வேலை பளு காரணமாகவும் கோடைக்கால விடுமுறை மற்றும் நண்பர்களை சந்திக்க அதிகமான
நேரத்தை ஒதுக்கியதானாலும் பிளாக்கில் வரவும்,எழுதவும் இயல முடியவில்லை.
மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக்கூட எளிதில் தீர்த்துவிட முடியும். பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்னவென்றால் உடல் பருமன், தொண்டைப்புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பதுதான். ஆனால் இதில் இவற்றைத் தவிர, இன்னும் பலருக்கும் தெரியாத நன்மைகள் நிறைந்துள்ளன. எலுமிச்சையானது உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் மிகவும் சிறந்தது. இப்போது எலுமிச்சையை சாப்பிட்டால், எந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று அறிந்தும், தெரிந்தும் கொள்ளலாம்.
சரியான குடலியக்கத்திற்கு...

தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்படுவதோடு, குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக் களும் வெளியேறிவிடும்.
தொண்டை புண்ணை சரிசெய்ய...
எலுமிச்சையில் ஆன்டி பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை ஜுஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகிவிடும்.
இளமையை தக்க வைக்க...
எலுமிச்சையில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் டுகள் நிறைந்துள்ளதால், அது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...
எலுமிச்சையில் வைட்டமின் `சி' அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளதால், அதனை சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இதனால் எந்த விதமான நோய் தாக்கு தல்களில் இருந்தும் தப்பிக்கலாம்.
கொழுப்பை குறைக்க...
எலுமிச்சை ஒரு சிட்ரஸ் பழம். அத்தகைய பழத்தின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களானது கரைக்கப்படும். எனவே உடல் எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.
குமட்டலை போக்க...
சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக்கலாம்.
வாத நோயை சரிசெய்ய...
எலுமிச்சையில் நீர்ப் பெருக்கப் பொருள் அதிகம் உள்ளது. அதாவது, எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். எனவே வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜுஸ் குடித்து வந்தால் நல்லது.
புற்றுநோயை தடுக்க...
அனைவருக்குமே எலுமிச்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது என்று தெரியும். அதே போன்று இதில் பல வகையான புற்றுநோயை தடுக்கும் பொருளும் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் எலுமிச்சையை ஜுஸ் போட்டு குடித்து வந்தால், புற்றுநோயின் அபாயத்திலிருந்து விடுபடலாம்.
தலைவலியை போக்க...
உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் இருந்தால் வருவது தான் தலைவலி. இத்தகைய தலைவலியைப் போக்குவதற்கு, எலுமிச்சை டீ மிகவும் சிறந்ததாக இருக்கும்.
நாடாப் புழுக்களை அழிக்க...
குழந்தைகளுக்கு வயிற்றில் நாடாப்புழுக்களானது இருக்கும். இவ்வாறு வயிற்றில் புழுக்கள் இருந்தால், வயிற்று வலி மற்றும் வழக்கத்திற்கு மாறாக மலம் கழிக்க நேரிடும். இத்தகைய பிரச்சினையை போக்குவதற்கு எலுமிச்சை மிகவும் உதவியாக இருக்கும். எப்படியெனில் எலுமிச்சையில் புழுக்களை அழிக்கக்கூடிய அளவில் சக்தியானது உள்ளது.
உணவை செரிப்பதற்கு...
அனைவருக்குமே செரிமானப் பிரச்சனை அவ்வப்போது வரும். இவ்வாறு செரிமானப் பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு டம்ளர் எலுமிச்சை ஜுஸில், உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் குணமாகி விடும்.
உடலை சுத்தப்படுத்த...
தினமும் உடலில் நச்சுக்களானது பலவாறு உள்ளே நுழையும். உதாரணமாக, ஜிங்க் உணவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவற்றின் மூலம் நுழையும். ஆனால் அத்தகைய நச்சுக்களை போக்கும் சக்தி எலுமிச்சைக்கு உள்ளது. எனவே தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜுஸ் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளி யேறிவிடும்.
பற்களை ஆரோக்கியமாக வைக்க...
எலுமிச்சை சாற்றில், உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஊற்றி, அதனை வாயில் ஊற்றி கொப்பளித்தால், பற்களில் உள்ள கறைகள், பாக்டீரியாக்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கி, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
காயங்களை குணப்படுத்த...
உடலில் ஏதேனும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், அப்போது அதனை குணமாக்குவதற்கு, அன்த இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை தடவினால், காயங்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, காயங்கள் எளிதில் குணமாகிவிடும்.
முகப்பருவை போக்க...
சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகளை போக்குவதற்கு ஒரு சிறந்த பொருள் என்றால் அது எலுமிச்சை தான். எனவே தான் சரும பராமரிப்பில் எலுமிச்சை அதிகம் சேர்க்கப்படுகிறது.
கல்லீரல் பிரச்சனைக்கு...
எலுமிச்சையை தினமும் உணவில் சேர்த்தால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பிறப்புறுப்பை சுத்தமாக்க...
பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்த பயமாக உள்ளதாப அப்படியெனில், கெமிக்கல் இல்லாத இயற்கைப் பொருளான எலுமிச்சையைக் கொண்டு சுத்தம் செய்தால், பிறப்புறுப்பில் எந்த ஒரு பக்க விளைவும் வராமல் இருக்கும்.
கண் பிரச்சனையை போக்க...
எலுமிச்சையில் ரூடின் என்னும் பொருள் உள்ளது. ஆகவே எலுமிச்சை உண வில் சேர்த்தால், கண் பார்வை கூர்மையாவதோடு, ரெட்டினாவில் உள்ள பிரச்சினைகளையும் சரிசெய்யலாம்.
சிறுநீரகக் கற்களை கரைக்க...
எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. எனவே சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்கள், எலுமிச்சை ஜுஸை அவ்வப் போது குடித்து வந்தால், சிட்ரிக் ஆசிட்டானது சிறுநீரகக் கற்களை கரைத்துவிடும். இதுபோன்ற எண்ணற்ற மருத்துவ குணாதிசயத்தை தன்னகத்தே கொண்டுள்ள எலுமிச்சையை நாமும் பல்வேறு பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிப்பதோடு நோயின்றியும் வாழ்வோம்..

10 கருத்துரைகள்:
ரொம்ப யூஸ்புல் அண்ணா. நன்றி
Very Nice Topic and very Useful. I learnt about lemon.Thank you sir
i am learning tamil from you by good topics.Please send your pathikam book for my mother
Thank You Mr.Koos. I already sent PATHIKAM BOOK(வளமுடன் வாழ 20 பதிகங்கள்) to your mother id by mail.She received that and acknowledged the same.
:((
Very Useful Sir. Thanks for the Tips
அருமையான பதிவு.
நன்றி.
Very Useful tips for all.please send this post in english to my email id
thank you very much. (romba nanri sir ) ------>>>
Can you publish the "இயற்கை தரும் ஆரோக்கியம்” book
Post a Comment