய ஆரம்பத்தின், தொடக்கமாகக் கொள்ளலாம். ஒரு குழந்தையின் ஒற்றைப்படை வயதுகளில் முடியிறக்குவது மரபாகும். மயிர்க்கால்களின் உறுதி பலப்படுவது ஒரு காரணமாக இருந்தாலும், சூழ்நிலையில் இருக்கும் தெய்வீகத்தன்மையை மூளையின் நரம்பு இயக்கங்களின் வாயிலாக உடல் முழுவதும் பரவ வழிவகை உண்டாவதே முக்கியக் காரணமாகும். முதலில், முதல் முடி அவரவரது குலதெய்வத்தின் சன்னிதியில் எடுப்பது வழக்கமாகும். ஒருவரது குலதெய்வமாகத் திகழும் தெய்வமூர்த்தமே அவர்களது பூர்வபுண்ணிய பலன்களை, குறைவின்றித் தரும் சக்தி படைத்ததாகும். பிறகுதான் அவரவரது இஷ்டதெய்வமோ, வழிபடு தெய்வமோ வழிபாட்டில் பங்குபெறுகின்றன. ஒருவரது பிறந்த நேரத்திற்கு உகந்த ஒரு நல்ல நாளில்தான் முடியிறக்கம் செய்ய வேண்டும்.


அங்கப்பிரதட்சணம் செய்வது
அங்கப்பிரதட்சணம் செய்வது என்பது ஒருவருடைய உடலின் ஆறு ஆதார சக்கரங்களும் ஒரே நேரத்தில் கருவறைக்கருகில் உள்ள சக்தி மண்டலத்துக்குள் பூமி மூலமாகத் தொடர்பு கொள்ளும் நிலையாகும். ஏழாவது சக்கரமான சஹஸ்ராரமோ, கருவறையில் வீற்றிருக்கும் தெய்வ திருஷ்டியில் நேரடியாகப் படக்கூடிய வாய்ப்பைப் பெறுகிறது. ஒரு பொருளின் ஈரத்தன்மையானது அதன் மின் ஈர்ப்புத் திறனை அதிகப்படுத்தக்கூடியதாகும். ஈர உடையிலோ அல்லது ஈர நிலத்திலோ ஒருவர் அங்கப் பிரதட்சணம் வருவற்கான முக்கியக் காரணம் அதுவேயாகும்.

8 கருத்துரைகள்:

Rathnavel Natarajan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மனிதனும் நேர்த்திக்கடனும்
அருமையான தகவல்கள் அடங்கிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு Arrow Sankar

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

விளக்கமான தகவல்கள் ஐயா...

கரந்தை ஜெயக்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தகவல்கள் அருமை

G.M Balasubramaniam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அறிவுக்கும் உணர்வுகளுக்கும் இடையே நிகழும் பல்வேறு வாதங்களில் அறிவு தோற்று உணர்வு வெல்வது வருத்தம் தரும் நிகழ்வு. .

Arrow Sankar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வணக்கம்.நீங்கள் தந்த கருத்துரையின் விளக்கம் எனக்கு புரியவில்லை . விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்.

‘தளிர்’ சுரேஷ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்! நன்றி!

Arrow Sankar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@‘தளிர்’ சுரேஷ்நன்றி

Arrow Sankar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@‘தளிர்’ சுரேஷ் நன்றி சுரேஷ்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms